ஒருகோடி ஆகமங்கள் எல்லாம் உணர்ந்தும் பெருகுதவம் சித்தியெல்லாம் பெற்றும் – குருவருளால் வைத்த படியிருக்க மாட்டாத மாந்தர்க்குச் சித்த சல னம்மாந் தினம்
சிவபோகசாரம் – ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்
கருத்து – குருவழி நடக்க இயலா மாந்தர்கள் கரை ஏறுதல் கடினம் என்பதை உணர்த்தும் பாடல்.
பதவுரை
இந்து சமயத்தின் மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதும், சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்ற ஒருகோடி ஆகமங்களால் உணர்த்தப்பட்ட எல்லாவற்றையும் உணர்ந்தும், பெருகக் கூடியதான தவம் செய்து சித்தி எல்லாம் பெற்றும் குருவருள் வாய்க்கபெற்றும் அவர் கூறியபடி நடக்க இயலாத மாந்தர்களுக்கு அவர்களுடைய சித்தம் தினம் தினம் சலனம் கொள்ளும்.
வைத்தநெறி நூலும் வகுத்துரைத்துப் – பத்தர் குருலிங்க முண்மையெனக் கூறிநீ டின்பம் தருமன்பை யென்சொல்வேன் தான் பொன்னாடர் இந்திரனும் பூமகனும் மாதவனும் எந்நாடும் எந்நாளு மேநாடித் – துன்னாத வேத முடிவின் விளங்கும் ஒளிஉயிரின் போத முடிவில் பொருந்துமொளி முதலாக நின்று முகிழ்த்த உலகின் விதமான எல்லாம் விரித்தும் – திரமாக ஊர்பேர் உருவமிவை ஒன்றுமிலன் என்றாலும்
பஞ்சாக்கரப் பஃறொடை – பேரூர் வேலப்ப தேசிகர்
கருத்து – சிவனின் பெருமைகளை கூறி அவன் அருளும் பேரின்பத்தையும் அதற்கு காரணமான அன்பையும் உரைக்க இயலாது என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
பொன்போன்ற நாட்டினை ஆளும் இந்திரனும், மலர்மேல் வீற்றிருக்கும் ப்ரம்மாவும், மாதவனும் உன்னை அறிவதற்காக நாள், இடம் என்று தேடியும் உன்னை அறிய இயலவில்லை; செறுதலை உடைய வேதத்தின் முடிவாக விளங்கக்கூடியதும் உயிரின் ஒளி போன்றதும், ஞானத்தின் முடிவாக நிற்கும் ஒளிவடிவாகவும் மொட்டு போன்றதும் ஆன இந்த உலகில் விதம் விதமாக விரிந்து எங்கும் நின்றும் நிலையான ஊர் பேர் இல்லாமலும், உருவம் இல்லாமலும் எதுவும் நீ இல்லை எனும் படியாக இருந்தாலும் முடிவானது என்பதைக் கூறும் சைவ சித்தாந்த நெறி நூலும், அதன் பொருளை உரைத்து இவன் பக்தன் என்று குருலிங்க உண்மையை கூறி நிலைத்த இன்பத்தை தரும் உன் அன்பை என்ன என்று சொல்வேன் யான்?
கருத்து – உயிர்களின் உடலுக்கும் மெய்ஞானத் தன்மைக்கும் இருக்கும் தொடர்பை விளக்கும் பாடல்.
பதவுரை
தனு எனப்படுவதான இந்த உடலில் உயிர்கள் மெய்ஞானம் ஆகிய தன்னிறைவை அடைந்தப்பின் நில்லாது; உடலை விட்டு உயிர் துண்டித்தல் என்பதைத் தாண்டி உயிர்களுக்கு வேறு எந்த தொடர்பும் இல்லை என்பதைக் காட்டுவதால் ஆவி எனும் உயிர் என்பது நிரந்தரமானது இல்லை என்பதை காணலாம்.
விளக்கஉரை
தனு – உடல், வில், தனுராசி, சிறுமை, நான்கு கரங்கொண்ட நீட்டலளவை, எருத்தின் முக்காரம், மார்கழி மாதம், ஊன்றிப் பேசுகை, தக்கன் மகளும் அசுரர்க்குத் தாயுமான காசிபர் மனைவி
கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய் குறியறிந்து பூசை செய்து பின்பு கேளாய் மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய் மைந்தனே இவளை நீபூசை பண்ணத் தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய் திறமாகப் புவனையைநீ பூசை பண்ணு ஆறியதோர் யாமளையா றெழுத்தை கேளாய் அவளுடைய பதம் போற்றிப் பூசைபண்ணே
சட்டைமுனி ஞானம் – சட்டைமுனி
கருத்து – வாலை, திரிபுரை, புவனேஸ்வரி ஆகியவர்களின் மூல மந்திர எழுத்துக்களின் எண்ணிக்கையும், உபதேச முறைகளையும் கூறும் பாடல்.
பதவுரை
யாம் முன்னுரைத்த வாலையின் மூன்றெழுத்து மந்திரத்தை உரைத்த குறிப்பறிந்து அதில் கூறப்பட்டவாறு பூசை நிகழ்த்து. அதன் பின் திரிபுரையின் எட்டெழுத்து மந்திரம் அறிந்து அவளை பூசை செய்வாயாக. இப்பூசனைகளை நீ சரியான முறையில் நிகழ்த்துவதால் புவனேஸ்வரியின் மூலமது கிட்டும். அவளை முறைப்படி பூசை செய்து அதன் தொடர்பாக ஆற்றுப்படுத்தலை தரும் பார்வதி என்றும் காளி என்றும் அழைக்கப்படும் ஆறு எழுத்துக்கு உரித்தானவள் ஆகிய யாமளையயின் திருவடிகளைப் போற்றி பூசை செய்வாயாக.
விளக்கஉரை
வாலையின் மூன்றெழுத்து அகார , உகார , மகாரத்தின் குறி எது என்றுணர்ந்து பூசை செய்வாய் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. எல்லா தெய்வங்களுக்கும் தனித்தனி பீஜங்களும் அவை சார்ந்த எழுத்துக்களும் இருப்பதால் இக்கருத்து விலக்கப்படுகிறது.
வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை வாய் கொண்டு சொல்பவர் யார் காணும் மேல் ஒன்றும் கீழ் ஒன்றும் மத்திமமுங்கூட்டி விரைந்து பாரடி ஞானப் பெண்ணே!
வாலைக் கும்மி – எனும் பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது
திரிபுரையின் எட்டெழுத்தை (தமிழில் எட்டுக்கு அ என்பதே குறி) என்றும், எட்டும் இரண்டுமாகிய ( இரண்டுக்கு தமிழில் உ என்பதே குறி ) இதை உணர்ந்தால் வாலைத்தாயின் இருப்பிடம் தெரியும் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டவாறே திரிபுரைக்கும் தனியே பீஜங்கள் இருப்பதாலும் குரு முகமாக பெறவேண்டி இருப்பதாலும் இப்பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
யாமளை – பார்வதி, காளி
பதவுரை எழுத உதவி செய்த மதனா அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
ஈசனாரின் நிவேதனத்திற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த நெற்களஞ்சியத்தை வெள்ளம் அடித்துப்போகாமல் வேலிகட்டி காத்த தலம்
தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள தலம்
மண்டபங்கள் கொண்ட கோயில் – ஊஞ்சல் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வசந்த மண்டபம், சங்கிலி மண்டபம், சோமவார மண்டபம், நவக்கிரக மண்டபம், மகா மண்டபம்
வேதங்கள் மூங்கில் மரங்களாக இருக்க, ஈசனார் அவற்றின் அடியில் லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கும் தலம்
ஈசன், அம்பாள் இருவரும் கிழக்கு நோக்கி திருக்காட்சி
காந்திமதியம்மைக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்பட்டு மறுநாள் காலை பூஜை வரை அதே கோலத்தில் திருக்காட்சி
வழிபாட்டு முறைகள் – காந்திமதி அம்மைக்கு காரண ஆகமம், நெல்லையப்பருக்கு காமீகஆகமம்
சிவன் சந்நிதிக்கு செல்லும் வழியில் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள அற்புதமான இசை தரவல்ல இசைத்தூண்கள்
மூலவர்கள் – மகாவிஷ்ணு வழிபட்ட சிவலிங்கத்திருமேனி, நெல்லையப்பர் சந்நிதி அருகில் சற்று தாழ்வான சந்நிதியில் அமைந்துள்ள ஆதி மூல சிவலிங்கத்திருமேனி
சிவனின் அபிஷேக தீர்த்தம் விழும் கோமுகி தனித்துவமாக மேற்கு நோக்கி
பஞ்ச தட்சிணாமூர்த்திகள்
சிவனாரின் சந்நிதி வலப்புறம் உள்ள கோவிந்தராஜப் பெருமாள் பெருமாள் கிடந்த கோலத்தில் சேவை. பெருமாளின் வலது கை சிவலிங்க வழிபாடு செய்யும் அமைப்பு. மார்பில் சிவலிங்கம் அடையாளம் உள்ள உற்சவ பெருமாளின் கையில் தாரைப் பாத்திரத்துடன் காட்சி
கார்த்திகை மாதத்தில் அதிகாலை நான்கு மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு அனைத்து தெய்வங்களுக்கும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன
அனவரத லிங்கம் – இஸ்லாமியர் அன்வர்கான் என்பவரால் வழிபடப்பட்டது.
உச்சிகால பூஜையின் போது காந்திமதியம்மையே நேரில் வந்து சிவனாருக்கு அமுது பரிமாறி உபசரிப்பதும், பின் அந்த அமுதே அம்மைக்கும் நிவேதனமாக படைக்கப்படுவதும் இத்தலத்தில் தினமும் நடக்கும் சிறப்பான உற்சவம்..
அகத்தியர் சிவனாரின் திருமணக்கோல திருக்காட்சி தரிசித்த தலங்களில் இத்தலமும் ஒன்று
அகத்தியர் பிரதிஷ்டை செய்தது சால்வடீஸ்வரர் சிவனாரின் சந்நிதி
இத்தல விநாயகர் முக்குறுணி விநாயகரின் வலது கையில் மோதகம்; இடது கையில் தந்தம் என மாற்றி வைத்து அருள்பாலிப்பு
வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள தாமிரத்தகடுகளால் வேயப்பட்டுள்ள தாமிரச்சபையின் மேற்கூரை
தலமரமான மூங்கில் தாமிரச்சபைக்கு அருகில்
அற்புத வேலைப்பாடுகள் நிறைந்த, கீழே மரத்தாலும், மேலே தாமிரத்தாலும் செய்யப்பட்டு ஏழு அடுக்குகளுடன் திகழும் தாமிர சபை.
நடராஜர் தாமிர சபாபதி. சபையின் பின்னால் உள்ள நடராஜர் திருவடிவம் சந்தன சபாபதி. சபையின் உள்ளே ருத்ரவிஷ்ணு , பேதங்கள் , ரிஷிகளின் வடிவங்கள்.
இரு துர்க்கையம்மன் சந்நிதிகள். மான் , சிங்கம் மற்றும் தோழியுடன் கூடிய மகிஷாசுரமர்த்தினி தெற்கு நோக்கியும், பண்டாசுரமர்த்தினி மஞ்சன வடிவாம்பிகை என்ற பெயருடன் அம்பாள் சந்நிதியில் வடக்கு நோக்கியும் திருக்காட்சி
இருபத்தி ஐந்து மூர்த்தத்தில் ஒரு வடிவமான ஜ்வரஹரேஸ்வரருக்கு தனி சந்நிதி
பிள்ளைத்துண்ட விநாயகர் எனும் பொல்லாப்பிள்ளையாருக்கு தனி சந்நிதி
நாயன்மார்கள் சந்நிதி அருகில் தாமிரபரணி நதியின் பெண் வடிவம். சித்ரா பௌர்ணமி , ஆவணி மூலம் , தைப்பூசம் ஆகிய நாட்களில் திருமஞ்சனத்திற்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் கொண்டு செல்லப்படுகிறது
சிவகாமியுடம் கூடிய அக்னி சபாபதி என்று போற்றப்படும் நடராஜர் சந்நிதி (மற்றொன்று)
நவக்கிரக சந்நிதியில் வடக்கு நோக்கி காட்சி தரும் புதன்.
வியாழன்தோறும் தங்கப்பாவாடை சார்த்தப்படும் காந்திமதியம்மை தனிச்சன்னதியில் நின்ற கோலத்தில் திருக்காட்சி.
அம்பாள் சந்நிதி முன்புள்ள மண்டபத்தில் உள்ள இரு தூண்கள் இசைத்தூண்களான அமைப்பு.
அம்பாள் சந்நிதி முன்பு கங்கையும், யமுனையும் துவாரபாலகிகளான வடிவமைப்பு
வேத கால ரிஷியும், உத்தாலக ஆருணியின்(தத்துவமசி என்ற மகாவாக்கியத்திற்கு விளக்கும் அளித்தவர்) மகனும் சீடரும் ஆனவரும், பிரம்ம வித்தையை குரு மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும் என உண்மையை உலகிற்கு உணர்த்தியவரும் ஆன சுவேதகேது தனது எமபயம் நீங்கப்பெற்ற தலம்
ஆயர்குல ராமகோனாரும், முழுதும் கண்ட ராமபாண்டியனும் சிவனாரின் திருக்காட்சி பெற்ற தலம்
உலகமாந்தர் கடைபிடிக்கவேண்டிய 32 அறங்களை உலகுக்கு உணர்த்திய தலம்
சக்தி பீடங்களில் இத்தலம் காந்திசக்தி பீடம்
பிரதோஷத்தின் போது அபிஷேக ஆராதனைகள் ஈசன் மற்றும் அம்பாள் இருவரின் சந்நிதிகளின் முன்புள்ள நந்திகளுக்கும் செய்யப்படுவது தனி சிறப்பு
நல்லனவற்றை விரும்பும் நன்நெஞ்சமே! இறைவனின் திருநாமத்தைச் சிந்தனை செய்வாயாக; அந்த திருநாமமானது மருந்தாக இருந்து நோயைத் தீர்க்கும்; மந்திரமாக விளங்கி அச்சத்தைப் போக்கும்;. மறுமையில் நற்கதி தரும்; மற்றும் உயிர்களின் துயர் கொடுமாறு அதன் பயன்கள் யாவும் தரும்; போக்கமுடியாத துன்பத்தைப் போக்கும்; அப்படிப்பட்ட அத்திரு நாமத்திற்குரிய இறைவன் குளிர்ச்சிமிக்க சோலையில் கொன்றை மரங்கள் பொன்னிறப் பூக்களை உதிர்க்கக்கூடியதும், நெருங்கியுள்ளதும், பசுமையான அழகிய செருந்தி மரங்கள் செம்பொன் போன்ற மலர்களைப் பூக்கின்றதும் ஆன திருநெல்வேலியில் வீற்றிருந்து அருள்கிற அருட்செல்வர் ஆவார்.
பாடியவர் திருஞானசம்பந்தர் திருமுறை 3 பதிக எண் 92 திருமுறை எண் 8
நறுமணம் கமழும் சோலைகளில் பெண் குரங்குகள் தாவுதலால் தேன்துளிகள் சிந்துகின்றதும், பூக்களைக் கொண்ட நீர்த் துறைகளை உடையதும் ஆன திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வராகிய சிவபெருமான், பெருமையையுடைய கயிலை மலையை அந்நாளில் பெயர்த்தெடுத்த இராவணனின் தலைகளும், தோள்களும் நெரியும் வண்ணம், சிறந்த மலர் போன்ற திருவடியின் ஒரு விரல் நக நுனியை ஊன்றி வருத்தினார். அவரை வழிபடுவீர்களாக.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
ஒன்பதாம் திருமுறை – திருவிசைபா – திருப்பல்லாண்டு – கருவூர்த் தேவர்
கருத்து – அன்பர்களின் அக அனுபவங்களையும் பெரும்பற்றப் புலியூரின் பெருமைகளையும் கூறும் பாடல்.
பதவுரை
மேலான அன்பினால் கண்களில் பனித்துளிர்ப்பது போல் கண்ணீர் அரும்ப, கைகள் குவித்து, ‘எனக்குப் பற்றுக் கோடு ஆனவனே! ஓலம்’ என்று கதறி, எல்லா எலும்புகளும் அன்பினால் உருகும் அடியார்களுடைய கூட்டத்தில் அடியேனையும் இணைத்துக் கொள்ளும் எனும்படியான ஈசனுடைய திருக்கோயில் எதுவெனில் தேன் உண்டு தெளிந்த வண்டுகள் பலப்பல பண்களைப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருப்பதானதும் குளிர்ந்த மலர்களைப் பரப்பிய மேலிடத்தில் அரும்பும் சண்பகம் நிறைந்த சோலைகளை உடையதும் ஆன பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருவளர் திருச்சிற்றம்பலமே ஆகும்.
Researchers from the Moscow Institute of Physics and Technology teamed up with colleagues from the U.S. and Switzerland and returned the state of a quantum computer a fraction of a second into the past. They also calculated the probability that an electron in empty interstellar space will spontaneously travel back into its recent past.
We have artificially created a state that evolves in a direction opposite to that of the thermodynamic arrow of time
The probability to observe an electron “smeared out” over a fraction of a second spontaneously localizing into its recent past. It turned out that even if one spent the entire lifetime of the universe — 13.7 billion years — observing 10 billion freshly localized electrons every second, the reverse evolution of the particle’s state would only happen once. And even then, the electron would travel no more than a mere one ten-billionth of a second into the past.
எனக்கு 102 வயசு ஆகுது. என் புருசனுக்கு 106 வயசு ஆகுது. Reverse Time ஐ பயன்படுத்தி பழைய காலத்திற்கு போய் எம் புருசனை வேண்டாம்னு சொல்ல முடியுமா?
ஏங்க, உங்க கிட்ட காய்கறி வாங்கும் போது கொஞ்சம் கொத்தமல்லி வாங்கிகிட்டு வாங்க அப்டீன்னு எத்தனை தடவ சொல்றது.
நீ சொல்லவே இல்லையே.
Reverse Time ஐ பயன்படுத்தி பழைய ஹிஸ்டரிய எடுத்துப்பாருங்க, சொல்லி இருக்கனா இல்லையான்னு தெரியும். ( இதுக்கு எதுக்கு ஹிஸ்டரி என்று கூறியபடியே நகர்ந்தார் அந்த கணவர்)
என்னா டாக்டர் ஒரு தலவலிக்கு எக்ரே எடுத்துட்டு23 கோடி பில் போட்டு இருக்கீங்க?
இங்க பாருங்க, நாங்க Reverse Time ஐ பயன்படுத்துறோம். அதுல ஆதார் கார்டு லிங்க் செஞ்சு வச்சி இருக்கோம். அதிகாரப் பூர்வ தகவல் படிதான் இந்த பில். அதிகார பூர்வமற்ற தகவல் படி பில் போட்டா உங்க சொத்து கணக்கின்படி இன்னும் ஜாஸ்தியா வரும். எட்டி வசதி?
சார், இப்ப இருக்கிற லோன் தவிர எனக்கு இன்னும் கொஞ்சம் லோன் வேணும், என்ன செய்யலாம்?
10% கமிசன் கொடுங்க. 5% பேங்குக்கு, எனக்கு 5%. Reverse Time ஐ பயன்படுத்தி அங்க போய் நீங்க எடுத்து இருக்கிற லோன் பணத்தை மாத்திடலாம்.
வர வர நம்ம அம்மாவும் அப்பாவும் சரியே இல்லடா. எப்பபார்த்தாலும் திட்டிகிட்டே இருக்காங்கடா.
என்ன செய்யலாம் டி.
Reverse Time ஐ பயன்படுத்தி அந்த காலத்துகுப் போய் நம்ம அம்மாவையும், அப்பாவையும் மாத்திடலாம் டா.
கருத்து – ஐயாறு திருத்தலத்தை நினைத்து வாழ்ந்தால் பிறவித் துன்பம் நீங்கி அமரர் எனும் தேவர்களின் உலகை ஆளுதல் கைகூடும் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
நிலையாமை உடைய பொருள்களை பொய்த் தன்மை நீங்காதவாறு சிறப்பித்துப் பேசியும், பொழுது புலர எழுந்தது துன்பம் கொள்ளாமல் தொழில் செய்கிறோம் என்று எண்ணி பொருளைத் தேடி இன்பம் உடைய மனத்தவர்களாக கருதி வாழ்பவர்களே! விஷத்தை அமுதம் போல் கொண்டவர் ஆன நீலகண்டரும், நீண்ட செஞ்சடை உடையவரும், நெற்றிக் கண் உடையவரும் ஆகிய சிவபெருமான் விரும்பி உறையும் தலமான ஐயாறே ! ஐயாறே ! என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராயின் பிறவித் துன்பம் நீங்கி அமரர் எனும் தேவர்களின் உலகை ஆளுதல் கைகூடும்.
விளக்கஉரை
இத்திருத்தாண்டகம், திருவையாற்றை எடுத்து ஓதி அருளியது.
கையாறு – செயலறுகை, துன்பம்
கரணம் – செய்கை, இயக்கம், தொழில்
நெய்யாடுதல் – எண்ணெய் பூசி மங்கலநீராடல், நெய்பூசுதல்
அல்லல் – பிறவித்துன்பம்
நெய்யாறா ஆடிய – ‘நெய்யை ஆறுபோல் ஆடியவரும்’ என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருத்து – அனைத்திலும் நீக்கமற நிறைந்து உயிர்க்குயிராய்த் நின்று இருக்கும் உயிர்களை சிவரூபமா காணுதலை கூறும் பாடல்.
பதவுரை
சிவம் சத்தி நாதம் விந்து சதாசிவன் மயேசுரன் ருத்திரன் விஷ்ணு பிரமா மற்றுமுள்ள வடிவுகள் எல்லாம் தானே ஆகின்ற சிறந்த சிவசக்தி வடிவே தன்னுடைய வடிவாகி, வேலை கொள்வானிடத்தில் வேலை செய்பவன் நடு நடுவே இளைப்பு கண்டு இளைபாறுதல் போல் இந்த புவனியிலே அனுபவிக்க தக்க அளவில் இருக்கும் வினையின் ஒரு பகுதியை அனுபவிக்கச் செய்து மலத்தில் இருந்து துயரம் தீரும் அளவில் மாயையின் காரியத்தை ஒடுக்கி, பின் உண்டாக்கி, அந்த வழியில் நின்று கன்மங்களை தொலைப்பிக்கச் செய்து அதன் கடுமையைக் குறைத்து காப்பவனும், ஆணவ மாயை கண்ம மலங்களைப் பிடித்துக் கிடக்கும் ஆன்மாக்களையும் அந்த ஆன்மாக்கள் கொண்டிருக்கும் சஞ்சீதம், பிராப்தம் மற்றும் ஆகாமிய வினைகளையும் அறிந்து அதனை அறிய காரணமாண மாயா காரியமாகிய உடலும் தத்துவங்களும் கொண்டு அவைகளை அனுபவிக்கச் செய்வதான பரமேசுரனின் வடிவு பரையாகும்; இவ்வாறு உயிர்க்குயிராய்த் திருவடி ஞானமாய் நின்று அறிவிப்பதைத் திருவருளைக் காணுதல் சிவரூபமாகும்.
விளக்கஉரை
பரை – பூட்டியின் பூட்டி, ஆறாம் தலைமுறை மூத்தப் பெண், சிவசத்தி, ஒரு அலகு
கோபம் கொண்ட அசுரர்களின் முப்புரத்தையும் செந்தீயினால் வேகுமாறு எரித்த சங்கரனே, உன் சடையினில் தங்கியுள்ள இனிமையத் தரத்தக்க கங்கையை இடபாகத்தில் இருக்கும் பாகம் பிரியாத மலைமங்கை என அழைக்கப்படும் உமாதேவியார் காணநேர்ந்தால் நீ என்ன செய்வாய்?
விளக்கஉரை
`காணின் என் செய்தி` – `நாணித் தலை குனிவை போலும்` எனினும், `உயிர்களின் நன்மைக்காக அன்றிப் பிறிதொன்றையும் செய்யாதவன்நீ` என்பதை உணர்த்தும். `இதுவும் ஒரு நன்மைக்கே` என்பது உணர்ந்து அவனும் எதுவும் செய்யப் போவதில்லை; நீயும் நாணுதற்குக் காரணம் இல்லை` என்பது இப்பாட்டின் உள் உறையும் சிறப்பு. (வட மொழியில் – நிந்தாத் துதி, தமிழில் பழிப்பது போலப் புகழ்தல்)
திருக்குடந்தை ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் – திரு மீனாட்சிசுந்தரம் பிள்ளை
கருத்து – மங்களாம்பிகையையின் அருட் சிறப்புகளைச் சொல்லி பிள்ளைத்தமிழில் அழைக்கும் பாடல்.
பதவுரை
இப்பிரபஞ்சம் முழுவதிலும் தனக்கு நிகராக எவரும் இல்லாமல் தான் மட்டுமே தனக்கு நிகராக இருப்பவளாகிய தாயே வருக; தன்னால் செய்யப்பட்ட வினைக்களை உரைக்க கண்டால் அதை விலக்கி அவர்களுக்கு அருள்பவளே வருக; உன்னைபற்றிய எண்ணம் கொண்டு உன்னை நினைக்க முற்பட்ட உடன் அவர்களுக்கு திருவடியாக பத முக்தியை அளிப்பவளே வருக; மலர்களால் சூழப்பட்ட காட்டினைப் போன்ற கருங்கூந்தலை உடையவளே வருக; அடி, நுனி என இல்லாமல் எல்லா இடங்களிலும் இனிமையாக இருக்கும் மெய்ஞான கரும்பு போன்றவளே வருக; உண்ணுவதற்கு இனிமையாக இருக்கும் அருள் நிறைந்த கனி போன்றவளே வருக; பருகத் தெவிட்டாமல் இருக்கும் தேன் போன்றவளே வருக; வானம் வரையில் வடிவம் கொண்டிருக்கும் திருவடிவம் கொண்டவளே வருக; பெருமை உடைய வேதங்களின் உட்பொருளாக இருக்கும் செல்வியே வருக; எங்கள் குல தெய்வம் ஆனவளே வருக; ஒரு நிலையில் இருந்து வேறு நிலைக்கு அழைத்துச் செல்லும் நறுமணம் உடைய மானே வருக; இமையாதவர்கள் ஆகிய தேவர்களின் துன்பத்தை நீக்குபவளே வருக; வேதங்களும் மறைகளும் ஒலிக்கும் குடந்தையில் வீற்றிருப்பவளே வருக வருக என்று மங்களாம்பிகையை பிள்ளைத்தமிழில் அழைக்கிறார்.
கருத்து – ஆக்ஞையில் சோதி வடிவான அன்னையைக் கண்டவர்களை காலன் அணுகான் என்பதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
பிராணன் தனது வாகனமாக மூச்சுடன் வா (உள்மூச்சு- காற்றுத் தத்துவம்) என்றும் சி(வெளி மூச்சு – அக்னி தத்துவம்) என்றும் கூடி குண்டலினி அக்னியை மேலே எழுப்புகிறது. அவ்வாறு எழுந்த அக்னி வ என்னும் காற்றுத் தத்துவத்தைக் குறிக்கும் லலாட சக்கரத்திலிருந்து அமிர்தத்துடன் விசுத்தி சக்கரத்தில் சேகரிக்கப்படுகிறது. (சில நூல்கள் அனாகத சக்கரமான இதயம் அதைக் குறிக்கின்றது என்றும் கூறுகின்றன). இவ்வாறு பெறப்படும் அமிர்தம் நமது விசுத்தியிலும் இதயத்திலும் நின்று நம்மை காலத்தைக் கடக்க வைக்கிறது. இவ்வாறு எழும் அக்கியானது குருபதம் எனப்படுவதாகிய ஆக்ஞையில் உணர்வு செல்லும்போது ஞானம் ஏற்படுகிறது. அதனால் ஒருவர் தெளிவுடன் குருபதம் எனப்படும் ஆக்ஞையில் நிற்க வேண்டும். தினமும், மனம் வாக்கு காயங்களால் தூயவராகவும் மனத்தை வாசி எனும் சிவ யோகத்தால் நிறுத்தியவராகவும் இருப்பவர் மேலே குறிப்பிடப்பட்ட பாடல்களில் கூறிய பொருள்களை சேர்த்து உருக்கி எடுத்து பார்க்கும்போது ஆக்ஞையில் அடியவர்கள் விரும்பதை அவர்கள் விரும்புகின்ற அளவில் கொடுப்பவளானவளும், தங்கமேனி கொண்ட தாய் என அழைக்கப்படுபவளும் ஆன சக்தி தென்படுகிறாள். அவ்வாறு தேவியின் தரிசனத்தைப் பெற்றால் உயிர்களை கொல்ல சினம் கொண்டு வரும் காலன் ஓடிப்போவான்.
விளக்கஉரை
வாசி/சிவயோகம் என்பது சித்தர்களின் பிராணாயாம முறை என்பதால் குரு முகமாக செய்முறைகளை அறிக.
கருத்து – சிவனிடத்தில் அன்பு செய்து உய்யும் நெறியைக் கூறும் பாடல்.
பதவுரை
பெரிய நிலவுலகத்தவர்களும், வானுலகத்தில் வாழும் தேவர்கள், சித்தர்கள், அசுரர், தைத்தியர்கள், கருடர்கள், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தர்வர், இயக்கர்கள், விஞ்சையர், பூத கணங்கள், பிசாசர்கள், அந்தரர், முனிவர்கள், உரகர்கள், ஆகாய வாசியர், போக பூமியர் ஆகிய பதினெண் கணங்களும், எங்கள் இறைவனாகிய ஈசனையே `பரம்பொருள்` என எண்ணத்தால் உடன்பட்டும் மனத்தால் நினைத்தும் அவன் திருவடியைக் கண்டு வாக்கால் வாழ்த்தியும் தலையால் வணங்கியும் பயன் பெற முயல்கின்றனர். இதனை நன்கு மனதால் சிந்தித்து அவனிடத்தில் அன்பு செய்யுங்கள்.
விளக்கஉரை
சப்தரிஷிகள் & வாலகில்யர்கள், தேவர்கள், அரம்பையர்கள், அசுரர்கள், தானவர்கள், தைத்தியர்கள், நாகர்கள், கருடர்கள், கிண்ணரர்கள், கிம்புருசர்கள், யட்சர்கள் & யட்சினிகள், வித்தியாதரர்கள், அரக்கர், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், பூத கணங்கள், பிசாசர்கள் என்று வேறு சில இடங்களில் பதினெண் கணங்கள் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருத்து – முருகப் பெருமானின் வடிவே தாமும் எய்தி வாழ்வதாகிய சாரூப வடிவம் வேண்டுதல்.
பதவுரை
சிலம்பு அணிந்த வீரக் கழல்களின் ஒலிகள் எட்டு திசைகளிலும் இருப்பவர்களின் செவிகளில் படும்படியாக ஒலிக்க, பிரமன், ருத்திரன், திருமால் ஆகிய முத்தேவர்களும், பழமையான வேதங்களும் பணிந்து போற்ற, கைகளில் ஏந்திய சூலம், மழு, மான் ஆகிய மூன்றும் பக்குவமாகச் சுழல, ஆதிசேஷனின் படமுடிகள் நெறு நெறு என்று முறிய, நந்தியாகிய வாகனத்தில் திருவடிகளை வைத்திருக்காமல், நடனம் செய்து, அடியார்கள் அரகர என்றும் மனம் உருகி ஜெய ஜெய என்றும் போற்ற, பார்வதியுடன் இணைந்து ஆனந்த நடனக் காட்சியைத் தந்தருளும் பாகராக இருப்பவரான சிவ பெருமான் ஈன்றருளிய குழந்தையே, மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவை ஆன லக்ஷ்மியின் மகளுமான வள்ளியின் நாயகனே, ஆராவாரத்துடன் போர் செய்து வெற்றி கொண்டவனாகிய இராவணின் ஆணவம் அழியுமாறு செய்தவனும் கயிலைமலையில் வீற்றிருப்பவனும் ஆன சிவனுடன் இணைந்து வீற்றிருப்பவனே! தவ நெறிப் பயனாய் பெறப்படுவதும் இருளும் ஒளியும் இல்லாத அழகிய நிலம் எனப்படுவதும் ஒளி வீசும் ஜோதி போன்றதுமான இடமானதும் மூலாதாரம் எனப்படும் ஆகி இடத்தில் இருந்து பிராணன் எனப்படும் இடகலை, பிங்கலை மார்க்கங்கள் அடைபடும்படி செய்து சுழுமுனை வழியாக மூச்சை ஓட்டி, சிவ நெறியில் நின்று, தனித்து நிற்கும் மேலிடத்தே புறத்தில் கூடுதலை நிகழ்த்துதல் போல் அகத்தில் சிவ ஜோதியுடம் கூடி, அவ்வாறு விளங்கும் திருக்கோலத்தில் ஆணவம், மாயை,கண்மம் ஆகிய மும்மலங்களும் உனது புன்னகையில் விளைந்த தீயில் எரிபட்டு அழிய, எனது நல்வினை, தீவினை ஆகிய இரண்டு வினைகளும் தீய்ந்து சாம்பலாக, அதனால் அழகிய உனது திருவருளாகிய உருவத்தில் ஈடுபட்டு, நீயும் நானும் ஒன்றுபடக் கலந்து, அதனால் இவ்வுடல் நிலைபட்டது எனக் கருதும் படியாகப் பொருந்தி, இவன் முருகனுக்கு இளையவன் என்று என்னை விரிந்து கூறும்படியான பெரும் பேற்றை அருள்வாயாக.
விளக்கஉரை
அலர் அணி குழல் பொன் பாவை திரு மகள் அமளிப் போரொடு – மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவையும், லக்ஷ்மியின் மகளுமான வள்ளியின் மஞ்சத்திலே இன்பப் போரிடுதலை விரும்புவதோடு என்று சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ‘அமளிப் போரொ டடியவர் கயிலைக் கான‘ எனும் வரிகளே பொருத்தமாக இருக்கும் என்பதாலும், வள்ளி நாச்சியார் இச்சா சக்தி, முருகப் பெருமான் ஞான மூர்த்தி என்பதாலும் பொருள் விலக்கப்பட்டுளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
இருவரும் உருகிக் காய(ம்) நிலை என மருவி – முருகப் பெருமானின் வடிவே தாமும் எய்தி வாழ்வதாகிய சாரூப வடிவம் கொள்ளுதல்
சிவ சுடர் அதனைப் பாவை மணம் என மருவி – சிவ ஜோதியை பொம்மைக் கல்யாணம் போலக் கூடி” என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. மூலாதாரம் பற்றி குறிப்பிட்டு இருப்பதாலும், தவ நெறியால் பெறப்படுவது பற்றி குறிப்பிடப்பட்டு இருப்பதாலும், தவநெறியின் பயன் சிவசக்தி ரூபம் காணல் என்பதாலும் இப்பொருள் விலக்கப்பட்டுள்ளது.
பணாமுடி – பாம்பின் படமுடி; பணாமுடி தாக்க – ‘அநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்து அதிர்ந்து‘ எனும் கந்தர் அலங்கார பாடலுடன் ஒப்பு நோக்கி அறிந்து உய்க.
தேவ ரிளையவ னெனவித் தார – முன்னர் கூறப்பட்ட மும்முனை நாடிகள் கொண்டும் ,
கருத்து – திருவடி காட்டி அருளிய திறத்தையும், பிரிய மாட்டேன் என்று வாக்கு உரைத்ததையும் கூறி அருள் வேண்டி நிற்பதையும் கூறும் பாடல்.
பதவுரை
பெருமானே! சங்கரனே! உனக்கு அடிமையாக இருப்பதற்கு கூட உரிய தகுதி உடையவன் அல்லேன்; இருப்பினும் உன்னை விட்டு நீங்கி ஒருகணமும் தங்கியிருக்கமாட்டேன்; நாயினேன் ஆகிய யான் அதன் தன்மை இன்னதென்றும் அறியமாட்டேன்; மா கருணையினால் பெரிய ஒப்பற்றவனாகிய நீ உன் கழலை அணிந்த திருவடியைப் பார்த்துக் கொள்வாயாக என்று காட்டி உன்னைப் பிரிய மாட்டேன் என்று அருளிச் செய்த உன் திருவருளும் பொய்தானோ?
விளக்கஉரை
பொழுது – மிகச்சிறிய நொடிப்பொழுது
பிரியேன் என்று அருளிய அருளும் பொய்யோ – தாம் வேண்டியும் வாராது பிரிந்து நிற்றல் குறித்தது
திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் (மெய்கண்ட சாத்திரம் – சைவ சித்தாந்தம் )
கருத்து – ஈசன் உலகுயிர்த் தொகுதியாகி, அவைகளே தானுமாகி அதில் இருந்து விலகியும் இருக்கும் முத்திறத்தினை விளக்கும் பாடல்.
பதவுரை
சங்காரம் எனும் மூலகாரணத்தில் அனைத்தையும் ஒடுங்க செய்தும், உலக அழிவு செய்தும், தானே அனைத்தும் சாட்சியாக இருந்து முழு முதற் பொருளாய் இருப்பவனும், படைப்பு ஆகிய சிருஷ்டி கரணத்தில் சக்தியுடன் கூடி இரண்டாகியும், தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையு உணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலா ஆற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை ஆகிய எண் குணத்துடன் கூடியும், சிருஷ்டியில் குறிப்பிடப்பட்ட உலக உயிர் தொகுதியுடன் பிரிக்க இயலாதவாறு கூடியும், உலக உயிர்களின் தன்மை தனக்கு எவ்வகையிலும் தன்னைச் சேராதவாறு தனித்து இருப்பவனும் உயிர்க்கு உயிராய் உள் நின்று உயிரின் தன்மைகளை அறிவித்தலால் வேறாகியும், அதனை அறிவிக்க உதவும்கால் உயிர்களோடு ஒன்றாகியும், உடனாகி இருக்கும் உயிர்க்கு உயிராய் உள் நின்று உயிரின் தன்மைகளை அறிவித்தலால் வேறாகியும், தன் உண்மையினை எக்காலத்தும் தனக்குரிய முறைமையாகக் ண்டிருக்கின்றான் அம்முதல்வன்; அஃது அவனது இயல்பு என்பதனை மாணவனே கண்டுணர்வாயாக.
விளக்கஉரை
சத்தியிடமாய் நின்று இருக்கும் காலத்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றுடன் சூரியன், திங்கள் ஆன்மா எனும் எண்பேருருவினாகி நிற்கின்றான் எனும் சில இடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. சிவனின் குணங்களில் எண் குணம் என்பது பிரதானமானதால் இப் பொருள் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
ஈசனுக்கும் உலக உயிர்த் தொகுதியுடன் கூடிய தொடர்பு பேதம், அபேதம் பேதா பேதம் என்னும் மூன்று வகைப்படும். ‘முதலொன்றாய், மாறாத வெண்வகையாய்‘ எனும் வரிகளால் அபேத நிலையினையும், ‘ஈங்கிரண்டாய்‘ எனும் வரிகளால் பேத நிலையினையும் ‘மற்றிவற்றின் வேறாய், உடனா யிருக்கு முருவுடைமை‘ எனும் வரிகளால் பேதா பேத நிலையும் அறியப்படும்
கருத்து – தாயுமானவர் மனதுக்கு உபதேசம் செய்தல் பற்றிய பாடல்.
பதவுரை
மனமே! சிவப் பரம்பொருள் இங்கு உள்ளது, அங்கு உள்ளது என்று எண்ணாமலும், வீணாக பிறப்பில் கிடந்து உழலுவது போன்ற செயல்களைச் செய்யாமலும், காட்சிப் பொருள்களை மனதால் மாறுபாடு கொண்டு இரண்டு என்று எண்ணாமல் அனைத்திலும் ஒன்றாகி நிற்பது சிவப் பரம்பொருளே என்று எண்ணுவாய் என்றால் யான் உனக்கு அடைக்கலமாவேன்; அதனால் உனக்கு சுகம் உண்டாகும் என மனதுக்கு உபதேசம் செய்கிறார் தாயுமானவர்.
விளக்கஉரை
அருணகிரிநாதரின் சீர்பாத வகுப்பில் கூறப்பட்ட
.. உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ
வுளபடியை யுணருமவ ரநுபூதி ..
எனும் பாடலுடன்
விருப்பு வெறுப்பு, இன்பம் துன்பம் இருள் ஒளி என்ற ‘துவத்துவ’ உணர்ச்சிகளை விலக்கி பார்க்கும் இடமெல்லாம் பரம் பொருளை அன்றி வேறு ஒன்றையும் இல்லா நிர்விகல்ப சமாதி நிலையில் கொண்டுவிடும் எனும் விளக்கத்தோடும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது
தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே கறைபழுத்த துறைத்திங் தமிழின் ஒழுகுகறுஞ் சுவையே அகங்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே எறிதரங்கும் உடுக்கும் புவனம் கடந்துன்ற ஒருவன் திருவுள் ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமே மதுகரம்வாய் மடுக்கும் குழற்காடு ஏந்தும் இள வஞ்சிக் கொடியே வருகவே மலயத் துவசன் பெற்றபெரு வாழ்வே வருக வருகவே
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்
கருத்து – சிறுமி மீனாளைத் தளர் நடையிட்டு வருமாறு அழைப்பதைப்போல அமைந்தப் பாடல்.
பதவுரை
மனிதனின் கற்பனையால் புனையப்பட்டு உருவாக்கப்படும் தெய்வீக அழகு கொண்ட தமிழ்ப் பாக்களின் ஒட்டு மொத்தத் தொகுப்பாகவும், தேன் நிரம்பித் ததும்பும் இனிமைத் தமிழினைக் கொண்டு மாலையாக தொடுக்கப்படது போன்றதும் ஆனவளே, மும்மலங்களில் ஒன்றானதும் முதன்மையானது ஆன ‘தான்’ என்ற அகந்தைக் கிழங்கைக் கிள்ளி எறிபவர்களின் உள்ளத்தில் ஒளிரும் மெய்ஞான விளக்காக திகழ்பவளே, பனி மலைச் சிகரமாகிய இமயமலையில் விளையாடும் இளமையானதும் மென்மையானதும் ஆன பெண் யானைப் போன்றளே, புவனமெல்லாம் கடந்து நின்று அதை தன்னுடைய ஆடையாகவும் அணியும் பரம்பொருள் தன் உள்ளத்தில் ‘அழகு தோன்றுமாறு எழுதிப்பார்த்திருக்கும் உயிர் ஓவியம்’ போன்றவளே, வண்டுகள் தேன் குடித்துத் துயிலும் குழல் காட்டினை ஏந்தும் வஞ்சிக் கொடியே, மலயத்துவச பாண்டியன் பெற்ற பெரு வாழ்வே வருக வருக என்று மீனாட்சியம்மையை குமரகுருபரர் அழைக்கிறார்.
விளக்கஉரை
மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழின் வருகைப் பருவத்தில் இடம் பெறுகிறது இப் பாடல்.
இந் நூல் அரங்கேற்றம் நிகழ்ந்தபோது, குறிப்பிட்ட இப்பாடலின் தருணத்தில், அன்னை மீனாட்சியே சின்னஞ் சிறுமியாக வந்து, மன்னரின் மடி மீது அமர்ந்து இதைத் தலையாட்டிக் கேட்டாள் என்ற பழங்கதை ஒன்று உண்டு.
பிள்ளைத்தமிழ் – தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயாsசாரியர்கள், புலவர் பெருமக்கள், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
தமிழின் ஒழுகுகறுஞ்சுவையே – மொழியின் லயமாக அவனைத் தரிசித்தல்
*கருத்து – மெய்யறிவு நிலை கண்டவர்களை நமன் அணுகான் எனும் பொருள் பற்றிய பாடல்.*
பதவுரை
அடிவயிறு எனப்படுவதாகியதும், கணபதியின் இருப்பிடமானதும் ஆன மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி எனும் சக்தியானது கொல்லனின் உலை போன்ற வெப்பமுடன் அங்கே சிறிய நாகமாக சுருண்ட நிலையில் அமைந்துள்ளது. அந்த சக்தியை எழுப்பி அதை மற்ற ஐந்து நிலைகளான மணிபூரகம், சுவாதிஷ்டானம், அனாகதம், விசுக்தி மற்றும் ஆக்ஞா வழியாக சகஸ்ராரத்திற்குக் கொண்டு சேர்ப்பதையே பிறப்பின் நோக்கமாகக் குறிப்பிடுவர். இதையே சித்தர்கள் பரிபாஷையில் சாகாக் கல்வி, வாசி யோகம், தனையறிதல் எனப் பல்வேறு வகைகளில் உணர்த்துவர். அவ்வாறு குண்டலினி சக்தியை எழுப்பி அதை சகஸ்ராரத்தில் நிலை நிறுத்த வல்லவர்களுக்கு மரணம் என்பது கிடையாது. இதைப் பூடகமாக இவர்களை மாய்ப்பதற்காக அணுகும் எமன் அவர்களின் மெய்யறிவு நிலை கண்டு அந்த முயற்சியை கைவிட்டு அவ்விடத்தினின்று அகலுவான் என்று அழகணி சித்தர் விளக்குகிறார்.
விளக்கஉரை
சித்தர்கள் பரிபாஷையில் வயிறு என்பதை அடிவயிறு என்றும் கருதலாம். இதையொட்டி மூலாதாரம் என பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
விளக்க உரை எழுத உதவி செய்த மதனா அண்ணா அவர்களுக்கு நன்றி.