
பாடல்
உறையுந் தனுவில் உறையும் உயிர்தன்
நிறைவை அறிந்தொருகால் நில்லா – அறையுமுடல்
சேட்டையல்லால் மற்றுயிரின் சீவகமே இல்லையெனக்
காட்டுகையால் ஆவியிலைக் காண்
உபாயநிட்டை வெண்பா – அம்பலவாண தேசிகர்
கருத்து – உயிர்களின் உடலுக்கும் மெய்ஞானத் தன்மைக்கும் இருக்கும் தொடர்பை விளக்கும் பாடல்.
பதவுரை
தனு எனப்படுவதான இந்த உடலில் உயிர்கள் மெய்ஞானம் ஆகிய தன்னிறைவை அடைந்தப்பின் நில்லாது; உடலை விட்டு உயிர் துண்டித்தல் என்பதைத் தாண்டி உயிர்களுக்கு வேறு எந்த தொடர்பும் இல்லை என்பதைக் காட்டுவதால் ஆவி எனும் உயிர் என்பது நிரந்தரமானது இல்லை என்பதை காணலாம்.
விளக்க உரை
- தனு – உடல், வில், தனுராசி, சிறுமை, நான்கு கரங்கொண்ட நீட்டலளவை, எருத்தின் முக்காரம், மார்கழி மாதம், ஊன்றிப் பேசுகை, தக்கன் மகளும் அசுரர்க்குத் தாயுமான காசிபர் மனைவி
- அறைதல் – அடித்தல், பறைமுதலியன கொட்டுதல், கடாவுதல், சொல்லுதல், துண்டித்தல், மண்ணெறிந்து கட்டுதல்,
- ஒலித்தல்
- சீவகம் – இலந்தையின் பிசின், ஏலம், வேங்கை, திருநாமப்பாலை
- ஆவி – வேதியியல் பொருட்கள் காணப்படக்கூடிய மூன்று இயற்பியல் நிலைகளுள் ஒன்று, உயிர், ஆன்மா