அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – குலாமர்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  குலாமர்

பொருள்

  • பணத்திற்கு அடிமையானவர்கள் – உலோபிகள்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை; பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடுபோவதில்லை; இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே!

பட்டினத்தார்

கருத்து உரை

கச்சி ஏகப்பனே!  செல்வமானது, பிறக்கும் போது கொண்டு வந்தது இல்லை. இந்தப் பூவுலகில் பிறந்து மண்ணில் இறக்கும் போது கொண்டு போவதில்லைலை. மனித வாழ்வில் இடையில் செல்வம் எனக் குறிக்கப்படும் இது சிவன் தந்தது என பிறருக்கு கொடுக்க அறியாது இறக்கும் உலோபிகளுக்கு என்ன சொல்வேன்?

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

அழித்தல் தொழில் என்பது என்ன?
தனு முதலியவற்றை மாயையில் ஒடுக்குதல்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

3 thoughts on “அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – குலாமர்”

  1. நிச்சயம் அனுப்புகிறேன்.

  2. I’m learning lot of new words and their meaning from your site. I came across this word in சித்தர் சிவ வாக்கியர் பாடல். ஓரளவுதான் புரிந்தது:

    நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
    கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
    ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம்
    ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே

    When you get a chance , could you please explain the meaning of this stanza? Thank you! 🙏

Leave a Reply