`காமம், வெகுளி, மயக்கம்` என்னும் மூன்று குற்றங்களையும் நான் முற்றிலும் விலக்கி, எனக்குப் பாதுகாவலாய் உள்ள பொருளை நோக்கிக்கொண்டிருந்தேன். அப்பொழுது, அடிக்கப்பட்ட மணியினின்றும் எழும் ஓசை போல, `ஓம்` என்னும் ஓர்ஓசை என் உடம்பினின்றும் எழுந்தது. அவ்வோசையை நுணுகி நோக்கியபோது அதனுள்ளே ஓர் அரியபொருள் வெளிப்பட அதனை நான் அடைந்தேன். இது வியப்பு.
விளக்கஉரை
திருவள்ளுவர். “காமம், வெகுளி, மயக்கம்“* என மூன்றாக்கிக் கூறியதை சாங்கிய நூல் ஐந்தாக கூறும். காமம் – விருப்பம். வெகுளி – சினம்; வெறுப்பு. மயக்கம் – அறியாமை. `வேட்கை` என்பதையும் காமம் ஆக்கியும், `செருக்கு` என்பதையும் மயக்கம் என வகுத்து `பஞ்சக்கிலேசம்` என்பர்.
யோகமார்கத்தால் (தச தீட்சையில் கேட்கப்படும் ஒரு ஒலி) கேட்கப்படும் உந்தியினின்றும் எழுந்த `ஓம்` என்னும் ஓசை இரண்டு மாத்திரையைக் கடந்து தொடர்ந்து ஒலித்தது.
துக்கடா
தளை என்ற சொல் பிணைப்பு என்னும் பொருள்படும்.
செய்யுள்களில் அருகருகே வரும் சீர்களுக்கு இடையேயான தொடர்பு தளை எனப்படுகின்றது. தளை அமைவதற்கு இரண்டு சீர்கள் வேண்டும்.
செய்யுளில் முதலில் வரும் சீர் நிலைச்சீர் எனப்படுகின்றது.
அதை அடுத்து வரும் சீர் வருஞ்சீர் என அழைக்கப்படுகின்றது.
இலங்கை மன்னனாகிய இராவணனின் தலைகளும் தோள்களும் நெரிய, எழுச்சி பொருந்திய அழகிய கால்விரலால் கயிலை மலையிடை மலை போன்ற வலிமையுடன் அழுத்தி அவனை வருத்தமுறுமாறு செய்த சிவபெருமானது இடமானதும், வேதங்களை முறையாகக் கற்றறிந்து ஓதித் துதித்தலோடு புலன்களை வென்ற புகழுடையவர்கள்( முனிவர்கள் ) வாழ்வதும், மாலை அணிந்த சடைமுடி உடைய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாயிருப்பதும் ஆகிய திருப்புள்ளமங்கைத் தலத்தில் விளங்கும் ஆலந்துறைக் கோயில் அதுவேயாகும்.
தேவாரம் – 3ம் திருமுறை – திருஞானசம்பந்தர்
விளக்கஉரை
மனன் – மன்னன்
எழில் – எழுச்சி
விலங்கலிடை – மலையின் அடியில்
புலன்கள் தம்மை வென்றார் – புலன்களாகிய பொறிகளைத் தன்வயமாக்கவிடாமல் வென்ற ரிஷிகள்/முனிவர்கள்/சித்தர்கள்
துக்கடா
சீர் என்பது, யாப்பிலக்கணப்படி, செய்யுள் உறுப்புக்களில் ஒன்று. யாப்பியலில், எழுத்துக்கள் இணைந்து அசைகளும், அசைகளின் சேர்க்கையினால் சீர்களும் உருவாகின்றன. செய்யுள்களில் சீர்கள் சொற்களைப் போலத் தென்பட்டாலும், உண்மையில் சீர்களும் சொற்களும் எல்லாச் சமயங்களிலும் ஒன்றாக இருப்பதில்லை.
செய்யுள்களில் வரும் சீர்கள் ஒன்று தொடக்கம் நான்கு வரையான அசைகளின் சேர்க்கையால் உருவாகின்றன.
திருமூலர் – திருமந்திரம் – இரண்டாம் தந்திரம் – அகத்தியம்
கருத்துஉரை
ஒருகாலத்தில் நிலம் சமனாய் நின்று உயிர்களைத் தாங்காது, ஒரு பக்கம் உயர்ந்தும் மற்றொரு பக்கம் தாழ்ந்தும் புரண்டு அழியும் நிலை உண்டாக, அதனை அறிந்த தேவர்கள் அச்சம் கொண்டு சிவபெருமானிடம் விண்ணப்பித்து முறையிட, அப்பெருமான் அகத்திய முனிவரை அழைத்து, `இருதய வெளியுள் பரஞ்சுடரை எப்பொழுதும் இருத்தி நிற்றலால் அகத்தியன் (அகத் தீயன் – உள்ளொளியைப் பெற்றவன்) எனப்பெயர் பெற்ற முனிவனே, உலகத்தை நிலைநிறுத்த வல்லவன் நீ ஒருவனே; ஆதலால், விரையக் கெடும் நிலை எய்திய நிலத்தில், மேல் எழுந்த இடத்தில் நீ சென்று அமர்ந்து சமன் செய்` என்று அருளிச் செய்தான்; அதனால், இவ்வுலகம் நிலை பெற்றது.
விளக்கஉரை
நடுவுள அங்கி – அகத்திய- இருதயத்தின்கண் உள்ள ஒளியை உடைய அகத்திய` – நடுவு நிலைமை உடைய, ஞானத்தை உடைய அகத்திய` இரு பொருள்கள்
துக்கடா
உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து, நெட்டெழுத்துகளின் அடுக்குகள் அசைகள்.
மனிதர்கள் இறந்த பிறகு உடலைக் கழுவுதல் விளையாட்டே, சுடுகாட்டை அடையும் வரை அவர்கள் அழுகையும் விளையாட்டே, அவர்களை முன்வைத்து (நிலையாமைத் தத்துவங்களைப் பேசி) ஞானத்தைப் பேசுவது விளையாட்டே. குளித்து வீடு வந்ததும் அவைகள் முழுவதையும் மறப்பதும் விளையாட்டே.
விளக்கம்
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு பேரினை நீக்கி பிணம என்று பெயரிட்டு சூரையங்காட்டிடை கொண்டு பொய் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே
எனும் திருமந்திர வரிகள் யாண்டும் ஒப்புமை கொண்டு சிந்திக்கத் தக்கவை.
விளையாட்டுச் சித்தரின் இயற்பெயர் கடேந்திர நாதர்
வாழ்க்கையில் எல்லாவற்றையுமே விளையாட்டாய் எடுத்துக்கொள்ள வேண்டும் அவ்வாறு இல்லாமல் எதனையும் தீவிரமாய் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறும் பாடல்கள் இவை
துக்கடா – அசை பிரிப்பு
செய்யுள்களிலே அமையும் சீர்களின் தன்மை பற்றியும், அச் சீர்கள் ஒன்றுடன் இன்னொன்று சேரும்போது உருவாகும் தளைகள் பற்றியும் அறிந்துகொள்வதற்குச் சீர்களிலே அசைகளை இனங்காணல் அவசியம். இவ்வாறு சீர்களை இனங்கண்டு பிரித்தறிதல் அசை பிரித்தல் எனப்படுகின்றது.
நானென்ற ஆணவத்தை நயந்தறுத்து விடுத்தேன் நன்மைபெற்றுக் குகைதனிலே வாழ்ந்திருக்க அடுத்தேன் தானென்ற கருவமதைத் தணித்து விட்டு வந்தோம் தவமேதான் கதி என்று சரவழியில் உகந்தோம்.
வகுளிநாதரென்னும் மௌனச்சித்தர் பாடல்
கருத்து உரை
நான் எனும் செருக்கை அறுத்தேன். குகைக்குள்ளே நன்மை பெற்று வாழ்ந்தேன். தான் என்னும் கர்வத்தயும் குறைத்துவிட்டு தவமே உரிய வழி என சஞ்சார வழியில் மகிழ்ந்தோம்.
விளக்க உரை
இவருடைய இயற்பெயர் ‘வகுளிநாதர்’
இவருக்கு முன் இருந்த பல சித்தர்களைப் பின்பற்றி 12 பாடல்களைப் பாடியிருப்பது மட்டும் தெரிகிறது.
துக்கடா
சொல் – ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.
மண் உலகு ஆளவும் நினைப்பார், பிறர்பொருள்மேல் ஆசை வைப்பார், வலிமை செய்வார், புண்ணியம் என்பதைச் செய்யார், கடைமுறையில் அலக்கு அழிந்து புரண்டே போவார்; பண் உலவு மொழிபாகர் தண்டலையார் வகுத்த விதிப்படி அல்லாமல் எண்ணம் எல்லாம் பொய் ஆகும்! மௌனமே மெய் ஆகும் இயற்கை தானே!
தண்டலையார் சதகம்
கருத்துஉரை
இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்றான பண்ணென இனிக்கும் மொழியை உடைய உமையை இடப் பக்கத்தில் கொண்டவரான தண்டலையிறைவர், (வினைகளை ஆராய்ந்து) அவரவருக்கு விதிக்கப்பட்ட கட்டளையின் வண்ணமே நடக்கும் அன்றி, நிலவுலகை ஆள நினைப்பவரும், மற்றவர் பொருளுக்கு ஆசைப்படுவோரும், தங்கள் ஆற்றலால் (பிறர்க்குக் கேடு) செய்வோரும், சிறிதும் நன்மை செய்யாதவரும், இறுதியிற் கலக்கமுற்றுக் கெட்டழிவார்கள். அவர்கள் நினைத்தவை யாவும் நடவாமற் போகும். (இவ்வாறான சிவன் அருளை நினைத்துப்) பேசாதிருப்பதே நலந்தரும் தன்மையுடையது.
விளக்கஉரை
அவரவர் செய்யும் வினைக்கேற்பப் பயன்களை இறைவர் கூட்டுவார். ஆகையால் நாம் நினைத்தவாறே எதுவும் முடியாமல் நம் வினையின் பயனை நோக்கி இறைவர் கூட்டியவாறே முடியும். ‘எண்ணமெல்லாம் பொய்! எழுத்தின்படி மெய்’ என்பது.
பழமொழி. பேராசைகொண்டு பிறர்க்குக் கேடு செய்யலாகாது என்பது கருத்து.
‘தண்டலையார் சதகம்’ என்னும் இந்தச் சிற்றிலக்கியத்தினை ஆக்கியவர் படிக்காசுப் புலவர் ஆவார். இந்தத் தண்டலையார் சதகத்தைப் ‘பழமொழி விளக்கம்’ என்றும் சுட்டுவர். நாட்டில் வழங்கி வரும் பழமொழிகள் பல; அவற்றுள் நூறு பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பழமொழியும் ஒவ்வொரு பாடலில் அமையுமாறு நூறு பாடல்களுள் வைத்துப் பாடியுள்ளதனால் இந்நூல் ‘பழமொழி விளக்கம் என்னும் தண்டலையார் சதகம்’ என்று பெயர்பெற்றது.
தொண்டை மண்டலத்தைச் சார்ந்தவர்.
பழமொழி: எண்ணமெல்லாம் பொய்யாம் மௌனமே மெய்யாம்.
துக்கடா
மொழியில் எழுத்தின் ஒலி-அளவை மாத்திரை எனக் கூறும் செய்யுளில் எழுத்துக்கள் சேர்ந்து அசையும் நடைத்தொகுப்பு அசை. யாப்பிலக்கணத்தில் – எழுத்துக்களின் குறிப்பிட்ட, வரையறை செய்த சேர்க்கையினால் உருவாகும் ஓர் அடிப்படை உறுப்பாகும். அசைகள் சேர்ந்தே சீர்கள் உருவாகின்றன.
பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இனிதே; துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே; உற்ற பொலிசை கருதி, அறன் ஒரூஉம் ஒற்கம் இலாமை இனிது.
இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
கருத்து உரை
பிச்சையெடுத்து உண்பவன் கோபம் கொள்ளாதிருத்தல் இனிது. துன்பத்தில் இருந்தாலும் துன்பம் கூறாது இருப்பவனின் பெருமை இனிது. மிக்க பேராசையைக் கொண்டு அறவழியிலிருந்து நீங்காதிருக்கும் உறுதி இனிது.
துக்கடா
பகுக்கப்படாத இயல்பையுடைய சொற்கள் பகாப்பதம் ஆகும். அதாவது ஒரு சடப்பொருளையோ அல்லது கருத்துப்பொருளையோ குறித்து நிற்கும் சொற்கள் பகாப்பதம் ஆகும்.
நிலம், நீர், மரம் – பொயர்ப்பகாப்பதம்
நட, வா, உண் – வினைப்பகாப்பதம்
மற்று, ஏ, ஒ – இடைப்பகாப்பதம்
உறு, தவ, நனி – உரிப்பகாப்பதம்
தினமும் மனதில் நினைத்த மாத்திரத்தில் (எப்பொழுதும்) அதை தரும் சதுரகிரியில் உறையும் அறப்பளீ தேவனே! (ஒருவர்) செய்த உதவியை எக்காலத்திலும் மறவாதவரும், ஒருவர் செய்த கெடுதியை அதனை பொருட்படுத்தாமல் உடனே மறந்தவர்களும், பொருளைக் கொடுக்கவந்தாலும் பிறர் மனைவியின்பால் மனத்தைச் செலுத்தாதவர்களும், கையினாலே கண்டெடுத்த பொருளைப் பொருளுக்கு உரியவரிடம் கொண்டுபோய்க் கொடுத்தவர்களும், உலகில் ஒருவர் செய்த அறம் கெட்டு அழிதல் இல்லாதவாறு காப்பாற்றுகின்றவரும், நிலையற்ற செல்வத்தைக் கோடிக்கணக்காக ஒருவர் கொடுத்தாலும் அழிவழக்குக் கூறாத நிலையுடையவரும், உலகத்திலே தலைபோகும் என்றாலும் கனவிலேயும் பொய் புகலாதவரும், இவ் வுலகில் இத்தகையோர்கள் யாவரையும் அழகாகிய நன்மக்கள் என்று உலகமாந்தர் மனம் களிப்பார்கள். (எனவே) ஐயனே! என அறப்பளீசுர தேவனுக்கு ஆக்கினும் அமையும்.
விளக்கஉரை
பொய்யொன்று நிதி – செல்வம் நிலையற்றது (எனும் தன்மையால்)
அறப்பளீசுர சதகம் என்பது சிவபெருமான்மீது நூறு செய்யுட்களால் ஆக்கப்பட்ட நூல் எனப் பொருள் தரும்.
இந்நூலும் சதுரகிரி என்னும் திருப்பதியில் எழுந்தருளியிருக்கின்ற அறப்பள்ளி ஈசுரன்மீது வாழ்த்தாகப் பாடி இறுதியடிகளில் இறைவன் பெயரை ஒரே மகுடமாக அமைத்து மேல் அடிகளிலெல்லாம் அறனும் மறனும் பண்பும் பழக்கவழக்க ஒழுக்க முறைகளும் பொதுவில் அமைத்துப் பாடப்பெற்றுள்ளது..
இது கொல்லிமலைச் சார்பிலுள்ள சதுரகிரியில் உள்ள திருக்கோயில். சதுரகிரிக்கே அறப்பள்ளியெனப் பெயருண்டென்றும் கூறுகின்றனர்.
துக்கடா
யாப்பு – புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.
யாப்பு, பாட்டு, தூக்கு, தொடர்பு, செய்யுள் இவை யாவும் ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும்.
காசிபோய் வந்தாலும் என்ன? பெரிய கனக தண்டிகையேறித் திரிந்தாலும் என்ன? வாசியைத் தெரிந்தாலும் என்ன? நாளும் மகராசன் என்றுபேர் பெற்றாலும் என்ன?
கல்லுளிச் சித்தர்
கருத்து உரை
முக்தி அடைவதன் பொருட்டு காசிக்கே சென்று வந்தால் என்ன பயன்? மிகப் பெரியதாக் இருக்கக் கூடிய தங்கத்தினால் ஆன வாகனத்தில் சுற்றி வந்தாலும் என்ன பயன்? வாசி பற்றிய ரகசியங்களை தெரிந்தாலும் என்ன? ஊருக்கு நல்லது செய்து மகராசன் என்று பெயர் பெற்றாலும் என்ன?
விளக்க உரை
பிரம்மத்தின் வடிவத்தை நாடவேண்டும். செய்த கர்மங்களாகிய வினைகளை முற்றிலும் அறுக்க செய்யும் உள் ஒளியே பிரம்ம சொரூபம். பிரமத்தை அறிய மேற்கண்டவைகள் உதவாது என்று பட்டியல் இடுகிறார்.
துக்கடா
ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.
ய – தமிழ் எழுத்து என்பதின் வடிவம்
யா – ஒரு வகை மரம், இல்லை, ‘யாவை’ என்ற பொருள்படும் கேள்விப்பெயர்
வ – நாலில் ஒரு பங்கு “கால்” என்பதன் தமிழ் வடிவம்
வா – வருக, ஏவல், ‘வா’ என்று அழைத்தல்.
வி – அறிவு, நிச்சயம், ஆகாயம், விசை.
இந்த உடலானது காற்றால் அடைக்கப்பட்டு வந்திருப்பது. மிகுந்த மலம் உடைய பாத்திரத்திற்கு நிகரானது. வீக்கம் (பருத்த) உடைய உடல் உடையது. ஞானத் தாயே (மனோன்மணித் தாயார்). எதற்கும் உதவாத போய்க் கூடு.
விளக்கம்
வேறு பெயர் – பிண்ணாக்கீசர்
பாம்பாட்டிச் சித்தரின் சீடர்.
இவருக்குப் பசி எடுத்தால் ‘கோபாலா’ என்று அழுவாராம். மற்றபடி மௌனம்தான்.
இவரது பாடல்கள் ஞானம்மா எனும் மனோன்மணித் தாயாரை முன்னிறுத்திப்பாடப்பட்டவை.
துக்கடா
வீ – மலர் , அழிவு, பறவை.
வே – வேம்பு, உளவு
வை – வைக்கவும், கூர்மை, ‘வை’ என்று ஏவுதல்.
வௌ – வவ்வுதல்
ள – தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு – நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
று – எட்டில் ஒரு பகுதி அரைக்கால் என்பதன் வடிவம்
வன குளிகை கொண்டு – அதனாலே ககன மார்க்கம் தனிலே அகனமாய் சென்று தவமொருமா சித்தர்கள் வாழ்கின்ற சதுர கிரிக்குப் போய் குதூகளித்தேன்.
மச்சேந்திர நாதர் எனும் நொண்டிச் சித்தர்
கருத்து உரை
காடுகளில் இருக்கும் குளிகைகளைக் உட்கொண்டு அதனால் வான் மார்க்கமாக தனியாக எடையற்று சென்று, நித்தமும் தவம் உடைய சித்தர்கள் வாழும் சதுரகிரிக்குச் சென்று மகிழ்ந்து இருந்தேன்.
விளக்கம்
உதிரவேங்கை, உரோமவேங்கை போன்ற வேங்கை வகைகள் காலங்கிமுனிவர் வனத்தில் இருக்கிறது அதை குத்தி அதில் இருந்து பெறப்படும் பாலை எடுத்து முறைப்படி தங்கமாக்கி உட்கொள்ள காயசித்தி உண்டாகும்.
நொண்டிச் சித்தர் சக்தி உபாசகர். இவரின் உண்மைப் பெயர் /ஊர் / காலம் தெரியவில்லை.
கால் ஊனம் உற்றவர் என்பதால் காரணப் பெயராகவே நொண்டிச் சித்தர் என்று அழைத்தார்கள் என்று குறிப்பிடப்படுகிறார். மனிதர்கள் வினைக்கு உட்பட்டு ஆணவம், மாயை மற்றும் கண்மம் போன்றவற்றினால் சூழப்பட்டு தன் இயல்பில் குறைவுற்று இருப்பதாலும் அவர்களுக்கு வழிகாட்டுதல் பொருட்டு பாடல் எழுதியதால் நொண்டிச் சித்தர் என்றும் இருக்கலாம்.
துக்கடா
ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’. அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.
ய – தமிழ் எழுத்து எண்பதின் வடிவம்
யா – ஒரு வகை மரம், இல்லை, ‘யாவை’ என்ற பொருள்படும் கேள்விப்பெயர்
வ – நாலில் ஒரு பங்கு “கால்” என்பதன் தமிழ் வடிவம்
வா – வருக, ஏவல், ‘வா’ என்று அழைத்தல்.
வி – அறிவு, நிச்சயம், ஆகாயம், விசை.
புற விஷயங்களிலே இருக்கிற பற்றை அறுப்பதாகிய ஒப்பற்ற திருவருளை பற்றினால் அந்தத் திருவருளாகிய கர்த்தா பற்றைக் அறுத்துத் தானாக்கிவிடுவன்; இந்தத் தன்மை உடைய பாவனையால் பற்று வாராது.
விளக்கம்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.
எனும் திருக்குறள் யாண்டும் சிந்திக்கத் தக்கது.
துக்கடா
ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.
பாடல் தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே; மானம் பட வரின் வாழாமை முன் இனிதே; ஊனம் கொண்டாடார், உறுதி உடையவை கோள் முறையால் கோடல் இனிது.
இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
கருத்து உரை
எதிரில் இருப்பவர்களின் துன்ப நிலை அறிந்து அவர்களுக்கு தானம் அளிப்பவர்களின் பெருமை மிக இனிது. மானம் இழந்தப்பின் உயிர் வாழாமை இனிது. பிறருடைய குறை/குற்றம் கண்டும் அவரின் குற்றம் கூறாதவரின் உறுதி இனிது. நன்மையானவற்றை முறைப்படிப் பெறுதல் இனிது.
விளக்கம்
ஆண்மை – பெருமை
துக்கடா
ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.
ப – நூறு
பா – பாட்டு, கவிதை, பாடல்.
பி – அழகு.
பீ – கழிவு.
பூ – மலர்.
எதையும் / யாரையும் / எப்பொழுதும் பழித்துச் சொல்லாதே. தேடும் தனத்தில் ஒரு தூசு கூட நில்லாது போய்விடும். மூன்றுவிதமான ஏடணைகள் எனப்படும் ஆசைகளாகிய மண்ணாசை, பொன்னாசை, பொருளாசை பொல்லாதவையாகும். சிவத்தின்மேல் ஆர்வம் கொண்டால் எமலோகம் போகாதிருக்கலாம்.
விளக்கம்
தூசு – மிகக் குறைந்த அளவு ஏடணை – ஆசை
துக்கடா
ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’. அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.
நை – நைதல்.,வருந்து
நொ – மென்மை.
நோ – துன்ப்பபடுதல், நோவு, வருத்தம்
நோ – வலி.
நௌ – மரக்கலம், கப்பல்.
இந்த உலகில் கோடியில் ஒருவரே சித்தராக பிறக்கிறார்கள். இது அவர்களின் பூர்வ ஜென்மங்களில் விட்ட குறையாகும். அவர்களுக்கு இந்த பெயர் எப்படி தோன்றியது என்று ஆராய வேண்டும். அஃதாவது அவர்களது பிராணனை பூரணத்தில் சேர்த்ததால் முக்தனாக ஆவதற்காக எடுத்த உடல் சித்தி ஆகி இருக்கும். (உடலுக்கும் இறப்பில்லை – காயசித்தி). இதன் பிறகு அவர்களுக்கும் முன்னும் பின்னும் பிறவி என்பது இல்லை.
விளக்கம்
காரண தேகம் பற்றியே சித்தர்களின் பிறப்பு அவர்கள் பிறக்கும் முன்னரே தீர்மானிக்கப்படுகிறது.
துக்கடா
ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.
நா – நான், நாக்கு
நி – இன்பம், அதிகம், விருப்பம்
நீ – முன்னிலை ஒருமைப் பெயர், நீக்குதல்
நூ – யானை, ஆபரணம், அணி, எள்.
நே – அன்பு, அருள், நேயம்
வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே; ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே; இல்லது காமுற்று, இரங்கி இடர்ப்படார் செய்வது செய்தல் இனிது.
இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
கருத்து உரை:
தன்னை வெற்றி அடைதலின் பொருட்டு விரும்பி கோபம் இல்லாமல் இருப்பவனின் தவம் இனியது. எடுத்துக் கொண்ட வேலையை முடிக்கும் ஆற்றல் உடையவனின் பொறுமை மிக இனிது. தம்மிடம் இல்லாத பொருளை நினைத்து துன்பப்படாமல் இருப்பது இனிது.
துக்கடா
ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.
து – உண்
தூ – வெண்மை, தூய்மை
தே – கடவுள்
தை – தையல் எனப்படும் பெண், ‘தை’ என்று ஏவுதல்.தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
ந – சிறப்பு.
அட்ட வீரட்டத் தலங்களில் இரண்டாவது தலம். சிவனார் அந்தகாசூரனை சம்ஹாரம் செய்த வீரச்செயல் புரிந்த தலம்.
அந்தாகசூரன் எனும் அசுரனை அழிக்க ஈசனால் 64 பைரவர்கள் மற்றும் 64 பைரவிகள் தோற்றுவிக்கப்பட்ட தலம்
முருகர் தெய்வீகன் என்ற இளவரசனாக பச்சைக்குதிரையோடு குகமுனிவரின் யாகத்தீயில் தோன்றி காரண்டன் வல்லூரன் என்ற இரு அசுரர்களை சம்ஹரித்து மக்களின் துயர்போக்கி பாரியின் மகள்களான அங்கவை , சங்கவையை மணந்த தலம்
முருகர் அசுரனைக் கொன்ற பாவம் தீர சிவனாரை வழிபட்ட தலம்
சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற தலம்
வாஸ்து சாந்தி என்ற ஐதீகம் தோன்றிய தலம்
அம்பாள் திரிபுர பைரவி அவதாரத்தலம்
சப்தமாதர்கள் அவதாரத்தலம்
ஔவையார் விநாயகர் அகவல் பாடியருளிய தலம்
ஔவையாரை சுந்தரருக்கு முன்பு கயிலாயத்தில் சேர்ப்பித்த கணபதியான பெரியானைக்கணபதிக்கு உள்பிரகாரத்தில் சந்நிதி
பைரவர் வாகனம் இல்லாமல் திருக்காட்சி
கோயிலுக்கு அருகின் ஸ்ரீமத் ஞானியார் சுவாமி மடலாயம்
அருகினில் குகை நமச்சிவாயர் சமாதி, சுவாமி ஞானானந்தகிரி சுவாமிகளின் தபோவனம், ஸ்ரீ ரகோத்தமசுவாமி பிருந்தாவனம்
மெய்ப்பொருள் நாயனார் அரசாண்ட தலம். (ஆலய நுழைவுவாயில் உட்புற மண்டபத்தூணில் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம்)
கபிலர் பாரிவள்ளலின் மகள்களை திருமுடிக்காரிக்குத் திருமணம் செய்வித்து , பின் வடக்கிருந்து உயிர்நீத்த தலம். ஆற்றின் நடுவில் கபிலர் குகை.
ராஜராஜ சோழன் பிறந்த தலம்.
குந்தவை நாச்சியார் திருப்பணிகள் செய்துள்ள தலம்.
பாடல் பெற்ற தலமான அறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) இங்கிருந்து சுமார் 3 கி.மி. தொலைவு.
தலம்
திருக்கோவிலூர்
பிற பெயர்கள்
அந்தகபுரம், மலையமான் நாடு , கீழையூர், கோவலூர் வீரட்டம், திருக்கோவலூர்
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரைஅருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
கீழையூர், திருக்கோவிலூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், PIN – 60575704153-253532 , +91-93448-79787 , +91-94862-80030 , +91-98426-23020 , +91-98423-10031 , +91-93456-60711
கயிலை மலையை பெயர்த்து எடுத்த இராவணனின் பெரிய தோள்களின் அழகு வாடுமாறும் அவனை வருந்துமாறும் செய்து பின் அவனுக்கு அருள் பல செய்தும், முப்புரங்களை வில்லால் எய்து அழித்தும், தனது பெருவீரத்தைப் புலப்படுத்திய பற்கள் பொருந்திய பிளந்தவாயை உடைய வெள்ளிய தலைமாலையைச் சூடிய இறைவன் இத்திருவதிகை வீரட்டானத்தே ஆடுவான்.
கருத்து
கல்லார் வரை – கயிலையை கவின் – அழகு ஒல்லை – விரைவாக காலந் தாழ்க்க அடர்ப்பின் அவனிறந்தேபடுவான் என்னுங் கருணையால். பல் ஆர் பகுவாய – பற்கள் பொருந்திய பிளவுபட்ட வாயையுடைய.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 17
திருமுறை எண் 10
தனக்கு வலிமை உண்டு என்று செருக்கி கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனது வலிமையை நெரித்து அவன் கர்வத்தை அழித்தவரும், மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து அதனை நடுவுநிலையாளர் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் மிகவும் அடக்கமாக இருந்து அதை பிறரிடம் காட்டி என்னை அடிமையும் கொண்டவரும், தடுக்க இயலாத வலிமையுடைய யானை ஒன்றினை உரித்து உமையையும் நடுங்கச் செய்தவருமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும்.
கருத்து
நடுக்கங் கண்டார் – அஞ்சுவித்தார்
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – நாற்பத்துமுக்கோணம்
வார்த்தை : நாற்பத்துமுக்கோணம்
பொருள்
ஸ்ரீ சக்கரம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்; கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார் பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப் புகழாகப் பூசைசெய்வார் பெண்ணை வைத்தும்; நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார் நம்முடைய பூசையென்ன மேருப் போலே ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே உத்தமனே! பூசைசெய்வார் சித்தர் தானே.
சட்டை முனி ஞானம்
கருத்து உரை
பூசை செய்யும் முறைகளை உரைக்கிறேன் கேட்பாயாக. சிலர் புற வழிபாட்டு முறைகளில் ஒன்றான சுவடியை வைத்து பூசை செய்வார்கள். சிலர் மட்டும் புகழைத் தரும் தீபத்தை வைத்து பூசை செய்வார்கள். சிலர் பெண்களை தேவியாக பாவித்து பூசை செய்வார்கள். சிலர் தினமும் சக்கரங்களை வைத்தும் பூசை செய்வார்கள். நம்மைப் போன்ற சித்தர்கள் வழிபாட்டு முறை என்பது மேருவை பூசித்தல் போல நாற்பது முக்கோணம் உடைய ஸ்ரீ சக்கரத்தை பூசித்தல் ஆகும்.
துக்கடா
ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’. அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.