ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – ஊத்தம்
வார்த்தை : ஊத்தம்
பொருள்
- வீக்கம்
- காய்களைப் பழுக்க வைக்கப் புதைத்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது
ஊத்தச் சடலமிது – ஞானம்மா
உப்பிலாப் பொய்க்கூடு.
புண்ணாக்குச் சித்தர்
கருத்து உரை
இந்த உடலானது காற்றால் அடைக்கப்பட்டு வந்திருப்பது. மிகுந்த மலம் உடைய பாத்திரத்திற்கு நிகரானது. வீக்கம் (பருத்த) உடைய உடல் உடையது. ஞானத் தாயே (மனோன்மணித் தாயார்). எதற்கும் உதவாத போய்க் கூடு.
விளக்கம்
- வேறு பெயர் – பிண்ணாக்கீசர்
- பாம்பாட்டிச் சித்தரின் சீடர்.
- இவருக்குப் பசி எடுத்தால் ‘கோபாலா’ என்று அழுவாராம். மற்றபடி மௌனம்தான்.
- இவரது பாடல்கள் ஞானம்மா எனும் மனோன்மணித் தாயாரை முன்னிறுத்திப்பாடப்பட்டவை.
துக்கடா
வீ – மலர் , அழிவு, பறவை.
வே – வேம்பு, உளவு
வை – வைக்கவும், கூர்மை, ‘வை’ என்று ஏவுதல்.
வௌ – வவ்வுதல்
ள – தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு – நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
று – எட்டில் ஒரு பகுதி அரைக்கால் என்பதன் வடிவம்