ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – ஒல்லுதல்
வார்த்தை: ஒல்லுதல்
பொருள்
- பொருந்துதல்
- இயலுதல்
- உடன்படுதல்
- தகுதல்
- ஆற்றுதல்
- ஓலைப்பெட்டிபொத்துதல்
- ஒலித்தல்
- விரைதல்
- கூடுதல்
- பொறுத்தல்
- நிகழ்தல்.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே;
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே;
இல்லது காமுற்று, இரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது.
இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
கருத்து உரை:
தன்னை வெற்றி அடைதலின் பொருட்டு விரும்பி கோபம் இல்லாமல் இருப்பவனின் தவம் இனியது. எடுத்துக் கொண்ட வேலையை முடிக்கும் ஆற்றல் உடையவனின் பொறுமை மிக இனிது. தம்மிடம் இல்லாத பொருளை நினைத்து துன்பப்படாமல் இருப்பது இனிது.
துக்கடா
ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.
து – உண்
தூ – வெண்மை, தூய்மை
தே – கடவுள்
தை – தையல் எனப்படும் பெண், ‘தை’ என்று ஏவுதல்.தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
ந – சிறப்பு.