ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – தகை
வார்த்தை : தகை
பொருள்
- அழகு
- அன்பு
- அருள்
- கவசம்
- குணம்
- தடை
- தகுதி
- பொருத்தம்
- ஒப்பு
- மேம்பாடு
- பெருமை
- நன்மை
- இயல்பு
- நிகழ்ச்சி
- கட்டுகை
- மாலை
- தளர்ச்சி
- தாகம்
- மூச்சிழைப்பு.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே;
மானம் பட வரின் வாழாமை முன் இனிதே;
ஊனம் கொண்டாடார், உறுதி உடையவை
கோள் முறையால் கோடல் இனிது.
இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
கருத்து உரை
எதிரில் இருப்பவர்களின் துன்ப நிலை அறிந்து அவர்களுக்கு தானம் அளிப்பவர்களின் பெருமை மிக இனிது. மானம் இழந்தப்பின் உயிர் வாழாமை இனிது. பிறருடைய குறை/குற்றம் கண்டும் அவரின் குற்றம் கூறாதவரின் உறுதி இனிது. நன்மையானவற்றை முறைப்படிப் பெறுதல் இனிது.
விளக்கம்
ஆண்மை – பெருமை
துக்கடா
ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.
ப – நூறு
பா – பாட்டு, கவிதை, பாடல்.
பி – அழகு.
பீ – கழிவு.
பூ – மலர்.