ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – ஓர்தல்
வார்த்தை : ஓர்தல்
பொருள்
- ஆராய்தல்
- எண்ணுதல்
- உணர்தல்
- அறிதல்
- தெளிதல்.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஓங்கார வட்டமதின் உட்பொருள்கண் ஓர்ந்ததற்பின்
நீங்காத ஆசை நிலைக்குமோ மாங்குயிலே.
சதோக நாதர் என்ற யோகச் சித்தர்
கருத்து உரை
பிரணவப் பொருளாகிய ஓங்கார வடிவத்தின் உப்பொருளை உணர்ந்து அறிந்தப்பின் நீங்காத ஆசை நிலைக்குமா?
விளக்கம்
1.
ஓங்கார வடிவம் மற்றும் அதன் பொருள் குறித்த விபரங்களை திருமந்திரம் 4ம் தந்திரத்தின் மூலம் அறிக.
2.
- சதோகநாதர், நவநாத சித்தர்களில் இரண்டாவதாக வைத்துப் போற்றப்படுபவர்.
- காலம் தோராயமாக் – கி.பி. 16ஆம் நூற்றாண்டு.
- இவர் யோக ஞானம் பற்றி அதிகம் பாடியதால் ‘யோக சித்தர்’ என்றும் குறிக்கப்படுகின்றார்.
- இவர் சக்தி வழிபாட்டு பூஜை முறை கொண்டவர்.
துக்கடா
இவ்வாறே செய்யுளிலுள்ள எல்லாச் சீர் இணைகளுக்கும் இடையிலுள்ள தளைகளின் வகைகளை அறிந்துகொள்ள முடியும்
ஆசிரியத்தளை
— நேரொன்றிய ஆசிரியத்தளை
– நிலைச்சீர் – இயற்சீர் (ஈரசைச்சீர்)
– நிலைச்சீர் ஈற்றசை – நேர்
– வருஞ்சீர் முதலசை – நேர்
– நிரையொன்றிய ஆசிரியத்தளை
– நிலைச்சீர் – இயற்சீர் (ஈரசைச்சீர்)
– நிலைச்சீர் ஈற்றசை – நிரை
– வருஞ்சீர் முதலசை – நிரை