ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – நயத்தல்
வார்த்தை : நயத்தல்
பொருள்
- விரும்புதல்
- பாராட்டுதல்
- சிறப்பித்தல்
- பிரியப்படுத்தல்
- தட்டிக்கொடுத்தல்
- கெஞ்சுதல்
- அன்புசெய்தல்
- பின்செல்லுதல்
- மகிழ்தல்
- இன்பமுறல்
- இனிமையுறுதல்
- இணங்கிப்போதல்
- பயன்படுதல்
- மலிதல்
- மேம்படுதல்
- ஈரம்ஏறுதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
நானென்ற ஆணவத்தை நயந்தறுத்து விடுத்தேன்
நன்மைபெற்றுக் குகைதனிலே வாழ்ந்திருக்க அடுத்தேன்
தானென்ற கருவமதைத் தணித்து விட்டு வந்தோம்
தவமேதான் கதி என்று சரவழியில் உகந்தோம்.
வகுளிநாதரென்னும் மௌனச்சித்தர் பாடல்
கருத்து உரை
நான் எனும் செருக்கை அறுத்தேன். குகைக்குள்ளே நன்மை பெற்று வாழ்ந்தேன். தான் என்னும் கர்வத்தயும் குறைத்துவிட்டு தவமே உரிய வழி என சஞ்சார வழியில் மகிழ்ந்தோம்.
விளக்க உரை
- இவருடைய இயற்பெயர் ‘வகுளிநாதர்’
- இவருக்கு முன் இருந்த பல சித்தர்களைப் பின்பற்றி 12 பாடல்களைப் பாடியிருப்பது மட்டும் தெரிகிறது.
துக்கடா
சொல் – ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.
சொல்லின் வகைகள்
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்