ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – ஒற்கம்
வார்த்தை : ஒற்கம்
பொருள்
- மனத்தளர்ச்சி
- வறுமை
- குறைவு
- அடக்கம்
- பொறுமை.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இனிதே;
துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே;
உற்ற பொலிசை கருதி, அறன் ஒரூஉம்
ஒற்கம் இலாமை இனிது.
இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
கருத்து உரை
பிச்சையெடுத்து உண்பவன் கோபம் கொள்ளாதிருத்தல் இனிது. துன்பத்தில் இருந்தாலும் துன்பம் கூறாது இருப்பவனின் பெருமை இனிது. மிக்க பேராசையைக் கொண்டு அறவழியிலிருந்து நீங்காதிருக்கும் உறுதி இனிது.
துக்கடா
பகுக்கப்படாத இயல்பையுடைய சொற்கள் பகாப்பதம் ஆகும். அதாவது ஒரு சடப்பொருளையோ அல்லது கருத்துப்பொருளையோ குறித்து நிற்கும் சொற்கள் பகாப்பதம் ஆகும்.
நிலம், நீர், மரம் – பொயர்ப்பகாப்பதம்
நட, வா, உண் – வினைப்பகாப்பதம்
மற்று, ஏ, ஒ – இடைப்பகாப்பதம்
உறு, தவ, நனி – உரிப்பகாப்பதம்