ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – உள்ளுதல்
வார்த்தை : உள்ளுதல்
பொருள்
- நினைதல்
- ஆராய்தல்
- நன்கு மதித்தல்
- மீண்டும் நினைத்தல்
- இடைவிடாது நினைத்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
உரிதாம் பரம்பொருளை உள்ளு – மாயம்
உற்ற பிரபஞ்ச மயக்கத்தைத் தள்ளு
அரிதான சிவநாமம் விள்ளு – சிவன்
அடியார்கள் பணிவிடை அன்பாகக் கொள்ளு.
கஞ்சமலைச் சித்தர்
கருத்து உரை
ஆராதிக்கப்படும் பரம்பொருளை நினைத்து இடைவிடாது நினை. மாயையால் சூழப்பட்ட பிரபஞ்ச மயக்கத்தினை தள்ளு. அரிதான மாறுபாடு இல்லா சிவன் நாமத்தை சொல்லு; சிவன் அடியவர்களுக்கு அன்பாக பணிவிடை செய்வாயாக.
விளக்கம்
உரிதாம் – ஆராதிக்க உரிய
பஞ்சாட்ரம், சூட்சம பஞ்சாட்ரம் போன்றவை மாயையால் சூழப்பட்ட பிரபஞ்சத்தால் எல்லோருக்கும் வாய்ப்பதிலை. அது குரு முகமாய் வாய்க்கப் பெறின் நன்று.
துக்கடா
ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.
மீ – மேலே , உயர்ச்சி, உச்சி, மிகுதியானது.
மூ – மூப்பு, முதுமை, மூன்று.
மே – மேன்மை,மேல்
மை – கண்மை (கருமை), அஞ்சனம், இருள், மசி
மோ – மோதல், முகரதல் ,மொள்ளுதல்.