அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஓங்கல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஓங்கல்

பொருள்

  • மலை
  • செங்குத்துப் பாறை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல் /  பதப் பிரிப்பு

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.

ஓங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கு ஒலி நீர் ஞாலத்து இருள் அகற்றும்- ஆங்கம் அவற்றுள்
மின் ஏர் தனியாழி வெங்கதிர் ஒன்றே அனையது
தன் ஏர் இலாத தமிழ்

தண்டியலங்காரம்

கருத்து உரை

மலையில் தோன்றி, உயர்ந்தவர் தொழுமாறு விளங்கி, இந்த உலகத்து இருளையெல்லாம் அகற்றுபவை இரண்டு. அவற்றுள் ஒன்று மின்னுகின்ற எதுவும் கலவாத தனித்தன்மையான கதிரவன் என்னும் ஞாயிறு. மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி என்றவாறு.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பக்கல்

தமிழ் அன்னை

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  பக்கல்

பொருள்

  • பக்கம்
  • இனம்
  • பிறை நாள்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நிழலார் சோலை நீல வண்டினங்
குழலார் பண்செய் கோலக் காவுளான்
கழலான் மொய்த்த பாதங் கைகளால்
தொழலார் பக்கல் துயர மில்லையே.

தேவாரம் – 1ம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

நிழல் செறிந்த சோலைகளில் நீல நிறம் பொருந்திய வண்டு இனங்கள் குழல் ஒலிப்பது போல இசை வழங்கும் திருக்கோலக்காவில் விளங்கும் சிவபிரானுடைய வீரக்கழல் செறிந்த திருவடிகளை நோக்கி கைகூப்பித் தொழுபவர் பக்கம் துயரம் வாராது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சலவர்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  சலவர்

பொருள்

  • வஞ்சகர்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

*சலவரைச்* சாரா விடுதல் இனிதே;
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே;
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது.

இனியவை நாற்பது – பூதஞ் சேந்தனார்

கருத்து உரை

வஞ்சகர்களை சாராமல் அவரை விட்டு நீக்குதல் இனியது. அறிவுடையாருடைய வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது. பூமியில் வாழ்கின்ற உயிர்கள் உரிமையுடன் வாழ்தல் இனிது

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நிருத்தன்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – நிருத்தன்

  • நடனம் புரிபவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்
கண்ணனே விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட் டலறி
உலகெலாந் தேடியுங் காணேன்
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.

8ம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

திரு நடனம் புரிபவனே! மலம் இல்லாதவனே! வெண்ணீற்றை உடையவனே! நெற்றிக்கண்ணை உடையவனே! தேவர் பிரானே! ஒப்பற்றவனே! முறையிட்டு அரற்றி உலகம் முழுதும் தேடியும் உன்னை நான் பார்க்கவில்லை. தீர்த்தமாகிய பொய்கையை உடைய திருப்பெருந்துறையில் வளப்பமான மலர்களை உடைய குருந்தமர நிழலில் பொருந்திய சிறப்புடைய செல்வனே! தொண்டனாகிய நான் அன்புடன் அழைத்தால், அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!

விளக்க உரை

அருத்தன் – மெய்ப்பொருளாய் உள்ளவன்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கதிர்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கதிர்

பொருள்

  • ஒளிக்கதிர்
  • சூரியகிரகணம்
  • ஒளி
  • வெயில்
  • சூரியசந்திரர்
  • நெற்கதிர்
  • இருப்புக்கதிர்
  • நூல்நூற்குங்கருவி
  • சக்கரத்தின்ஆரக்கால்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கதிர்கண்ட காந்தம் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாம்
சதிர்கொண்ட சாக்கி சரியன் வடிவாம்
எதிர்கொண்ட ஈசன் எழில்வடி வாமே.

திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

சூரியனைக் கண்ட சூரியகாந்தக்கல் நெருப்பு வடிவம் பெறும்; சந்திரனைக் கண்ட சந்திரகாந்தக்கல் முத்துப்போன்று நீர் வடிவாய் நீரை உமிழும்; கண்ணுக்கு உதவியாக அணியப்படும் ஆடி ஆகிய `உபநேத்திரம்` பார்வை வழியை நன்கு தெரிவிக்கும்; (அது போல) சிவனை உள்ளத்தில் ஏற்றுக் கொண்ட உயிர்கள் அந்தச் சிவன் வடிவம் பெறும்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வம்பு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  வம்பு

பொருள்

  • சண்டை
  • வீண் வார்த்தை
  • பழிமொழி
  • தீம்பு வார்த்தை
  • சரசச் செயல்
  • வஞ்சனை
  • பயனிலாமை
  • நிலையின்மை
  • புதுமை
  • படிறு
  • உவமை
  • வாசனை
  • அரைக் கச்சு
  • கையுறை
  • மேற் போர்வை
  • சிவிகையின் வளைகொம்பு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் – நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாய்என்நோய்
பின்னவலம் செய்வதெனோ பேசு.

11ம் திருமுறை – நம்பியாண்டார் நம்பிகள் – திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை

கருத்து உரை

பூங்கொம்பைப் போன்ற வள்ளியின் நாயகனாகிய முருகன் அடையாதபடி சர்சைக்குரிய மாம்பழத்தை பெற்றுக்கொண்டவரும், திருநாரையூரில் உன்னை நம்பி அடைபவர்களுக்கு அருளுபவரும்,  சிவபெருமானை வலம் வந்து பெற்றுக் கொண்ட துதிக்கையை உடையவரே எனக்குத் துன்பம் செய்வது ஏன் என்பதைச் சொல்வாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 16

உமாமகேஸ்வரஸம்வாதம்

புகைப்படம் : இணையம்

உமை

மனிதர்கள், உலகின் நன்மை தீமைகள் அனைத்தும் நவகிரகங்களால் செய்யப்பட்டவை என்று நினைத்து அந்த கிரகங்களையும், நட்சத்திரங்களையும் பூசை செய்கின்றனர். இதில் எனக்கு சந்தேகம் உள்ளது. இதை தீர்க்க கடவீர்

சிவன்

நட்சத்திரங்களும் கிரங்கங்களும் தாமே காரியங்களை செய்வதில்லை. மனிதர்களின் நன்மைக்காக அவைகள் நல்லவைகளாகவும், கெட்டவைகளாகவும் தெரிகின்றன. நல்ல கர்மங்கள் சுப கிரங்கங்களாலும், கெட்ட கர்மங்கள் பாப கிரங்களாலும் தெரிவிக்கப்படுகின்றன. ஆதலினால் பாப கிரங்கங்கள் இருக்கும் போது ஜனங்கள் கெடுதலைச் செய்கிறார்கள். சுப கிரங்கங்கள் இருக்கும் போது தாமே சரியாக செய்வதாக நினைத்து நல்ல காரியங்களைச் செய்கிறார்கள். எப்பொழுதும் கிரக, நட்சத்திரங்கள் நன்மை தீமை செய்வதில்லை. எல்லா வினைகளும் அந்தந்த உயிர்களால் செய்யப்பட்டவை. கிரகங்கள் வேறு, செய்பவன் வேறு. வினைகளை செய்தவன் கிரங்கங்களால் தூண்டப்பட்டு தன் பலன்களை அனுபவிக்கிறான்.

உமை

நல்ல வினைகள், தீய வினைகள் ஆகியவற்றை செய்த மனிதர்கள் அடுத்து வரும் பிறப்புகளில் எதை முதலில் அனுபவிக்கிறார்கள்?

சிவன்

சிலர் நல்லவினைகள் முன்பு அனுபவிக்கின்றனர் என்றும், சிலர் தீய வினைகளை பின்னர் அனுபவிக்கின்றனர் என்றும் கூறுகிறார்கள். இது தவறு. முன் ஜென்மங்களில் எவ்வாறு இரு வினைகளும் செய்யப்பட்டனவோ அவ்வாறே அதற்குத் தக்க பலன்களை அனுபவிக்கின்றனர். இந்த பூமியில் மனிதர்கள் செல்வம், வறுமை, இன்பம், துன்பம்,அச்சமின்மை, பயம் போன்றவற்றை வரிசையாக அனுபவிக்கின்றனர். செல்வம் உடையவர்கள் துயரப்படுகிறார்கள். வறியவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். இது மானிட வர்கங்களுக்கு பொருந்தும். சுவர்க்க, நரகத்தில் அவ்வாறு இல்லை. இடையறாத சுகம் சுவர்கத்திலும், இடையறாத துன்பம் நரகத்திலும் இருக்கும். மிகப் பெரியதான வினைகளை முதலில் அனுபவித்து மிகச் சிறிய வினைகளை பின்னர் அனுபவிக்கின்றனர்.

உமை

உலகில் உயிர்கள் பிறந்து பிறந்து நில்லாமல் உயிர் விடுத்து இறப்பது எதனால்?

சிவன்

தேகமும் ஆத்மாவும் இணைந்திருப்பதை பிராணிகள்/உயிர்கள்  என்று சொல்லப்படுகிறது. இதில் ஆத்மா நித்தியம், உடம் அநித்தியம், இவ்வாறு தேகத்துடன் சேரும் ஆத்மா நாளடைவில் தேகத்தின் வலிமை குன்றிய பிறகு அதை விட்டு விடுகிறது. இதை உலகில் உள்ளவர்கள் மரணம் என்கிறனர். இது தேவர், அசுரர், மனிதர் ஆகிய எல்லாருக்கும் பொருந்தும். உயிரற்ற பொருள்களை எப்படி ஆகாயம் தன்னிடத்தில் கொள்வது இல்லையோ அது போலவே காலமும். இவ்வாறு உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுத்து தேகம் அடைகின்றன.

உமை

சில உயிர்கள் இளமையிலே இறக்கின்றன. சில உயிர்கள் வயது முதிர்ந்து உயிரோடு இருக்கின்றன. இதனால் காலத்தினால் மரணம் நிச்சயமாகவில்லை. இந்த சந்தேகத்தை தெளிவியுங்கள்.

சிவன்

காலமானது தேக தளர்ச்சியை மட்டும் செய்கிறது. அது தேகம் விழ்ந்து போகச் செய்வதில்லை. கர்மம் முடிந்தால் தேகம் தானாகவே விழும். முந்தைய கர்மத்தின் படியே இருப்பதும் இறப்பதும். முன் செய்த கர்மம் இருக்கும் வரையில் மனிதன் உயிரோடு இருக்கிறான். அந்த கர்மத்தின் அடிப்படையில் தான் அவன் வெகு காலம் உயிரோடு இருப்பதும்.

 உமை

மனிதர்கள் தீர்க்க ஆயுள் உள்ளவர்களாகவும், ஆற்ப ஆயுள் உள்ளவர்களாகவும் இருப்பது எதனால்?

 தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஆதிப்பிரமம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஆதிப்பிரமம்

பொருள்

  • இறைவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மாதிவர் பாகன் மறைபயின்ற
வாசகன் மாமலர் மேயசோதி
கோதில் பரங்கரு ணையடியார்
குலாவுநீ திகுண மாகநல்கும்
போதலர் சோலைப் பெருந்துறையெம்
புண்ணியன் மண்ணிடை வந்திழிந்
தாதிப் பிரமம் வெளிப்படுத்த
அருளறி வாரெம்பி ரானாவாரே.

தேவாரம் – 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்

கருத்து உரை

பெண் பொருந்திய பாகத்தனும், வேதம் சொன்ன மொழியையுடையவனும், உயர்ந்த இதயமலரில் வீற்றிருக்கும் ஒளிப்பிழம்பானவனும், குற்றமற்ற மேலான கருணையாளனும், அடியார்கள் கொண்டாடுகின்ற நீதியினையே, குணமாக அவர்களுக்கு அருள்புரியும், அரும்புகள் மலர்கின்ற, சோலை சூழ்ந்த, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும், எமது புண்ணியப்பொருளானவனும் ஆகிய இறைவன், மணணுலகத்தில் வந்து இறங்கி, எல்லாவற்றுக்கும் முதலாயுள்ள பெரும் பொருளாகிய தனது தன்மையை வெளிப்படுத்திய, அருளின் அருமையை அறிய வல்லர்கள், எம்பிரான் ஆவார்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அனாகதம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அனாகதம்

பொருள்

  • பிற ஒன்றால் தோற்றுவிக்கப் படாதது

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நில்லடா நிலை அறிந்து சுகத்தைக்காண
நிசமான ருத்திரனார் பதியைக்கேளு
சொல்லடா சொல்லறிந்து சுகத்தைப் பார்க்க
சுகமான முக்கோணம் நன்றாய்க்கீறி
அல்லடா முக்கோணத் ததிலேநீதான்
அப்பனே பன்னிரண்டி தழ்தான்போடு
விள்ளடா செம்புனிற மான கோட்டை
விசையான கோட்டைநடு விந்துபோடே

அகத்தியர் சௌமிய சாகரம்

அனாகதம்

கருத்து உரை

அடுத்தது “சி”கார ” எழுத்தாகவும், சிகாரத்தின் நடுவில் பார்வதியுடன் அமர்ந்திருக்கும் ருத்திரனாரை  தலைமையாக கொண்ட அனாதகத்தை, முக்கோணச் சக்கரம் சுற்றிலும் (இரு முக்கோணங்கள் ஒன்று மேல்நோக்கியும் ஒன்று கீழ் நோக்கி) பன்னிரண்டு இதழ்களை வரைந்து, செம்பின் நிறம்போன்ற சிவந்த கோட்டை அதன் நடுவில் புள்ளியாகவும், சக்திதத்துவம் உடையதாகவும்  சிறியதாகவும் உள்ள பிந்துவினை இட்டு  குரு உபதேசித்த படி ஜபிக்க வேண்டும்.

விளக்க உரை

  • இது அக்னி நிறமுடையது.
  • விசுத்தி காற்றுடனும். ஆக்ஞா நெருப்புடனும் சம்மந்தம் உடையவை.
  • மூலாதாரம் முதல் அனாகதம் வரை உணர்ச்சி மையம். அனாகதம் முதல் துரியம் துரியாதீதம் வரை அறிவு மையம்.எனவே அனாகதம் அறிவும் உணர்ச்சியும் சந்திக்கின்ற மையப்புள்ளி. இது பற்றியே மனிதர்கள் கீழ் நிலை அடைவதும், மேல் நிலை அடைவதும்.
  • 54 சூரிய கலைகளைக்கொண்டு ஜோதி வடிவானது.
  • நெருப்பின் பஞ்ச பூத தத்துவமாகவும், எல்லாவற்றிலும் மேலாக எப்போதும் அனாதியாய் ஓங்கார சப்தத்தையும் (உடல் முழுதும் சிரசு வரை) மின்னலின் கண் தோன்றும் இடி சப்தத்தையும் எழுப்பிக்கொண்டே இருப்பதோடு ஒவ்வொரு அணுவிலும் அதன் அதிர்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது.
  • ஒன்றின் மூலத்திலிருந்து வந்தது.
  • ‘ஹ்ருதயஸ்தா, ரவிப்ரக்யா – ‘ஹ்ருதயத்தில் வசிக்கையில் சூர்யன் போன்று பிரகாசிப்பது’ என்று லலிதா சகஸ்ரநாமத்தில் வரும் நாமாவளி இதைக் குறிக்கிறது. ஹ்ருதயத்தில் சியாமா/தருணியாகவும் இருப்பதை குறிக்கிறது. அவளே அனாகதத்தை தாண்டி விஷ்ணுக்ரந்தியைக் கடக்கையில் சூரியனது ஒளியை விஞ்சுவதாக  ருத்ர சியாமளம் கூறுகிறது.

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மாண்பு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மாண்பு

பொருள்

  • மாட்சி
  • சிறப்பு
  • பெருமை
  • அழகு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பொய்யை ஒழியாய் புலாலை விடாய் காளத்தி
ஐயரை எண்ணாய் அறம் செய்யாய் – வெய்ய
சினமே ஒழியாய் திருவெழுத்தைந்து ஓதாய்
மனமே உனக்கென்ன மாண்பு ?

பட்டினத்தார்

கருத்து உரை

தீமை தரக்கூடிய பொய்யை ஒழியாமல் இருக்கிறாய்; புலால் உணவை விடாமல் இருக்கிறாய்; திருக்காளத்தியில் உறையும் காளத்தி நாதரை எண்ணாமல் இருக்கிறாய்; நல்வழிக்கு அழைத்துச் செல்லும் அறங்களைச் செய்யாமல் இருக்கிறாய்; தீமையானதும் கொடுமையானதுமான சினத்தை விடாமல் இருக்கிறாய்; திரு ஐந்தெழுத்தினை ஓதாமல் இருக்கிறாய்; மனமே இவை எல்லாம் இல்லாமல் உனக்கு என்ன சிறப்பு?

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வங்கை

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  வங்கை

பொருள்

  • பகை
  • குறும்பு.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

எங்கள்தேவர் உங்கள்தேவர் என்றிரண்டு தேவரோ
இங்குமங்கு மாய் இரண்டு தேவரே இருப்பரோ
அங்குமிங்கு மாகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரஞ் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே.

சிவவாக்கியர்

கருத்து உரை

தேவர்களில் உங்கள் தேவர், எங்கள் தேவர் என்று இரண்டு தேவர்கள் இருக்கிறார்களா? இங்கும் அங்கும் இரண்டு தேவர்கள் இருக்கிறார்களா? அங்கும் இங்குமாய் நின்ற ஆதி மூர்த்தி ஒருவரே. இவ்வாறு பகைகொண்டு மாறுபாடான கருத்துக்களை சொல்லுபவர்கள் மிக மோசமான நிலை அடைந்து இறப்பார்கள்.

விளக்க உரை

  • அகச் சமயம் ஆறும் (வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், பிங்கலம்.), புறச் சமயங்களான சைவம், வைணவம், சாக்தம், செளரம், காணாபத்யம், கெளமாரம் ஆகிய நிலைகளில் இருந்து அருள்பவன்.
  • மனம் நிலையில்லாமல் ஒடுகிறது என்பதை குறிக்கவே இரண்டாம் வரிகளில் இங்கும் அங்குமாகி என்றும், மனம் நிலை பெற்றப்பின் புறத்தில் இருக்கும் மூர்த்தியே அகத்தில் இருக்கிறார் என்பதை குறிக்கவே மூன்றாம் வரிகளில் அங்கும் இங்கும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.(இது என் சிற்றறிவுக்கு எட்டியது – வேறு விளக்கங்கள் தெரிவித்தால் அறிந்து கொள்வேன்).

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வெருவுதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  வெருவுதல்

பொருள்

  • அஞ்சுதல்
  • வெருவுதல்
  • அச்சம் கொள்ளுதல்
  • பயம் கொள்ளுதல்
  • வெருவுதல்
  • வெருளுதல்
  • மருட்சி கொள்ளுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! – வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்*
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே!

அபிராமி அந்தாதி

கருத்து உரை

என் தாயே, அபிராமியே, மனிதராய்ப் பிறந்த எவராலும் அறிய இயலாத வேதத்தின் பொருளை உனது பேரருளால் அறிந்து கொண்டேன். அதை அறிந்து கொண்டு உனது திருவடிகளே சரணமென்று சரணடைந்தேன். உனது அருள் பெற்ற அடியார்களின் பெருமைகளை அறியாமல், உன்னைத் தொழாமல், தீய செயல்கள் புரிந்து நரகத்தில் மந்தையாக விழக் காத்திருக்கும் இம்மனிதர்க் கூட்டங்களை கண்டு அஞ்சி அவர்களிடம் இருந்து விலகி விட்டேன்.

விளக்க உரை

அறியா மறை

  • வேதம்,
  • மறைபொருளான உண்மைகள் என்றும் பொருள் கொள்ளலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சாலி

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  சாலி

பொருள்

  • நெற்பயிர்
  • நெல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

வாராதிருந்தால் இனி நான் உன் வடிவேல் விழிக்கு மை எழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகம் இடேன் மணியால் இழைத்த பணிபுனையேன்
பேராதரத்தினொடு பழக்கம் பேசேன் சிறிதும் முகம் பாரேன்
பிறங்கு முலைப்பால் இனிதூட்டேன் பிரியமுடன் ஒக்கலை வைத்துத்
தேரார் வீதி வளங்காட்டேன் செய்ய கனிவாய் முத்தமிடேன்
திகழும் மணித் தொட்டிலில் திருக்கண் வளரச் சீராட்டேன்
தாரார் இமவான் தடமார்பில் தவழும் குழந்தாய் வருகவே
சாலிப் பதிவாழ் காந்திமதித் தாயே வருக வருகவே!

நெல்லை காந்திமதி பிள்ளைத் தமிழ்

கருத்து உரை

நீ வராது இருந்தால் உன் வேல் போன்ற விழிகளில் மை இட்டு எழுத மாட்டேன்; கூர்மையான வாள் போன்று இருக்கும் நெற்றியில் திலகம் இட மாட்டேன்; மணியால் கோர்க்கப்பட்டவைகளை கொண்டு அவைகளை உன் கழுத்தில் இட்டு அழகு பார்க்கும் பணிகளை செய்ய மாட்டேன். தானாக முந்திச் சென்று காணும் உன்னிடம் பேச மாட்டேன்; முகத்தினையும் காணமாட்டேன். தாய்மைக்கு உரித்தான தனங்களில் இருந்து பால் ஊட்ட மாட்டேன்;  தேர் ஊர்ந்து செல்லும் வீதிகளைக் காட்ட மாட்டேன்; மன மகிழ்வோடு முத்தமிட மாட்டேன்; மணிகள் கட்டப்பட்டிருக்கும் தொட்டிலில் இட்டு சீராட்ட மாட்டேன்; இமவானின் மார்பில் தவழும் குழந்தையும், நெற்கதிர்களால் சூழப்பட்டிருக்கும் தலைவன் வாழும் இடத்தில் வாழும் காந்திமதித் தாயே வருக வருக.

விளக்க உரை

  • பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், ஆச்சாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டதும் பாவனையே ஆகும்.
  • நெல்லை காந்திமதி அன்னையை குழந்தையாக பாவித்து எழுதப்பட்ட பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – காயம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  காயம்

பொருள்

  • அடி முதலியப் பட்டதனாலான புண்
  • வடு
  • உடல்
  • ஆகாயம்
  • உறைப்பு
  • மிளகு
  • காழ்ப்பு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தூய கடல் நீர் அடிசில் உண்டு,
   அது துரந்தான்;
ஆய அதனால் அமரும் மெய்
   உடையன் அன்னான்;
மாய-வினை வாள் அவுணன்
   வாதவிதன் வன்மைக்
காயம் இனிது உண்டு, உலகின்
   ஆர் இடர்களைந்தான்.

கம்பராமாயணம்

கருத்து உரை

அகத்தியர், தூய்மையான கடல்களின் நீர் முழுவதையும் உணவாக உண்டு அதனை மீண்டும் உமிழ்ந்த முனிவரும்;  அப்படிப்பட்ட செயலால் குறுகியது எனினும் விரும்பத்தக்க உடலை உடைய குறுமுனி என அத்தகையோரும்;  வஞ்சகச் செயல்களையுடைய வாட்படையுடைய அரக்கனாம் வாதாபி என்பவனின் வலிய உடலை மகிழ்ந்து உண்டு;  உலகமக்களின் கொடிய துன்பத்தைப் போக்கியவரும் ஆவார்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஆய

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஆய

பொருள்

  • நுண்மை
  • அழகு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும்
உருவத்தா லாய பயன்.

ஔவைக் குறள்

கருத்து உரை

உலக உயிர்கள் எவற்றுக்கும் பாவம் செய்யாது அறநெறியில் வாழ்தல், அவ்வாழ்விற்குத் தேவையான பொருட்செல்வத்தை எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமலும் குற்றமற்ற வழியிலும் ஈட்டுதல், அவ்வாறு  ஈட்டிய பொருளைத் தாமும் பிறரும் அனுபவித்து மகிழ்தல், அச்செய்கையின் விளைவாக உலக இருப்புக்களின்பால் இருக்கும் தீராத பற்றை விடுதல் ஆகிய இந்நான்கு  வகை வாழ்க்கை ஒழுகலாறுகளும்  இவ்வாறு இல்லாமல் மானுட உடல் தாங்கி இவ்வுலகில் பிறந்து வாழ்வதால் உண்டாகும் உண்மைப் பயன் என்ன?

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மறலி

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மறலி

பொருள்

  • எமன்
  • இயமன்
  • நமன்
  • கூற்றுவன்
  • மறலி
  • காலன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மலைபோன்ற செம்பொற்குவை வைத்தி ருப்பவர்
மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ
அலையாமல் அகத்தினை அத்தன் பால்வைத்தோர்
அழியாரென் றேநீ துணிந் தாடாய் பாம்பே

பாம்பாட்டிச் சித்தர்

கருத்து உரை

மலை அளவு பொற்குவியல் வைத்திருந்தாலும் எமன் வருகையில் அதை அள்ளிச் செல்வாரோ? (முடியாது என்பது துணிபு) . இவ்வாறு இல்லாமல் மனதினை தந்தையாகிய இறைவன் பால் வைத்தவர்கள் அழியாதவர்கள் என்று துணிந்து ஆடு பாம்பே (என்கிறார்)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மணிபூரகம்

தமிழ் அன்னை

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மணிபூரகம்

பொருள்

  • உந்திக்கமலம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

காணவே பிரம்மாவின் பதியைச் சொன்னேன்
கருவான மணிபூரகங் கருத்தைக் கேளு
தோணவே பிறை மூன்றாம் பிறைபோற்கீறித்
துலங்க அதில் ஈரைந்து பத்தும் போட்டு
பேணவே நிறமதுதான் பளிங்குபோலாம்
பிறைமூன்றாம் பிறை நடுவே மகாரமிட்டு
பூணவே சங்கிலி மங்கென்றேதான்
பூரணமாய்த் தினம் நூறு செபித்துக்காரே.

அகத்தியர் சௌமிய சாகரம்

கருத்து உரை

இதுவரையில் பிரம்மா ஆகிய தலைவனைப்பற்றிச் சொன்னேன். இனி மணிபூரகம் பற்றிய கருத்தினை கேட்பாயாக. பிறைபோல பிளவுப்பட்டதும் இரத்தினம்போல் விளங்குவதும் ஆகியது மணிபூரகம். அதைச் சுற்றிலும் பத்து இதழ்கள். பளிங்குபோன்ற நிறம் உடையது பிறைபோன்ற அதன் நடுவே மகாரம் இட்டு ‘********’ * என்று நாள்தோறும் நூறுமுறை செபம் செய்வாயாக.

* இது யோக மார்க்கமானது என்பதாலும், மந்திரங்கள்  குருமுகமாக அறியப்படவேண்டும் என்பதாலும் மந்திரங்கள் மறைபொருளாக்கப்பட்டுள்ளன.

மணிபூரகம்

புகைப்படம் / ஓவியம் : இணையம்

விளக்க உரை

  • மணிபூரகம் பத்து இதழ்கள், பத்து எழுத்துக்களைக் கொண்டு மூன்று வட்டங்களுடன் நடுவில் (மகார) எழுத்தும் மகாரத்தின் நடுவில், மகாவிஷ்ணும், மகாலட்சுமியும் நாபித் தானத்தில் எழுந்தருளியிருக்கும் அமைப்புடையது..
  • இது பச்சை நிறமுடையது.
  • 1008-நாடிநரம்புகளும் சூழ நாடி நரம்புகளுக்கெல்லாம் வேர் போல் உள்ளது
  • நெருப்பு ஜ்வாலையை (ஜடராக்னி) மையத்தில் கொண்டது இந்தச் சக்கரம். இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பத்து யோக நாடிகள் கிளம்புகின்றன. இதன் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை டட, ணத, தத, தந, பப என்ற எழுத்துக்களால் குறிப்பிடுகின்றனர். மணிப்பூரகத்தின் அதிதேவன் விஷ்ணு, அதிதேவதை லக்குமி/லாகிணி.
  • பீஜமந்திரம் ‘ரங்’
  • ஆண் தெய்வம் : பிராப்த ருத்திரன்
  • நீல நிற மேனி, வெள்ளிக் கழுத்து, இரு கைகளுடனும் தங்கப் புலித் தோலில் அமர்ந்த திருக்கோலம்.
  • கைகளில் – சூலம், உடுக்கை, மலர்
  • பெண் தெய்வம் : பெயர் : லாகிணி.
  • மூன்று தலைகள், நான்கு கைகள்
  • கைகளில் – வஜ்ராயுதம்(இடி), காமத்தை தூண்டும் அம்பு, நெருப்பு, முத்திரை

துக்கடா

ருத்ரயாமளம் என்ற தந்திரநூலின்படி மணிபூரகம் 2 விதமான பைரவர் மண்டலமாக குறிப்பிடப்படுகிறது.

வெண்ணிறமேனியுடன், பல அணிகள் அணித்தோர், அர்மாலை, அங்குசம், ஏடு(புத்தகம்), குழல் ஆகியவற்றை ஏந்தியவர்கள்.

  1. ருருபைரவர் – தலைமை .
  2. குரோத தம்ஷடரர்
  3. ஜடாதரர்
  4. விஸ்ரூபர்
  5. வஜ்ரஹஸ்தர்
  6. மஹாகாயர்
  7. வீருபார்
  8. க்ரீடனர்

இந்த தொகுதி ருரு பைரவர் மண்டலம்

நீலநிறமேனியுடன் மிக்க அழகுடயவராய் நான்கு கரங்களிலும், அழல், கதை, குண்டிகை, சக்தி ஆகிய படைக்கலன்களை தாங்கியோராவர்.

  1. சண்டபைரவர் – தலைமை
  2. பிரளயாந்தகர்
  3. பூமிகம்பர்
  4. நீலகண்டர்
  5. விஷ்ணு
  6. குலபாலகர்
  7. முண்டபாலர்
  8. காமபாலர்

இவர்களின் தொகுதி சண்டபைரவர் மண்டலம் என்றழைக்கப்படுகின்றது.

சித்திகளை வழங்குவது பைரவர்களுடன் உறையும் யோகினிகளே என்பதால் இவைகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சுவாதிட்டானம்

தமிழ் அன்னை

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  சுவாதிட்டானம்

பொருள்

  • தனது இடம்
  • கொப்பூழ்
  • சுவாதிஸ்டானம் – வடமொழி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அடையாளம் உரைத்த மூலவட்டத்தின் மேல்
அச்சுதனுமிருக்குமந்த பிறை கீழாக
கலைமளோடணைய நிற்கும் கமலந்தன்னில்
கடிய நால் வட்டமடா சுவாதிட்டானம்
துடியாக பவிழ நிறவர்ணமாக
தொல்லுலகில் கம்பம் கால் வசங்கள் சுற்றி
கடிய அலகை திருபதினாறு வீதி
காணவே பஞ்சமியில் பிறை போலாமே.

வர்மலாட சூத்திரம் 300

கருத்து உரை

இவ்வாறு அடையாளமாக உரைத்திட்ட மூலாதாரத்தின் மேல் மகாவிஷ்ணு தலத்திற்கு கீழாக கலைமகளோடு இருக்கும் தாமரை தன்னில் நான்கு சதுரங்களை உடையது சுவாதிட்டானம். இது பவழ நிறம் இருக்கும். இவ்வாறாக வாசியின் வழியாக மூச்சின் முறையை மாற்றி ஆக்கினை வரை காணவே ஆதாரங்களை கடந்து இறை தரிசனம் பெறலாம்.

சுவாதிட்டானம்

ஓவியம் : இணையம்

விளக்க உரை

  • ‘ஸ்வ:’ என்கிற சொல்லானது பரமானலிங்கம் எனும் பொருள்படும். சுவாதிட்டானம்: ஆறு இதழ்த் தாமரை வடிவமுடையது. அதன் நடுவே நாற்சதுரவடிவம் போன்றும் உள்ளது. இதில் “ந” என்ற ஒலி இருக்கும். அட்சரத்தில் பிரம்மாவும் சரஸ்வதியும் வீற்றிருப்பார்கள்
  • இதன் பீஜமந்திரம் ‘வம்’.
  • இது நீர் தத்துவத்தை குறிக்கிறது.
  • குண்டலினியில் இருந்து வெளிப்படும் செஞ்சுடரைச் சுவாதிட்டானத்தில் மனம் காணும் ஆற்றலைப் பெறுமாயின் அதுவே பேரின்பம் அடைவதற்கான அறிகுறி
  • மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர்ராகிணி (அ) சாகிணி. செந்தாமரையில் அமர்ந்து சிகப்பு நிற புடவை அணிந்து இரண்டு தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறாள். மண்டையோடு, அம்பு, கோடாரி, உடுக்கை ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறாள்.
  • திருபதினாறு வீதி – ஆக்கினை
  • ‘உந்திகமலத்து உதித்து நின்ற பிருமாவைச் சந்தித்து காணமல் தட்டழிந்தேன் பூரணமே!’ என பூரணமாலையில் பட்டினத்து அடிகள் குறிப்பிடுவதும் இச் சக்கரத்தையே!

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மூலாதாரம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மூலாதாரம்

பொருள்

  • ஆறு ஆதாரங்களில் நான்கு இதழ் தாமரை போலுள்ள சக்கரம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பாரப்பா மூலமென்ற முட்டைக்குள்ளே
பதியான அக்ஷரந்தான் ஓங்காரமாச்சே
நேரப்பா நின்ற ஓங்காரத்தோடே
நிசமான ரீங்காரம் உகாரங் கூட்டி
சாரப்பா தன்மனமே சாக்ஷியாக
தன்மையுடன் தானிருந்து செபிப்பாயாகில்
காரப்பா கணபதியும் வல்லபையுமைந்தா
கனிவாக உந்தனிடம் கனிவார் காணே

அகத்தியர் சௌமியசாகரம்

கருத்து உரை

மூலாதாரத்தின் அதிபதி கணபதி மற்றும் வாலை தாய். இது முட்டை வடிவமும்  அதனை சுற்றி நான்கு தாமரை இதழ் கொண்ட அமைப்பும் உடையது. இதற்கு தலைவனாக விளங்கக்கூடியது ஓங்காரம். இவ்வாறு இருக்கும் ஓங்காரத்துடன் ‘ ஓம் ரீம் உம்’ ஆகிய அட்சரங்களை கூட்டி தனது மனதினை சாட்சியாக வைத்து ஜபம் செய்ய கணபதியும் வல்லபையும் மனம் கனிந்து உன்னிடத்தில் வருவார்கள்.

விளக்க உரை

  • மூலாதாரக் கடவுள் – வினாயகர். அவர் ஓங்கார வடிவம் என்பதாலும் மூலாதாரத்தில் ஜபம் செய்யும் போது வினாயகர் தோன்றுவார் எனும் பொருளிலும் விளக்கப்பட்டுள்ளது.
  • தன்மனமே சாக்ஷியாக – சாட்சி பாவனையுடன் கூடிய வழிபாடு
  • இந்த மூலாதார சக்கரத்திற்கு வடிவம் வட்டத்தின் உள் அமைந்த முக்கோணமும் அதன் நடுவில் நான்கு இதழ்களும், அந்த இதழ்களில் ஒவ்வொன்றிலும் வல வரிசையாக மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் ஆகிவற்றால் குறிப்பிடப்படுகின்றன. இவைகளுக்கான அக்ஷரங்கள் ‘வ, ச, ஷ, ஸ.’

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – முண்டம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  முண்டம்

பொருள்

  • நெற்றி
  • தலை, கை, கால் போன்றவற்றைத் தவிர்த்து இருக்கும் உடல் மட்டும்
  • அறிவற்றவன் (வசைச்சொல்லாக)

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

முண்டந்தரித் தீர்முது காடுறைவீர்
முழுநீறுமெய் பூசுதிர் மூக்கப்பாம்பைக்
கண்டத்திலுந் தோளிலுங் கட்டிவைத்தீர்
கடலைக்கடைந் திட்டதோர் நஞ்சையுண்டீர்
பிண்டஞ்சுமந் தும்மொடுங் கூடமாட்டோம்
பெரியாரொடு நட்பினி தென்றிருத்தும்
அண்டங்கடந் தப்புறத்தும் மிருந்தீர்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே

தேவாரம் – 7ம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

இறைவரே, அடியார்களாகிய நாங்கள் `பெரியாரொடு நட்பு கொள்ளுதல் இன்பம் தருவது` என்று கருதியிருந்தாலும், நீர் கபால மாலையை அணிந்துள்ளீர், மயானத்தில் வாழ்வீர், அதன்கண் உள்ள சாம்பலை உடல் முழுதும் பூசிக் கொள்வீர், கொடிய பாம்பைக் கழுத்திலும் தோளிலும் கட்டி வைத்திருக்கின்றீர், தேவர்கள், கடலைக் கடைந்து அதில் இருந்து பெறப்பட்ட பெரிய விஷத்தினை எளிதாக உண்டீர்,  இந்த அண்டத்தைக் கடந்து, அதற்கு மேல் உள்ள அண்டத்துக்கும் அப்பால் இருப்பீர். அதனால், ஊனினது திரட்சியாகிய இவ்வுடம்பைச் சுமந்துகொண்டு உம்மோடு தொடர்புகொள்ள வல்லமை இல்லாதவர்களாக இருக்கிறோம். ஆதலினால், உம்மை அணுகிநின்று உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.

Loading

சமூக ஊடகங்கள்