ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – வம்பு
பொருள்
- சண்டை
- வீண் வார்த்தை
- பழிமொழி
- தீம்பு வார்த்தை
- சரசச் செயல்
- வஞ்சனை
- பயனிலாமை
- நிலையின்மை
- புதுமை
- படிறு
- உவமை
- வாசனை
- அரைக் கச்சு
- கையுறை
- மேற் போர்வை
- சிவிகையின் வளைகொம்பு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் – நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாய்என்நோய்
பின்னவலம் செய்வதெனோ பேசு.
11ம் திருமுறை – நம்பியாண்டார் நம்பிகள் – திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை
கருத்து உரை
பூங்கொம்பைப் போன்ற வள்ளியின் நாயகனாகிய முருகன் அடையாதபடி சர்சைக்குரிய மாம்பழத்தை பெற்றுக்கொண்டவரும், திருநாரையூரில் உன்னை நம்பி அடைபவர்களுக்கு அருளுபவரும், சிவபெருமானை வலம் வந்து பெற்றுக் கொண்ட துதிக்கையை உடையவரே எனக்குத் துன்பம் செய்வது ஏன் என்பதைச் சொல்வாயாக.