ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – ஆதிப்பிரமம்
பொருள்
- இறைவன்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
மாதிவர் பாகன் மறைபயின்ற
வாசகன் மாமலர் மேயசோதி
கோதில் பரங்கரு ணையடியார்
குலாவுநீ திகுண மாகநல்கும்
போதலர் சோலைப் பெருந்துறையெம்
புண்ணியன் மண்ணிடை வந்திழிந்
தாதிப் பிரமம் வெளிப்படுத்த
அருளறி வாரெம்பி ரானாவாரே.
தேவாரம் – 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்
கருத்து உரை
பெண் பொருந்திய பாகத்தனும், வேதம் சொன்ன மொழியையுடையவனும், உயர்ந்த இதயமலரில் வீற்றிருக்கும் ஒளிப்பிழம்பானவனும், குற்றமற்ற மேலான கருணையாளனும், அடியார்கள் கொண்டாடுகின்ற நீதியினையே, குணமாக அவர்களுக்கு அருள்புரியும், அரும்புகள் மலர்கின்ற, சோலை சூழ்ந்த, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும், எமது புண்ணியப்பொருளானவனும் ஆகிய இறைவன், மணணுலகத்தில் வந்து இறங்கி, எல்லாவற்றுக்கும் முதலாயுள்ள பெரும் பொருளாகிய தனது தன்மையை வெளிப்படுத்திய, அருளின் அருமையை அறிய வல்லர்கள், எம்பிரான் ஆவார்கள்.