ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – காயம்
பொருள்
- அடி முதலியப் பட்டதனாலான புண்
- வடு
- உடல்
- ஆகாயம்
- உறைப்பு
- மிளகு
- காழ்ப்பு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
தூய கடல் நீர் அடிசில் உண்டு,
அது துரந்தான்;
ஆய அதனால் அமரும் மெய்
உடையன் அன்னான்;
மாய-வினை வாள் அவுணன்
வாதவிதன் வன்மைக்
காயம் இனிது உண்டு, உலகின்
ஆர் இடர்களைந்தான்.
கம்பராமாயணம்
கருத்து உரை
அகத்தியர், தூய்மையான கடல்களின் நீர் முழுவதையும் உணவாக உண்டு அதனை மீண்டும் உமிழ்ந்த முனிவரும்; அப்படிப்பட்ட செயலால் குறுகியது எனினும் விரும்பத்தக்க உடலை உடைய குறுமுனி என அத்தகையோரும்; வஞ்சகச் செயல்களையுடைய வாட்படையுடைய அரக்கனாம் வாதாபி என்பவனின் வலிய உடலை மகிழ்ந்து உண்டு; உலகமக்களின் கொடிய துன்பத்தைப் போக்கியவரும் ஆவார்.