ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – ஓங்கல்
பொருள்
- மலை
- செங்குத்துப் பாறை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல் / பதப் பிரிப்பு
ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.
ஓங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கு ஒலி நீர் ஞாலத்து இருள் அகற்றும்- ஆங்கம் அவற்றுள்
மின் ஏர் தனியாழி வெங்கதிர் ஒன்றே அனையது
தன் ஏர் இலாத தமிழ்
தண்டியலங்காரம்
கருத்து உரை
மலையில் தோன்றி, உயர்ந்தவர் தொழுமாறு விளங்கி, இந்த உலகத்து இருளையெல்லாம் அகற்றுபவை இரண்டு. அவற்றுள் ஒன்று மின்னுகின்ற எதுவும் கலவாத தனித்தன்மையான கதிரவன் என்னும் ஞாயிறு. மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி என்றவாறு.