ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – வெருவுதல்
பொருள்
- அஞ்சுதல்
- வெருவுதல்
- அச்சம் கொள்ளுதல்
- பயம் கொள்ளுதல்
- வெருவுதல்
- வெருளுதல்
- மருட்சி கொள்ளுதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! – வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்*
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே!
அபிராமி அந்தாதி
கருத்து உரை
என் தாயே, அபிராமியே, மனிதராய்ப் பிறந்த எவராலும் அறிய இயலாத வேதத்தின் பொருளை உனது பேரருளால் அறிந்து கொண்டேன். அதை அறிந்து கொண்டு உனது திருவடிகளே சரணமென்று சரணடைந்தேன். உனது அருள் பெற்ற அடியார்களின் பெருமைகளை அறியாமல், உன்னைத் தொழாமல், தீய செயல்கள் புரிந்து நரகத்தில் மந்தையாக விழக் காத்திருக்கும் இம்மனிதர்க் கூட்டங்களை கண்டு அஞ்சி அவர்களிடம் இருந்து விலகி விட்டேன்.
விளக்க உரை
அறியா மறை
- வேதம்,
- மறைபொருளான உண்மைகள் என்றும் பொருள் கொள்ளலாம்.