‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – பக்கல்
பொருள்
- பக்கம்
- இனம்
- பிறை நாள்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
நிழலார் சோலை நீல வண்டினங்
குழலார் பண்செய் கோலக் காவுளான்
கழலான் மொய்த்த பாதங் கைகளால்
தொழலார் பக்கல் துயர மில்லையே.
தேவாரம் – 1ம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்து உரை
நிழல் செறிந்த சோலைகளில் நீல நிறம் பொருந்திய வண்டு இனங்கள் குழல் ஒலிப்பது போல இசை வழங்கும் திருக்கோலக்காவில் விளங்கும் சிவபிரானுடைய வீரக்கழல் செறிந்த திருவடிகளை நோக்கி கைகூப்பித் தொழுபவர் பக்கம் துயரம் வாராது.