ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – கதிர்
பொருள்
- ஒளிக்கதிர்
- சூரியகிரகணம்
- ஒளி
- வெயில்
- சூரியசந்திரர்
- நெற்கதிர்
- இருப்புக்கதிர்
- நூல்நூற்குங்கருவி
- சக்கரத்தின்ஆரக்கால்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
கதிர்கண்ட காந்தம் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாம்
சதிர்கொண்ட சாக்கி சரியன் வடிவாம்
எதிர்கொண்ட ஈசன் எழில்வடி வாமே.
திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – திருமூலர்
கருத்து உரை
சூரியனைக் கண்ட சூரியகாந்தக்கல் நெருப்பு வடிவம் பெறும்; சந்திரனைக் கண்ட சந்திரகாந்தக்கல் முத்துப்போன்று நீர் வடிவாய் நீரை உமிழும்; கண்ணுக்கு உதவியாக அணியப்படும் ஆடி ஆகிய `உபநேத்திரம்` பார்வை வழியை நன்கு தெரிவிக்கும்; (அது போல) சிவனை உள்ளத்தில் ஏற்றுக் கொண்ட உயிர்கள் அந்தச் சிவன் வடிவம் பெறும்.