ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – வங்கை
பொருள்
- பகை
- குறும்பு.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
எங்கள்தேவர் உங்கள்தேவர் என்றிரண்டு தேவரோ
இங்குமங்கு மாய் இரண்டு தேவரே இருப்பரோ
அங்குமிங்கு மாகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரஞ் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே.
சிவவாக்கியர்
கருத்து உரை
தேவர்களில் உங்கள் தேவர், எங்கள் தேவர் என்று இரண்டு தேவர்கள் இருக்கிறார்களா? இங்கும் அங்கும் இரண்டு தேவர்கள் இருக்கிறார்களா? அங்கும் இங்குமாய் நின்ற ஆதி மூர்த்தி ஒருவரே. இவ்வாறு பகைகொண்டு மாறுபாடான கருத்துக்களை சொல்லுபவர்கள் மிக மோசமான நிலை அடைந்து இறப்பார்கள்.
விளக்க உரை
- அகச் சமயம் ஆறும் (வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், பிங்கலம்.), புறச் சமயங்களான சைவம், வைணவம், சாக்தம், செளரம், காணாபத்யம், கெளமாரம் ஆகிய நிலைகளில் இருந்து அருள்பவன்.
- மனம் நிலையில்லாமல் ஒடுகிறது என்பதை குறிக்கவே இரண்டாம் வரிகளில் இங்கும் அங்குமாகி என்றும், மனம் நிலை பெற்றப்பின் புறத்தில் இருக்கும் மூர்த்தியே அகத்தில் இருக்கிறார் என்பதை குறிக்கவே மூன்றாம் வரிகளில் அங்கும் இங்கும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.(இது என் சிற்றறிவுக்கு எட்டியது – வேறு விளக்கங்கள் தெரிவித்தால் அறிந்து கொள்வேன்).