ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – மூலாதாரம்
பொருள்
- ஆறு ஆதாரங்களில் நான்கு இதழ் தாமரை போலுள்ள சக்கரம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பாரப்பா மூலமென்ற முட்டைக்குள்ளே
பதியான அக்ஷரந்தான் ஓங்காரமாச்சே
நேரப்பா நின்ற ஓங்காரத்தோடே
நிசமான ரீங்காரம் உகாரங் கூட்டி
சாரப்பா தன்மனமே சாக்ஷியாக
தன்மையுடன் தானிருந்து செபிப்பாயாகில்
காரப்பா கணபதியும் வல்லபையுமைந்தா
கனிவாக உந்தனிடம் கனிவார் காணே
அகத்தியர் சௌமியசாகரம்
கருத்து உரை
மூலாதாரத்தின் அதிபதி கணபதி மற்றும் வாலை தாய். இது முட்டை வடிவமும் அதனை சுற்றி நான்கு தாமரை இதழ் கொண்ட அமைப்பும் உடையது. இதற்கு தலைவனாக விளங்கக்கூடியது ஓங்காரம். இவ்வாறு இருக்கும் ஓங்காரத்துடன் ‘ ஓம் ரீம் உம்’ ஆகிய அட்சரங்களை கூட்டி தனது மனதினை சாட்சியாக வைத்து ஜபம் செய்ய கணபதியும் வல்லபையும் மனம் கனிந்து உன்னிடத்தில் வருவார்கள்.
விளக்க உரை
- மூலாதாரக் கடவுள் – வினாயகர். அவர் ஓங்கார வடிவம் என்பதாலும் மூலாதாரத்தில் ஜபம் செய்யும் போது வினாயகர் தோன்றுவார் எனும் பொருளிலும் விளக்கப்பட்டுள்ளது.
- தன்மனமே சாக்ஷியாக – சாட்சி பாவனையுடன் கூடிய வழிபாடு
- இந்த மூலாதார சக்கரத்திற்கு வடிவம் வட்டத்தின் உள் அமைந்த முக்கோணமும் அதன் நடுவில் நான்கு இதழ்களும், அந்த இதழ்களில் ஒவ்வொன்றிலும் வல வரிசையாக மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் ஆகிவற்றால் குறிப்பிடப்படுகின்றன. இவைகளுக்கான அக்ஷரங்கள் ‘வ, ச, ஷ, ஸ.’
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)