ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – சலவர்
பொருள்
- வஞ்சகர்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
*சலவரைச்* சாரா விடுதல் இனிதே;
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே;
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது.
இனியவை நாற்பது – பூதஞ் சேந்தனார்
கருத்து உரை
வஞ்சகர்களை சாராமல் அவரை விட்டு நீக்குதல் இனியது. அறிவுடையாருடைய வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது. பூமியில் வாழ்கின்ற உயிர்கள் உரிமையுடன் வாழ்தல் இனிது