சைவத் திருத்தலங்கள் 274 – திருவல்லம்

·   மூலவர் – சுயம்புத் திருமேனி,; சதுரபீட ஆவுடையார்.
·   மூலவர் கருவறை அகழி அமைப்புடையது; கருவறைச் சுவர்கள் நிறைந்த கல்வெட்டுக்கள்
·   இறைவன், தீர்த்தத்தின் பொருட்டு, ‘நீ, வா’ என்றழைக்க, இந்நதி அருகில் ஓடிவந்து பாய்ந்ததால் நதியின் பெயர்  ‘நீ வா ‘ நதி. தற்போதைய பெயர்  ‘பொன்னை’ ஆறு
·   பாம்புப் புற்றுக்குப் பசு நாள்தோறும் பாலைச் சொரிந்து வழிபட புற்று கரைந்து சிவலிங்கம் தோன்றியது என்றும் ஒரு நம்பிக்கை
·   மூலஸ்தான விமானத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியே திருவுருவங்கள்
·   இறைவனுக்கு கஞ்சன் மலையில் இருந்து அபிஷேக நீர் கொண்டு வரும் அர்ச்சகரை தொல்லை செய்ததற்காக  கஞ்சனை நந்தி எப்பெருமான் பாகங்களாக கிழித்தல்
·   அதன் பொருட்டு அவன் மீண்டும் வராமல் இருக்க வாசல் நோக்கிய நந்தி
·   உக்கிர வடிவிலிருந்த இந்த அம்பாளை ( ‘தீக்காலி அம்பாள்’ (ஜடாகலாபாம்பாள்)), சாந்தப்படுத்தியது ஆதி சங்கரர்.
·   விநாயகர் சிவபெருமானைச் சுற்றிவந்து அற்புத மாங்கனியை இத்தலத்தில் பெற்ற சிறப்புடையது இத்தலம். தல வினாயகர் ‘கனி வாங்கிய வினாயகர்’ கையில் மாங்கனியுடன்
·   இறைவனருளால்  காஞ்சனகிரியில்(கஞ்சன் மலை) அசுரனின் குருதி பட்ட இடத்திலெல்லாம் அவ்விடத்தைப் புனிதப்படுத்த சிவலிங்கங்கள் உண்டாயின
·   வலது துவாரபாலகர் அழகிய புன்னகையுடன் கூடிய திருமுகம்
·   இங்குள்ள பெருமானை விஷ்ணு வழிபட்டதால், விஷ்ணுவின் பாதம் பத்மபீடத்தில் கொடிமரத்தின் முன்பு
·   சனகாதி முனிவர்களில் ஒருவரான சனகரின் ஜீவ சமாதி அமைந்துள்ள இடம்
·   ஒளவையார் நெல்லிக்கனியைப்  பெற்ற தலம்
·   சிவானந்த மௌனசுவாமிகள் தலம்

தலம்
திருவல்லம்
பிற பெயர்கள்
திருவலம், வில்வவனம்,வில்வாரண்யம், தீக்காலி வல்லம்
இறைவன்
வில்வநாதீஸ்வரர், வல்லநாதர்.
இறைவி
தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை.
தல விருட்சம்
வில்வம்
தீர்த்தம்
நீவாநதி, கௌரி தீர்த்தம்
விழாக்கள்
பிரம்மோற்சவம்
மாவட்டம்
வேலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு வில்வ நாதேஸ்வரர் திருக்கோவில்
திருவலம் அஞ்சல்
வழி இராணிப்பேட்டை
காட்பாடி வட்டம்
வேலூர் மாவட்டம்
PIN – 632515
சிவாச்சாரியார் உமாபதி – 9894922166, 0416 – 2236088, சிவன் 9245446956
வழிபட்டவர்கள்
கௌரி, மஹாவிஷ்ணு, சனகமுனிவர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
சென்னை – காட்பாடி ரயில் பாதையில் உள்ள திருவல்லம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மி.
ஆற்காட்டிலிருந்து ராணிப்பேட்டை வழியாக காட்பாடி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது.
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 242 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது  10 வது தலம்.
வில்வநாதீஸ்வரர்



வல்லாம்பிகை



புகைப்படம் : தினமலர்

பாடியவர்                திருஞானசம்பந்தர்            
திருமுறை               1      
பதிக எண்                113  
திருமுறை எண்          8     
பாடல்
 
இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங்
ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம்
நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே
திகழ்ந்தவன் உறைவிடந் திருவல்லமே.
பொருள்
 
கையிலை மலையை இகழ்ந்து பேசி அதை எடுத்து அப்புறப்படுத்தலின் பொருட்டு முயன்ற இராவணனை அடக்கிய திருவடியை உடையவனும், திருவடியை உண்மை பொருளாக உடைய அன்பர்கள் தேடி வருந்தும் அவர்கள் உள்ளத்தில் திகழ்பவனும் ஆகிய சிவபெருமான் உறையும் தலம் திருவல்லமாகும்.
கருத்து
அடந்த திருவடி –  மிகப்பெரிய திருவடி
பாடியவர்                திருஞானசம்பந்தர்            
திருமுறை               1      
பதிக எண்                113  
திருமுறை எண்          9     
பாடல்
பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
அரியவ னருமறை யங்கமானான்
கரியவ னான்முகன் காணவொண்ணாத்
தெரியவன் வளநகர் திருவல்லமே.
பொருள்
பெரியவனும்(எல்லாவற்றிலும், எல்லாரிலும்), அறிவில் சிறந்தவர்களால் சிந்தித்து அறிய இயலாதவனும், அரிய வேதங்கள் மற்றும் அதன் அங்கங்களும் ஆனவனும், கரிய நிறமுடைய திருமால் மற்றும் பிரம்மா ஆகியவர்களால் காணப்படா முடியாதவனும், அன்பில் சிறந்தவர்களால் காணக்கூடியவனும் ஆகிய சிவன் உறையும் நகர் திருவல்லமாகும்
கருத்து

தெரியவன் – தெரியநிற்பவன். பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு தெரிபவன்.
 
இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.
 
 
 

Loading

சமூக ஊடகங்கள்

2016 – பொங்கல் – பயணவழிக் குறிப்புகள் – அகம் புறம்

சென்னையில் இருந்து சிதம்பரம் வரை நின்று கொண்டே பயணம்
அகம்
·   நின்று கொண்டே வந்ததில் 10 வயது சிறுவர்களும் அடக்கம்.
·   பெரும்பாலானவர்வகள் மொபைலில் whatsapp பார்த்துக் கொண்டே வந்தார்கள்.
·   சிலர் Tab ல் சிவாஜி படப்பாடல், சண்டி வீரன் படப்பாடல் எனப்பார்த்துக் கொண்டே வந்தார்கள். இன்னும் சிலர் எட்டிப்பார்த்து அந்த பாடல்களைப் பார்த்துக் கொண்டே வந்தார்கள்.
·   சிலர் bubbles விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
·   ‘பய புள்ளங்க என்னமா பேர் வைக்குதுங்கடா, Darling, Chellam’ என்று சிறு மாணவர்கள் குழு பேசிக் கொண்டு வந்தது.
·   அடுத்த இருக்கையில் இருப்பவர்களுக்கு தனது சிறு பிஸ்கட் போன்றவற்றை கூட தராமல் மற்றவர்களை பற்றி நினைக்கக் கூட மனமில்லாமல் தானே உண்டார்கள்.
·   பேருந்தில் இருக்கும் எல்லா பைகளையும் விடுத்து ஒரே ஒருவரிடம் இருக்கும் ஒரு பையை போலீஸ்கார் சோதனை செய்கிறார். அதில் ஒரு Full. (அதை இழக்கையில் அவன் சலனமே கொள்ளவில்லை ) –  பாவம் அவன் மனசு என்ன பாடு பட்டிருக்கும் என்று சிலர் பேசிக் கொண்டு வந்தார்கள்.
புறம்
·   ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 25 கார்கள் ஒரு பேருந்தினைக் கடக்கின்றன.
· Toyota Fortuner  போன்ற கார்களில் பின்னிருக்கையில் ஒருவர் மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள்
·   Alto போன்ற கார்களில் சராசரியாக ஓட்டுபவர் தவிர்த்து 6 பேர் அமர்ந்திருக்கிறார்கள்.
·   பெரிய சொகுசுக் கார்களில் பெரும்பாலும் அன்றைய தினசரிகள் கலைந்து கிடக்கின்றன.
· ‘‘5 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த சென்னை போலீஸ்காரர்‘ போன்றவை செய்திகளில் முதன்மையான செய்திகளாக படிக்கிறார்கள்
· சிறிய மற்றும் விலை குறைவான கார்களில் சிறிய தெய்வங்களின் விக்ரகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் 2ல் இருந்து 3 முழம் வரை சாமந்தி மற்றும் மல்லிகை போன்ற மாலைகள் தொங்குகின்றன.
· விலை குறைவான கார்களில் மனைவி ஓட்டுனர் இருக்கைக்கு அருகினில் அமர்ந்திருக்கிறார், குழந்தைகள் dash board ல்  சாய்ந்துதூங்குகின்றன. பின்னிருக்கை காலியாகவே இருக்கிறது.
·   பெரும்பாலும் காரில் பயணிப்பவர்கள் பேருந்தில் இருக்கும் கூட்டதை கண்டு வியப்புற்று அது குறித்து பேசிச் செல்கிறார்கள்
·   2 சக்ர வாகனங்களில் குறைந்தது 3 பேர் பயணிக்கிறார்கள். சில வாகனங்களில் குடும்ப உறுப்பினர்கள் 5 பேரும் பயணிக்கிறார்கள். இது நீண்ட தொலைவு பயணம் என்பது அவர்களுக்கு மறந்து விடுகிறது.

புகைப்படம் :  Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருப்பனங்காடு

தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள் – திருப்பனங்காடு
·   அகத்தியர் தான் ஸ்தாபித்த ஈசன் தாலபுரீஸ்வரருக்கு பனம்பழம் படைத்து வழிபட்டதால் பனைமரமே தல விருட்சம்.  இதனாலேயே இறைவன் தாளபுரீஸ்வரர் என்கிற பனங்காட்டீர்
·   அகத்தியர் பூசித்தபோது, இறைவன் சடாமுடியிலுள்ள கங்கை, தீர்த்தமாக வெளிப்பட்டதால் இது  சடாகங்கை தீர்த்தம்
·   அகத்திய முனிவரின் சீடரான புலத்தியர்  ஸ்தாபித்து வழிபட்து  கிருபாநாதேஸ்வரர்
·   சுந்தரருக்கு உண்ண உணவும் பருக நீரும் கொடுத்த இடம்
·   வடலூர் வள்ளற்பெருமானின் வாக்கிலும், பட்டினத்தடிகளின் திருவேகம்பர் திருவந்தாதியிலும் இத்தலம் குறிக்கப்பட்டுள்ளது
·   உள் மண்டபத்தில் கல் தூண்களில் மிக அரிய சிற்பங்கள் – நாகலிங்கம் சிற்பம், ராமர் சிற்பம், வாலி – சுக்ரீவர் போரிடும் சிற்பம். இராமர் சிற்பத்திடம் நின்று பார்த்தால் வாலி சுக்ரீவ போர்ச்சிற்பம் தெரியும்; ஆனால் வாலி சுக்ரீவ சிற்பத்தின் பார்வைக்கு இராமர் சிற்பம் தெரியவில்லை.
·   கஜப்பிரஷ்ட விமான அமைப்பு
 
தலம்
திருப்பனங்காடு
பிற பெயர்கள்
வன்பார்த்தான் பனங்காட்டூர், திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனங்காடு
இறைவன்
தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர்), கிருபாபுரீஸ்வரர், சோமாஸ்கந்தர்
இறைவி
கிருபாநாயகி, அமிர்தவல்லி
தல விருட்சம்
பனை
தீர்த்தம்
ஜடாகங்கை தீர்த்தம், சுந்தரர் தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
திருவண்ணாமலை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோவில்
திருப்பனங்காடு அஞ்சல்
வழி வெம்பாக்கம்
செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
PIN – 604410
044-2431 2801, 98435 68742
வழிபட்டவர்கள்
அகஸ்தியர், புலஸ்தியர், கண்வ முனிவர்
பாடியவர்கள்
சுந்தரர் – 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 7 கி.மி. வந்தவாசி சாலை ->  ஐயன்குளம் கூட்டுசாலை -> வலதுபுறம் திரும்பி சுமார் 7 கி.மி. நேராக செல்ல, திருப்பனங்காட்டூர் குறுக்கு சாலை சந்திப்பு  ->  வலதுபுறம் திரும்பி சுமார் 2 கி.மி. -> திருப்பனங்காடு கிராமம் -> ஆலயம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 241 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   9  வது தலம்.
அம்பிகை, திருமால் மற்றும் சந்திரன் ஆகியவர்கள் வழிபட்ட தலம்
தாளபுரீஸ்வரர்
 
 
 
அமிர்தவல்லி
 
 
 
புகைப்படம் : தினமலர்

பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7ம் திருமுறை 
பதிக எண்                    086
திருமுறை எண்               7
பாடல்
மெய்யன்வெண் பொடிபூசும் விகிர்தன்வே தமுதல்வன்
கையின்மான் மழுவேந்திக் காலன்கா லம்மறுத்தான்
பைகொள்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்
ஐயன்எங் கள்பிரானை அறியாதார் அறிவென்னே
பொருள்
மெய்ப் பொருளாய் இருப்பவனும், வெண்ணீற்றைப் பூசுகின்றவனும், மாறுபட்ட இயல்பினனும், வேதங்களுக்கு முதல்வனும், கையில் மான் மழுக்களை ஏந்துபவனும், காலனது காலத்தை இடைமுரிவித்தவனும், படத்தைக் கொண்ட பாம்பினை இடுப்பில் அணிந்தவனும் யாவர்க்கும் தலைவனும் ஆகி பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் கள்ளப் பெருமானை அறியாதவரது அறிவுதான் என்னே !
கருத்து
 
காலன்கா லம்மறுத்தான் – காலங்களை ஆட்சி செய்யும் காலனையும் முடிவு செய்பவன்
பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7ம் திருமுறை 
பதிக எண்                    086
திருமுறை எண்               9
பாடல்
மழையானுந் திகழ்கின்ற மலரோனென் றிருவர்தாம்
உழையாநின் றவருள்க உயர்வானத் துயர்வானைப்
பழையானைப் பனங்காட்டூர் பதியாகத் திகழ்கின்ற
குழைகாதற் கடிமைக்கட் குழையாதார் குழைவென்னே
பொருள்
மேகம் போன்ற நிறத்தை உடைய திருமால், தாமரை மலர் மேல் இருப்பவராகிய பிரம்மன் ஆகிய இருவரும் பணி செய்கின்றவராய் நினைந்து நிற்க, உயர்ந்த வானத்தை விட உயராமாக இருப்பவனும், எல்லாரையும் விட மூத்தவனும், பனக்காட்டூரில் உறையும் பதியாகிய குழை அணிந்த காதுகளை உடைய பெருமானுக்கு அடிமையாய் தொண்டு செய்து மனம் குழையாதவர் மன நெகிழ்ச்சி தான் என்னே?
கருத்து
உயர் வானம் –  வானத்தினது இயல்பை கூறி  அதனினும் உயர்தல் என்றது
பழையானை – காலங்களுக்கு முற்பட்டு நிற்பதால் எல்லாரையும் விட மூத்தவன்
Ref :
1.
நிலாவு புகழ் திருவோத்தூர் திரு ஆமாத்தூர் நிறைநீர்
சுலாவு சடையோன் புலிவலம் வில்வலம் கொச்சை தொண்டர்
குலாவு திருப்பனங்காடு நன் மாகறல் கூற்றம் வந்தால்
அலாய் என்று அடியார்க்கு அருள்புரி ஏகம்பர் ஆலயமே.”
(பட்டினத்தடிகள்)
(இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

பொன்னான மந்திரம்

எச்சில் பட்டு தெறிக்கும்
வார்த்தைகளுக்கு
கட்டுப்படுகிறதோ இல்லையோ மனம்
மகளின் மௌனங்களுக்கு மட்டும்.

*பொன்னான மந்திரம் – பொன் பொன் போன்றது. வாயால் ஓதக் கூடா மந்திரம். திருமந்திரம் – 4ம் திருமுறை – 906
புகைப்படம் : அபிதா சுந்தர்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 21/25 நீலகண்டர்



வடிவம்

•
 உருவத்திருமேனி
• இம் மூர்த்தம் சிவனின் அகோர மூர்த்தத்தை முன்னிருத்தியது.
• ஆலால நஞ்சை உண்டபின் கருங்கழுத்துடன் ஈசன் காட்சிதரும்  கோலம்
• முன்னிரு கரங்கள்  – அஞ்சல், அபயம் 
• பின்னிரு கரங்கள் –  மான்,  மழு
• திருமுடி – நிலவு 
• கரிய கழுத்து 
• உமையவள் அருகிருக்கும்  கோலம்
• நீல கண்டம் என்ற பெயரின் மீது கொண்ட காதலாலே திரு நீலகண்ட நாயனார் புகழ் பெற்றார்

வேறு பெயர்கள்

• கறைக்கண்டன்
• நீலகண்டன்
• விசாபகரண மூர்த்தி
• காலகண்டன்
• சிறீகண்டன்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

• திருநீலக்குடி,கும்பகோணம்
• திருப்பைஞ்ஞீலி, திருச்சி வட்டம்
• நீலகண்டேசுவரர் கோவில், திருமண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு)
• கொண்டீசுவரர் கோயில்,சுருட்டப்பள்ளி
• பூடா நீல்கண்ட் கோயில் ,காட்மாண்டு, நேபாளம்
• நீலகண்டர் கோவில் ,ரிஷிகேஷ்

இதரக் குறிப்புகள்

மச்சபுராணம் கூர்ம புராணம், லிங்க புராணம், வாமன புராணம், பவிஷ்ய புராணம், மார்கண்டேய புராணம்


புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவோத்தூர்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவோத்தூர்
•சதுர ஆவுடையார்
•இறைவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலின் ஓத்தூர் – ‘திரு’ அடைமொழி சேர்ந்து ‘திருஓத்தூர் ‘ – திருவோத்தூர்
•சிவபெருமான் வீரநடனம் புரிந்த தலம்
•ரத ஸப்தமி அன்று சூரிய ஒளி சுவாமி மீது விழும்.
•முருகப் பெருமான் இறைவனை பூஜித்த தலங்களில் இத்தலமும் ஒன்று
•திருஞானசம்பந்தர் பதிகம் பாடி, ஆண்பனை, பெண்பனையான தலம்
•தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை கற்றுத்தரும் போது அவர்கள் தவிர வேறு யாரும் உள்ளே வராமல் தடுக்கவே இவ்வாறு நந்தி திரும்பி இருப்பதாக வரலாறு
•தொண்டைமான் விசுவாவசு என்னும் மன்னனிடம் தோற்ற பொழுது அவன் வெற்றிபெறுவதற்காக நந்தியை படைத் துணையாக அனுப்பிய இடம். இதன் பொருட்டு நந்தி முன் கோபுரம் நோக்கியவாறு.

தலம்
திருவோத்தூர்
பிற பெயர்கள்
செய்யாறு, திருவத்திபுரம், திருவத்தூர்
இறைவன்
வேதபுரீஸ்வரர், வேதநாதர்
இறைவி
பாலகுஜாம்பிகை, இளமுலைநாயகி
தல விருட்சம்
பனை
தீர்த்தம்
ஆலயத்திற்கு வெளியே சேயாறு, வெளிப் பிராகாரத்தில் கல்யாணகோடி தீர்த்தம், மானச தீர்த்தம்,
விழாக்கள்
தை மாதம் – பிரம்மோற்சவம், ஆடி மாதம் – லட்ச தீபம், ஆடி விசாகம் – ஞானசம்பந்தர் விழா, சுந்தரர் மோட்சம் சித்ரா பவுர்ணமி, பங்குனி உத்திரம்,
மாசி மகம், அப்பாத்துரை தோப்பு திருவிழா பிரதோஷம்
மாவட்டம்
திருவண்ணாமலை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரை
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவத்திபுரம்
செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
PIN – 604407
04182 – 224387
வழிபட்டவர்கள்
தொண்டைமான்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் – 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 250 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   8 வது தலம்.
வேதபுரீஸ்வரர்
 
 
 
இளமுலைநாயகி
 
 
 
பாடியவர்            திருஞானசம்பந்தர்        
திருமுறை           1         
பதிக எண்           54       
திருமுறை எண்      8        
பாடல்
என்றா னிம்மலை யென்ற வரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்
என்றார் மேல்வினை யேகுமே.
பொருள்
கயிலை மலை குறித்து குறைவாக மதிப்பிட்டு செறுக்கு கொண்ட இராவணனை தனது கால் பெருவிரலால் வென்றவரும், தனது மனதில் இருந்து மாறுபட்டவர்களான மூன்று கோட்டைகள் கொண்ட மூன்று  அசுரர்களை திரிபுர தகனம் அழித்தவரும் ஆகிய ஈசன் உறையும் தலமாகிய திருவோத்தும் எனும் ஊர்ப் பெயரைச் சொன்ன அளவில் அவர்களிடத்து இருக்கும் வினைகள் நீங்கும்.
கருத்து
என்தான் – எம்மாத்திரம். ஒன்னார் – பகைவர்
பாடியவர்            திருஞானசம்பந்தர்        
திருமுறை           1         
பதிக எண்           54       
திருமுறை எண்      9        
பாடல்
நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச்
சென்றார் போலுந் திசையெலாம்
ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்
நின்றீ ரேயுமை நேடியே.
பொருள்
திருவோத்தூரில் விளங்கும் இறைவரே!  நான்கு வேதங்களை அதன் பொருள் உணர்ந்து ஓதுபவனாகிய பிரமன், திருமால் ஆகியோர் நீ ஏக உருவில் தீப்பிழம்பாய் இருத்தலை கண்டு அறியாமையினால் திசைகள் எல்லாம் தேடி அலைந்தனர். அவர்களது அறிவுநிலை யாது?
கருத்து
நன்றாம் நான் மறையான் – நல்லன செய்யும் நான்மறைகளை ஓதியும்
Reference
தவர்வாள் தோமர சூலம் காதிய சூருந் – எனத் தொடங்கும் திருப்புகழ்
‘ உலகியலின் உறுமயலின் அடைவுபெறும் எனதிதயம்  ‘ எனத் தொடங்கும் திருஅருட்பிரக்காச வள்ளளாரின் ஐந்தாம் திருமுறை
புகைப்படம் : தினமலர்
 
இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.
 

Loading

சமூக ஊடகங்கள்

ஆதி சித்தனின் அரங்கேற்றம்

நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க

சம்பவம்

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வாசுகி ஆலகால விஷத்தை வெளிப்படுத்தியது. அதனை ஈசன் உண்டான். சத்தி தடுத்து நிறுத்தியதால் அது கழுத்தில் தங்கி விட்டது.
விளக்கம்

ஈசனானவர் எங்கும் நிறைந்தவர், பிறப்பிலி. மனித வாழ்வின் பிறப்பு மற்றும் இறப்பினை அவர்களின் மூச்சுக் காற்றே தீர்மானிக்கிறது.கழுத்தின் கண்டத்திற்கு மேல் வாசி பயில்பவர்கள் இறை தன்மையினை அடைவார்கள். இவர்களுக்கு பிறப்பில்லை. கழுத்துக்கு கீழே வாசி பயில்பவர்கள் உடல் ரீதியான மற்றும் மனரீதியான முன்னேற்றம் அடைவார்கள். இவர்களுக்கு பிறப்பு உண்டு.

இறை தன் நிலையிருந்து என்றும் வழுவாதிருக்க வாசியோகத்தின் முழுமையினை வெளிப்படுத்த ஈசனும் இறைவியும் நடத்திய நாடகம் அது.

மேலும் அறிய விரும்புவர்கள் குரு முகமாக அறிந்து கொள்க.

புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

ஆதி ஆகுதி

தன் மீது அமரும்
வண்ணத்துப் பூச்சியின்
வலிஅறிந்து இருக்குமா அம்மலர்கள்

புகைப்படம் :  SLKumar

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருகுரங்கணில் முட்டம்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருகுரங்கணில் முட்டம்
•இறைவன் சுயம்பு மூர்த்தி
•வாலி குரங்கு உருவிலும், இந்திரன் அணில் உருவிலும், எமன் காகம் (முட்டம்) உருவிலும் இறைவனை தனித்தனியே வழிபட்டு தங்களது சாபம் நிவர்த்தியடையப் பெற்ற தலம்
•விஷ்ணு துர்க்கை – வலது கையில் பிரயோகச் சக்கரம்,இடக்கையில் சக்கர முத்திரை, காலுக்கு கீழே மகிஷாசுரனும் அற்று.
•சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது
 
 
தலம்
திருகுரங்கணில் முட்டம்
பிற பெயர்கள்
கொய்யாமலை
இறைவன்
வாலீஸ்வரர், கொய்யாமலைநாதர், திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார், கொய்யாமலர் ஈசுவரதேவர்
இறைவி
இறையார் வளையம்மை, இளையாளம்மன், ஸ்ரீ பூரணகங்கணதாரணி
தல விருட்சம்
இலந்தை மரம்
தீர்த்தம்
காக்கை தீர்த்தம், வாயசை தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
திருவண்ணாமலை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 9 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்
குரங்கனில் முட்டம் கிராமம்
தூசி அஞ்சல்
செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் – 631703
ஸ்ரீதர் குருக்கள், கைபேசி:9629050143, 9600787419
வழிபட்டவர்கள்
வாலி, இந்திரன், யமன்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் – 1
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் காஞ்சீபுரத்திலிருந்து சுமார் 11 கி.மி
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 238 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   6 வது தலம்.
வாலீஸ்வரர்



 
இறையார் வளையம்மை



 
பாடியவர்              திருஞானசம்பந்தர்      
திருமுறை             1        
பதிக எண்             31    
திருமுறை எண்        8    
பாடல்
மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை
உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த
கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங்
கையால்தொழு வார்வினை காண்ட லரிதே.

பொருள்
மையின் நிறத்தை ஒத்து இருக்கும் கரிய  நிறமுடைய மேனியை உடையவனாகிய அரக்கர்களின் தலைவனாகிய இராவணை பிழைக்க முடியாதபடி செய்து, அவனது கர்வத்தை அடக்கி, அவனுக்கு இனிய அருளைச் செய்தவனும், அடியவர் அணிவித்த மலர் மாலைகளை சூடி குரங்கணில்முட்டத்தில் எழுந்தருளிக்கும் சிவபெருமானை கைகளால் தொழுபவர்களின் வினைப்பயன்கள் இல்லாது போகும். அஃதாவது இத்தலம் கண்டவர்களின் வினைகள் நீங்கும்
கருத்து
மையார்மேனி – கரியமேனி.
அரக்கன் – இராவணன். .
கொய் ஆர் மலர் – கொய்தலைப் பொருந்திய மலர்.
பாடியவர்              திருஞானசம்பந்தர்      
திருமுறை             1        
பதிக எண்             31    
திருமுறை எண்        9    
பாடல்

வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும்
அறியாதசைந் தேத்தவோர் ஆரழ லாகுங்
குறியால்நிமிர்ந் தான்றன் குரங்கணின் முட்டம்
நெறியால்தொழு வார்வினை நிற்ககி லாவே.
பொருள்
மணம் உடைய தாமரை மலரில் உறையும் நான்முகனும், திருமாலும் முறையே திருமுடியையும், திருவடியையும் அறிய முடியாது வருந்தி நிற்க தீயின் உருவமாய் நிற்கும் சிவபெருமான் விளங்கும் குரங்கணில் முட்டத்தை முறையாக தொழுபவர்களது வினைகள் முற்றிலும் நீங்கப் பெறும்.
கருத்து
அறியாது அசைந்து – முதற்கண் இறைவன் பெருமையையறியாமல் சோம்பி இருந்து
ஏத்த – பின்னர் அறிந்து துதிக்க
ஓர் ஆர் – தனக்கு ஒப்பில்லாதவன்
நெறி – ஆகமவிதி – தனக்கு விதிக்கப்பட்டவாறு தொழுதல்

புகைப்படம் : தினமலர்

Loading

சமூக ஊடகங்கள்

2038 – மருத்துவமனைகள் – ஒரு வழிப் பாதை

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.

ABC மருத்துவமனை
சார் என் பையனுக்கு தலைய வலிக்குது. ஏதாவது மருந்து குடுங்க சார்.
உங்களுக்கு எந்த ஏரியால வீடு இருக்கு, அண்ணாநகர், அசோக் நகர், திண்டிவனம்?
சார் நான் என்ன பேசரேன், நீங்க என்ன பேசுறீங்க.
அண்ணாநகர்ல வீடுன்னா Suit ல வச்சி பாப்போம். அசோக் நகர்னா ICU ல வச்சி பாப்போம், திண்டிவனம்னா OP ல வச்சி பாப்போம். எப்படியும் நீங்க சொத்த எழுதி கொடுத்துத்தானே ஆவணும்
2.
என்னா சார் இது சளி புடுச்சி இருக்கின்னு வந்தேன். அதுக்கு பில் Rs..144,50,00,000 போட்டு இருகீங்க.

அதுவா ஒரு Lamborghini Aventador book பண்ண காசு இல்லாம இருந்தேன். நீங்க வந்துடீங்க. (Current price Lamborghini Aventador at Rs.4,50,00,000)

3.

சார் இந்த வருஷம் நம்ம மருத்துவமனைக்கு நல்ல income  வந்திருக்கு. IT ல மாட்டாம இருக்க என்ன செய்யறது சார்

வர மாசத்தில் இருந்து X-Ray தனி யூனிட், Blood test தனி யூனிட். மெடிக்கல் ஷாப்பை லஷ்மி மெடிக்கல்னு மாத்திடுவோம். பாவம் எல்லாம் சாமிக்கு போயிடும். அந்த ICU வ உள் வாடகைக்கு விட்டுடுவோம். ஏன்னா அது பிரச்சனை புடிச்சது ஒரு பேஷன்ட் கிட்டே இருந்து நமக்கு 1 கோடி நமக்கு வரணும் அப்படீன்னு மட்டும் சொல்லிடுவோம்.

4.சார் உங்க மெடிக்கல் இன்சூரன்ஸ்ல என்ன வசதி?

ஹாஸ்பிட்டல்ல எல்லா செலவையும் ஏத்துப்போம். உசுரு போச்சுன்னா சுடுகாட்டு செலவையும் நாங்களே செஞ்சிடுவோம். அதுல பாருங்க இப்ப சுடுகாட்டுச் செலவெல்லாம் இப்போ ரொம்ப அதிகம் பாருங்க.

5.

சார் எப்படி பாத்தாலும் பில் 50,00,000 வரலயே சார், என்ன செய்ய?
இதெல்லாம் ஒரு மேட்ரே இல்ல,ரூம் சார்ஜ் 10,00,000 போடு. செலைன் ஊசி போட 10,00,000 போடு. ஊசி எடுக்க 10,00,000 போடு. டுயுட்டி டாக்டர் சார்ஜ்  5,00,000 போடு, டுயுட்டி நர்ஸ் சார்ஜ்  3,00,000 போடு,  டுயுட்டிஆயா சார்ஜ்  2,00,000 போடு, பெட் சார்ஜ் 7,00,000 போடு,  எல்லா டாக்டருக்கும் விசிட் சார்ஜ்ன்னு போட்டு ஒரு 12,00,000 போடு,  அப்படியே அட்மிஷன் சார்ஜ்  2,00,000 போடு,  மொத்தம் எவ்வளவு ஆச்சு.
மொத்தம் எவ்வளவு ஆச்சு.
சார் 61,00,000 வருது சார்.
சூப்பர் பில்ல போட்டு அவன் கையில கொடு.

புகைப்படம் : SLKumar





Loading

சமூக ஊடகங்கள்

மௌனக் கண்ணீர்

உயிர் வாழ்தலில்
மரணம் என்பது இயற்கையானது அல்ல
மரணம் என்பது நிலையானதும் அல்ல
என்று தானே அறிந்த தருணமாக இருக்கலாம்.
அழும் குழந்தையினை தாய் திகட்ட திகட்ட
திட்டுகையில் அறிந்திருக்கலாம்.
‘இருந்து உயிர எடுக்கறத்துக்கு போய் தொலைந்திருக்கலாம்‘
எனும் மனைவியின் வார்த்தைகளில் இருக்கலாம்.
‘ஒட்டு பீடி கேட்கிறத்துக்கு உசிர விட்டிருக்கலாம்‘
எனும் நண்பனின் வார்த்தைகளில் இருக்கலாம்.
‘பணம் இல்லா பயலுகளுக்கு
பணக்கார சாமி எதுக்கு‘ என்னும் வாசகங்களில் தொக்கி நிக்கலாம்
‘ஒரு வேலைய உருப்படியா செய்யத் தெரியல‘
எனும் மேலதிகாரியின் வார்த்தைகளில் இருக்கலாம்.
நினைவுகளையும் ஏக்கங்களையும்
நித்தமும் தொலைக்கும் தருணங்களாக இருக்கலாம்.
தொக்கி நிற்கும் இளைமையின் வடிங்கங்ளை வாங்கி
கண்ணீரில் கரைதலில் இருக்கலாம்,
யாசகத்துக்கு கையேந்தி
வெற்று கைகளுடன் திரும்புகையில் இருக்கலாம்.
மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு
மீண்டும் மனிதகளுடன் கூடிக் குலாவும் காலமாக இருந்திருக்கலாம்
இன்னும் என்ன இருக்கிறது
மரணம் அறிந்து மரணம் தாண்டி
நித்தமும் உயிர் வாழ்தலில் அதீதத்தின் ருசி

புகைப்படம் :  SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 20/25 சரபமூர்த்தி

மகேசுவரமூர்த்தங்கள் 20/25 சரபமூர்த்தி
வடிவம்(பொது)
·   நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்த திருமாலின் கோபம் இரண்ய  சம்ஹாரத்திற்குப் பிறகும் குறையவில்லை. அதன் பொருட்டு  சிவபெருமான் எடுத்த அவதாரம் `சரபமூர்த்தி’
·   சரபம் என்பது மனிதன், யாளி, பட்சி, இம்மூன்றும் கலந்த உருவம். .
·   உடல் அமைப்பு  – சிம்ம முகம், சிம்ம உடல், எட்டுக்கால், எட்டுக்கை, ஆயுதமாக மான், மழு, சூலினி, ப்ரத்யங்கிரா தேவியர் – இறக்கைகள், சூரியன், சந்திரன், அக்னி –  கண்கள்,துடிக்கும் நாக்கு, தூக்கிய  காதுகள், கருடமூக்கு, நான்கு கரங்கள், எட்டு கால்கள், அதில் காந்தசக்தி கொண்ட நகங்கள்
·   உத்திர காமிகாகமத்தின்படி இவ்வடிவம் ஆகாச பைரவர்
·   சில இடங்களில் 32 கைகளுடன் விவரிக்கப்பட்டுள்ளார்.
·   சில இடங்களில் இம் மூர்த்தம் மகேசுவர பேதமாக குறிப்பிடப்படுகிறது.
வேறு பெயர்கள்
·         ஸ்ரீ சரபேஸ்வரர்
·         ஸ்ரீ சரப மூர்த்தி
·         புள்ளுருவன்
·         எண்காற் புள்ளுருவன்
·         சிம்புள்
·         நடுக்கந்தீர்த்த பெருமான்
·         சிம்ஹாரி
·         நரசிம்ம சம்ஹாரர்
·         ஸிம்ஹக்னர்
·         சாலுவேசர்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

·         திருபுவனம், மயிலாடுதுறை
·         தாராசுரம், கும்பகோணம்
·         ஆபத்சகாயேசுவரர் கோயில்,துக்காச்சி,கும்பகோணம்
·         தேனுபுரீஸ்வரர் ஆலயம்,மாடம்பாக்கம், சென்னை
·         ஆலய மூலவர் – ஸ்தம்ப சரபேஸ்வரர்,திரிசூலம், சென்னை
·         ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலயம்,மயிலாப்பூர்
·         குறுங்காலீஸ்வரர் கோயில்,கோயம்பேடு
·         தாமல் நகர், காஞ்சிபுரம்  –  லிங்க உருவ சரபேஸ்வரர்
·         மதுரை, சிதம்பரம், காரைக்குடி –
·         சராவு சரபேஸ்வரர் ஆலயம், மங்களூர்
இதரக் குறிப்புகள்

·         16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருமலைநாதர் என்பவரால் இயற்றப்பட்ட  சரப புராணம்

புகைப்படம் : இணையம்
 

Loading

சமூக ஊடகங்கள்

மோன வசி

மழை வருவதாக கூறி
கண்ணாடிக் கதவுகளை சாத்துகிறான் தகப்பன்.
புன்னகைத்து காற்று வரவில்லை எனக் கூறி
கதவுகளைத் திறக்கிறது பெண் குழந்தை ஒன்று.
பாம்பின் வாய்ப்பட்ட தேரையாய்
காலம் விழுங்கிக் கொண்டிருக்கிறது
ரயிலின் சில நிகழ்வுகளை

புகைப்படம் :  Bragadeesh Prasanna

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கச்சூர்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருக்கச்சூர்
•இறைவன் சுயம்பு மூர்த்தி
•பாற்கடல் கடையும் பொழுது, விஷ்ணு (கச்சபம்) ஆமையாக உருவெடுத்து இத்தலத்து சிவனை பூஜை செய்து மந்தார மலையை தாங்கும் வலிமை பெற்ற தலம்.
•இறைவனின் திருப்பாதங்கள் படிந்த தலம்
•இந்திரனின் சாபம் நீங்க அஸ்வினி தேவர்களுக்கு மருந்து காட்டிய இடம்(மருந்தீஸ்வரர்)
•சரியான மருந்தை ஒளி மூலம் காட்டிக் கொடுத்தமையினால் இருள்நீக்கி அம்பாள்.
•சுந்தரரின் பசிப் பிணி போக்குவதற்காக சிவன் முதியவர் வேடம் கொண்டு (இரந்து) பிச்சை ஏற்று அவருக்கு அளித்ததால் இரந்தீஸ்வரர்
•விருந்து படைத்ததால் விருந்தீஸ்வர்
•நான்கு முகங்களுடன் சண்டேஸ்வரர் – சதுர்முக சண்டேசுவரர்
•உபயவிட தலங்களில் ஒன்று
•கஜ பிருஷ்ட விமானம்
 
 
கச்சபேஸ்வரர்
 
 
 
அஞ்சனாட்சி
 
 
தலம்
திருக்கச்சூர்
பிற பெயர்கள்
நடனவினோதநல்லூர், ஆதிகாஞ்சி, திருக்கச்சூர் ஆலக்கோயில், ஔஷத கிரி, கச்சபவூர்
இறைவன்
கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், அமிர்த தியாகராஜர்
இறைவி
அஞ்சனாட்சியம்பாள், இருள்நீக்கியம்பாள், அந்தக நிவாரணி,
தல விருட்சம்
கல்லால மரம், வேர்ப்பலா
தீர்த்தம்
ஔஷதி தீர்த்தம், கூர்ம தீர்த்தம்
விழாக்கள்
சித்திரை,மாசி – பிரம்மோற்ஸவம், சோமவாரங்களில் படிபூஜை, திருக்கார்த்திகை
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
கச்சபேஸ்வரர் திருக்கோயில்
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை
மருந்தீஸ்வரர் திருக்கோயில்காலை 7 – 9 மணி வரை மட்டும்
அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில்,திருக்கச்சூர்- 603 204, காஞ்சிபுரம் மாவட்டம்
+91- 44 – 2746 4325,2746 3514,2723 3384, திரு. முரளி – +91 94453 56399
வழிபட்டவர்கள்
திருமால்
பாடியவர்கள்
சுந்தரர், அருணகிரி நாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 258 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   26 வது தலம்.
பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7
பதிக எண்                    41
திருமுறை எண்               7
பாடல்

பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவா ரவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மடந்தை பங்கா கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.
பொருள்
மை பொருந்திய பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே, கங்கையையும், பிறை சந்திரனையும் தனது திருமுடி மேல் வைத்துள்ள ஐயனே, செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே, திருக்கச்சூர் ஆலக் கோயிலில் எழுந்தருளும் பெருமானே, பொய்யாக உனை ஒருவர் புகழ்ந்தால் அதனையும் ஒரு பொருளாய் கொண்டு அவர்களுக்கு உண்மையாக அருள் செய்யும்  எங்கள் பெருமானே உன்னை உண்மையாகவே நினைக்கும் அடியவர்களை நினை.
கருத்து
பொய்யே உன்னைப் புகழ்வார் – மனதில் அன்பு இன்றி பலன் கருதி புகழ்தல். இது இழிநிலை மனிதர்களுக்கு உரியது. அந்த நிலையில் இருந்தாலும் கூட  என்பதே இதன் சிறப்பு
சிவன் வேறு சக்தி வேறு என்ற பேதம் அறுபடுகிறது என்பதை கீழ்கண்ட இரு உதாரணங்களால் அறியலாம்.
1.பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே
2.செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே
வெண்மை நிறம் சிவனாரைக் குறிப்பதாகும். செம்மை நிறம் சக்தியை குறிப்பதாகும்
பாடியவர்                  சுந்தரர் 
திருமுறை                 7 
பதிக எண்                 41   
திருமுறை எண்            8  
பாடல்
ஊனைப் பெருக்கி உன்னை நினையா தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங் கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையு மடமென் னோக்கி மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய் ஆலக் கோயில் அம்மானே.
பொருள்
காட்டில் புதியதாக மலர்ந்திருக்கும் கொன்றை மலரின் வீசுதலை உடையவனே, மான் போன்ற மெல்லிய பார்வை உடைய உமை அஞ்சும்படி பெரியதான யானைத் தோலைப் போர்த்தியவனே,ஞானக்கண்ணாய் விளங்குபவனே ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, கீழ்மை நிலையில் இருக்கும் யான் அதுபற்றி உணர்வு எதுவும் இல்லாமல் உடம்பு வளர்க்கும் காரணம் பற்றி உன்னை நினையாது ஒழிந்தேன்.
கருத்து
செடியேன் உணர்வில்லேன் – செடி போன்றவைகள் ஓரறிவு உயிர்கள். எனவே உன்னை நினைத்தல் என்பது பற்றி உணர்வு கூட இல்லை.
குறை உடைய உயிர்களின் நிலை அறிய அவைகளின் அனைத்து வினைகளைப் பற்றியும் அறிய அறிவு வேண்டும். அதனை காண ஞானக் கண் அவசியமாகிறது. உயிரின் வினைகளைக் களைபவன் என்பதனால் அவன் ஞானக் கண் உடையவனாகிறான்.
புகைப்படம் : தினமலர்
 

Loading

சமூக ஊடகங்கள்

முதிர் ஞாபகங்கள்

தேகம் முழுவதும் பூச்சுக்கள் என்றாலும்
தன்னியல்பாய் வெளிப்பட்டு விடுகின்றன
பழைய வாசனைகள்.

புகைப்படம் :  Ravi Shankar

Loading

சமூக ஊடகங்கள்

சொல்லின் வழி மௌனம்

யாருமற்ற இரவு
உன்னையும் என்னையும்
இணைத்து வைக்கிறது.
கொஞ்சமாய் அகிலின் வாசம்
நம் இருவருக்கும் பொதுவானதாக இருக்கிறது.
உடைபடும் மௌனம் உடைக்கிறேன்.
மானஸ ரூபின்யை நமஹ,
..
மகாரப் பிரியை நமஹ
…
பிறிதொரு பொழுதுகளில்
எந்தப் பொருளிலும் நான் இல்லை
எல்லாப் பொருள்களிலும் நீ இருக்கிறாய்.
எந்த ஒலிகளையும் நான் கேட்கவில்லை
எல்லா ஒலிகளுக்கும்  நீ காரணமாக இருக்கிறாய்.
எந்த உருவங்களையும் நான் காணவில்லை
எல்லா உருவங்களுக்கும்  நீ சாட்சியாக இருக்கிறாய்.
மூலக் கனலொன்று கனவினை உடைக்கிறது.

புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 19/25 திரிபுராரி


 
 
மகேசுவரமூர்த்தங்கள் 20/25 திரிபுராரி
வடிவம்
·          உருவத்திருமேனி
·          பாவ நிவர்த்தி மூர்த்தம்
·  பொன், வெள்ளி, இரும்பாலாகிய மூன்று கோட்டை களையுடைய திரிபுராதியரான   தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய  மூன்று அசுரர்கள்களை புன்சிரிப்பால் அழித்த வடிவம். அவர்களை எரித்தப்பின் ஒருவரை மத்தளம் வாசிப்பவனாகவும், மற்றஇருவரையும் வாயிற் காப்பாளனாகவும் மாற்றிக் கொண்டார்.
·          மேரு –  வில், வாசுகி – நாண், தேவர்கள்  – படைகள், சூரிய, சந்திரர்கள்  – சக்கரம், உலகம் – தேர் , வேதங்கள் –  தேர்க் குதிரைகள், விஷ்ணு – அம்பு , வாயு –  அலகு, அக்கினி – அம்பின் நுனி ,பிரம்மா – தேரோட்டி
·          புரம் எரித்த சம்பவம் நிகழ்ந்த இடம் திருஅதிகை.
·        முப்புரம் என்பது மூன்று மலங்கள் (ஆணவம், மாயை மற்றும் கண்மம்) என்று திருமந்திரம்   மூலம் அறியலாம்
 
வேறு பெயர்கள்
 
திரிபுர அந்தகர்
முப்புராரி
புரரிபு
முப்புர மெரித்தோன்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
 
·  மாமல்லபுர சிற்பம் வடக்குச்சுவர்
·  தஞ்சைக்கோயில் கருவறை
·  திருவிற்கோலம் – திரிபுராந்தகர் கோயில் – கூவம்
·  திருநல்லம் கோணேரிராசபுரம்
·  சிதம்பரம்
·  கொடும்பாளூர் விமானம்
·  காஞ்சி கைலாசநாதர் கோயில்
இதரக் குறிப்புகள்
 
1.
எரியார் கணையால் எயிலெய் தவனே   – திருக்கழிப்பாலை
 
2.
கரி புராரி காமாரி திரிபுராரி தீயாடி
கயிலையாளி காபாலி            கழியோனி
கரவு தாசன் ஆசாரி பரசு பாணி பானாளி
கணமொடாடி காயோகி           சிவயோகி
விராலிமலை திருப்புகழ்
 
3.
பொருப்புச் சிலையில் வாசுகிநாண் பூட்டி அரிகோல் வளிஈர்க்கு
நெருப்புக் கூராம் படைதொடுத்துப் பிரம வலவன் நெடுமறைமா
விருப்பிற் செலுத்து நிலத்தேர்மேல் நின்று தெவ்வூர் வெந்தவிய
அருப்புக் குறுவெண் ணகைமுகிழ்த்த அந்த ணாளன் திருவுருவம்.
மேருவை வில்லாகவும், வாசுகியை நாணியாகவும் கொண்டு பூட்டித் திருமாலை
அம்பாகவும், வாயுவை அலகாகவும், அக்கினியை அம்பின் நுதியாகவும் படை
அமைத்துக் கொண்டு பிரமனைத் தேர்ப் பாகனாகவும் வேதங்களைத் தேர்க்
குதிரையாகவும் கொண்டு பூமியாகிய தேர்மிசை நின்று பகைவர் ஊராகிய
முப்புரம் வெந்தழியும்படி அரும்பு தலையுடைய புன்முறுவல் பூத்த
அறவோராகிய திருபுராரி திருவுருவம்.
–      காஞ்சிப் புராணம்
சைவ சித்தாந்தம், சைவம், மகேசுவரமூர்த்தங்கள், திரிபுராரி.

புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

சாதக விளைவு

இழப்பதற்கு என்று வந்து
எல்லாவற்றையும்
ஏற்றப்பின் வருகிறது
ஞானத்தின் அடையாளங்கள்.
புகைப்படம் : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

2038 – Digital Amnesia – உயர் தொழில் நுட்பம் சார்ந்த மறதிகள்

Reality

·   The continuous progress and evolution of technology in terms of hardware, software, operating systems and methods of digital encoding guarantees the possibility that digital amnesia will become a problem in the near future. There are many versions of programs and applications that have been considered as a standard for some time, but in the end they will always be replaced by newer versions with upgraded functions. The files that are meant to be edited or read by an old program will become unreadable if used with newer programs.
·   Smart phones and tablets are eroding our ability to remember.
·   Could be called as massive destruction of information!
·   Study conducted – UK, France, Germany, Italy, Spain, Belgium, the Netherlands and Luxembourg
·   Total adults – 6000

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

Proof

1.
Doctor : சார், உங்களுக்கு வந்திருக்கிறது digital amnesia
Patient  : அப்டீன்னா என்னா சார்
Doctor : The continuous progress and evolution of technology, technology technology
Patient  : சொல்லுங்க சார்
Doctor : இருப்பா எனக்கும் மறந்து போச்சு

2.
Employee : சார் எனக்கு எட்டு மாசமா சம்பளம் குடுக்கல சார்.
IT Manager : எனக்கு  Digital Amnesia இருக்கு. அதால உனக்கு கடைசியா எப்ப சம்பளம் குடுத்தேன்னு தெரியல

3.
மனைவி : போன மாசம், செலவுக்கு 121.37 காசு குடுத்தீங்க. இந்த மாசம் 23.57 காசு தான் குடுக்குறீங்க. கேட்டா உங்களுக்கு Digital Amnesia அப்படீன்னு சொன்னா எப்படி?

4.
Digital Amnesia தொல்லையில் இருந்து விடுபட எங்களிடம் உங்கள் மூளைத் தகவல்களை சேகரியுங்கள். For 1 TB – just Rs.100/- P/M. 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு discount போக Rs. 250/- P/M.. ஆயுள் சந்தாவிற்கு நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

5.
‘நான் யார்’ என்று விடை அளிக்க முடியா கேள்விக்கு விடை தேடுகிறது மதம். ‘நான் யார்’  என்று அறிய முடியாதவர்களை   Digital Amnesia வால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறது மருத்துவத்துறை. எனில் நாம் முடிவை நெருங்கிக் கொண்டு இருக்கிறோம் என்பதே இதன் பொருள். – இது போன்று நிறைய பயன் உள்ள தகவல்களைப் பெற அணுகவும். மருத்துவராக இருந்து சாமியாக மாறிய செல்வி சூர்பணகை.

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 19

மனைவி: ஏங்க, இனிமே நான் உங்களோட சண்டையே போட மாட்டேன்.
கணவன் : ????
சற்று நேரத்திற்கு பிறகு
மனைவி : நீ எல்லாம் மனுஷனா, கடலை பருப்பு வாங்கிகிட்டு வரசொன்னா, தொவரம் பருப்பு வாங்கி கிட்டு வந்து இருக்கியே, என்னா, உங்க ஆத்தா உன்னை பெத்து வச்சிருக்கிருகாளோ?
கணவன் : கொஞ்சம் நேரத்துக்கு முன்னால தானே சண்ட போட மாட்டேன்னு சொன்ன?
மனைவி : ஆமா, சொன்னந்தான். இன்னைக்கு தேதிய பாரு. 01-Apr-2015
செத்தாண்டா சேகரு.
———————————————————————————————————————————————————
கன்னியாக்குமரி – 15 வது மொட்டை மாடியில் 2 நண்பர்கள்
வீட்ல ரொம்ப பிரச்சனடா
என்னடா ஆச்சு
மொத நாளு தண்ணி பிரச்சனை, பக்கெட்ல தண்ணி புடிச்சி வைங்க அப்படீங்கறா, அடுத்த நாளு பக்கெட் தண்ணில கொசு முட்டை போடுது, புடிக்காதீங்க அப்படீங்கறா, என்னடா செய்யறது.
செத்தாண்டா சேகரு.
———————————————————————————————————————————————————
சார், உக்காருங்க. அந்த கம்பில உக்காரலம் வா சார் வா. 5 பேர் தான் —உள்ள உக்காந்து கீராங்க. இவன் ஆட்டோவில் மினி பேருந்து 
கூட்டத்தை ஏற்ற முயற்சிப்போர் சங்க தலைவன்.
———————————————————————————————————————————————————
உலகின் உன்னதமான நிமிடங்கள்
ATM ல் எல்லா details ம் enter செய்து மிஷினில் பணம் count செய்து வெளியே வரும் நிமிடங்கள்.
———————————————————————————————————————————————————
பூரி மசால்ல மசால் இருக்கு, மசால் தோசைல மசால் இருக்கு, ஆனா மசால் வடைல மசால் இல்லையே. இவன் 10 மசால் வடையை ஒரே நேரத்தில் சாப்பிடுவோர் சங்கம்,
———————————————————————————————————————————————————
சந்தோஷத்த கொண்டாடுரத்துக்கும் காசு தேவையா இருக்கு., கஷ்டத்த கொண்டாடுரத்துக்கும்  காசு தேவையா இருக்கு.
உ.ம் – சரவணபவன் 2 காபி – 56 ரூ
Chandra park 2 பீர் – ரூ 450(Including tips).
என்னடா வாழ்க்கை இது?
———————————————————————————————————————————————————
எனக்கும் ஜூஸ் கடையில் இருக்கும் பெண்ணுக்கும் நடைபெற்ற உரையாடல்
தர்பூசணி ஜீஸ் ஒன்னு கொடுங்க
புரிலங்க.
தர்பூசணி ஜீஸ் ஒன்னு கொடுங்க
தெளிவா சொல்லுங்க
தர்பூசணி ஜீஸ் ஒன்னு கொடுங்க
….
Watermelon ஜீஸ் ஒன்னு கொடுங்க.
ஓ Watermelon ஜீஸ்சா, அப்படி தெளிவா கேளுங்க சார்.
அட பிக்காளிப்பயலுகளா.
———————————————————————————————————————————————————
வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை எந்த வாகனமும் செல்ல இயலா நிலை. 1 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கிறேன். எரிச்சலாக திரும்பி வெளியே பார்க்கிறேன்.
வெளியே நிற்கும் லாரியில் எழுதப்பட்டிருக்கிறது ‘தனிக்காட்டு ராஜா‘.
என் மனசுல இருந்த பாரம் எல்லாம் இறங்கி போச்சு.
———————————————————————————————————————————————————
IT ல் வேலை பார்ப்பவர்களை எளிதாக கண்டறியும் வழி(General)
31st : Lets go to Saravanabhavan machi
1st : மச்சான் ஒரு டீ சொல்லுடா, கைல காசு இல்ல
———————————————————————————————————————————————————
ரயிலில் பயணம் செய்ய மிக வேகமாக  நடை மேடை மேல் நடந்து கொண்டிருக்கிறேன்.
முதலாவது பிளாட்ஃபாமில் இருந்து இன்னும் சில நிமிடங்களில்….ஒலித்துக் கொண்டிருக்கிறது.
டோய்ங்.,,, டோய்ங்.,,,  (Doppler effect )
ஓட்டமும் வேகமும் குறைகிறது.
யாருடைய தொலை பேசியிலோ Ring tone. அழகிய கண்ணே, உறவுகள் நீயே
வினாடிக்குள் உலகம் நிலைபெறுகிறது.
அந்த மனிதர் நகர்ந்து விட்டார்.
சுய நினைவு திரும்புவதற்குள் ரயில் சென்றிருந்தது.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!