மகேசுவரமூர்த்தங்கள் 20/25 சரபமூர்த்தி
வடிவம்(பொது)
· நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்த திருமாலின் கோபம் இரண்ய சம்ஹாரத்திற்குப் பிறகும் குறையவில்லை. அதன் பொருட்டு சிவபெருமான் எடுத்த அவதாரம் `சரபமூர்த்தி’
· சரபம் என்பது மனிதன், யாளி, பட்சி, இம்மூன்றும் கலந்த உருவம். .
· உடல் அமைப்பு – சிம்ம முகம், சிம்ம உடல், எட்டுக்கால், எட்டுக்கை, ஆயுதமாக மான், மழு, சூலினி, ப்ரத்யங்கிரா தேவியர் – இறக்கைகள், சூரியன், சந்திரன், அக்னி – கண்கள்,துடிக்கும் நாக்கு, தூக்கிய காதுகள், கருடமூக்கு, நான்கு கரங்கள், எட்டு கால்கள், அதில் காந்தசக்தி கொண்ட நகங்கள்
· உத்திர காமிகாகமத்தின்படி இவ்வடிவம் ஆகாச பைரவர்
· சில இடங்களில் 32 கைகளுடன் விவரிக்கப்பட்டுள்ளார்.
· சில இடங்களில் இம் மூர்த்தம் மகேசுவர பேதமாக குறிப்பிடப்படுகிறது.
வேறு பெயர்கள்
· ஸ்ரீ சரபேஸ்வரர்
· ஸ்ரீ சரப மூர்த்தி
· புள்ளுருவன்
· எண்காற் புள்ளுருவன்
· சிம்புள்
· நடுக்கந்தீர்த்த பெருமான்
· சிம்ஹாரி
· நரசிம்ம சம்ஹாரர்
· ஸிம்ஹக்னர்
· சாலுவேசர்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
· திருபுவனம், மயிலாடுதுறை
· தாராசுரம், கும்பகோணம்
· ஆபத்சகாயேசுவரர் கோயில்,துக்காச்சி,கும்பகோணம்
· தேனுபுரீஸ்வரர் ஆலயம்,மாடம்பாக்கம், சென்னை
· ஆலய மூலவர் – ஸ்தம்ப சரபேஸ்வரர்,திரிசூலம், சென்னை
· ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலயம்,மயிலாப்பூர்
· குறுங்காலீஸ்வரர் கோயில்,கோயம்பேடு
· தாமல் நகர், காஞ்சிபுரம் – லிங்க உருவ சரபேஸ்வரர்
· மதுரை, சிதம்பரம், காரைக்குடி –
· சராவு சரபேஸ்வரர் ஆலயம், மங்களூர்
இதரக் குறிப்புகள்
· 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருமலைநாதர் என்பவரால் இயற்றப்பட்ட சரப புராணம்
புகைப்படம் : இணையம்
புகைப்படம் : இணையம்