சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கச்சூர்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருக்கச்சூர்
இறைவன் சுயம்பு மூர்த்தி
பாற்கடல் கடையும் பொழுது, விஷ்ணு (கச்சபம்) ஆமையாக உருவெடுத்து இத்தலத்து சிவனை பூஜை செய்து மந்தார மலையை தாங்கும் வலிமை பெற்ற தலம்.
இறைவனின் திருப்பாதங்கள் படிந்த தலம்
இந்திரனின் சாபம் நீங்க அஸ்வினி தேவர்களுக்கு மருந்து காட்டிய இடம்(மருந்தீஸ்வரர்)
சரியான மருந்தை ஒளி மூலம் காட்டிக் கொடுத்தமையினால் இருள்நீக்கி அம்பாள்.
சுந்தரரின் பசிப் பிணி போக்குவதற்காக சிவன் முதியவர் வேடம் கொண்டு (இரந்து) பிச்சை ஏற்று அவருக்கு அளித்ததால் இரந்தீஸ்வரர்
விருந்து படைத்ததால் விருந்தீஸ்வர்
நான்கு முகங்களுடன் சண்டேஸ்வரர் – சதுர்முக சண்டேசுவரர்
உபயவிட தலங்களில் ஒன்று
கஜ பிருஷ்ட விமானம்
 
 
கச்சபேஸ்வரர்
 
 
 
அஞ்சனாட்சி
 
 
தலம்
திருக்கச்சூர்
பிற பெயர்கள்
நடனவினோதநல்லூர், ஆதிகாஞ்சி, திருக்கச்சூர் ஆலக்கோயில், ஔஷத கிரி, கச்சபவூர்
இறைவன்
கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், அமிர்த தியாகராஜர்
இறைவி
அஞ்சனாட்சியம்பாள், இருள்நீக்கியம்பாள், அந்தக நிவாரணி,
தல விருட்சம்
கல்லால மரம், வேர்ப்பலா
தீர்த்தம்
ஔஷதி தீர்த்தம், கூர்ம தீர்த்தம்
விழாக்கள்
சித்திரை,மாசிபிரம்மோற்ஸவம், சோமவாரங்களில் படிபூஜை, திருக்கார்த்திகை
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
கச்சபேஸ்வரர் திருக்கோயில்
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை
மருந்தீஸ்வரர் திருக்கோயில்காலை 7 – 9 மணி வரை மட்டும்
அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில்,திருக்கச்சூர்- 603 204, காஞ்சிபுரம் மாவட்டம்
+91- 44 – 2746 4325,2746 3514,2723 3384, திரு. முரளி – +91 94453 56399
வழிபட்டவர்கள்
திருமால்
பாடியவர்கள்
சுந்தரர், அருணகிரி நாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 258 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   26 வது தலம்.
பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7
பதிக எண்                    41
திருமுறை எண்               7
பாடல்

பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவா ரவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மடந்தை பங்கா கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.
பொருள்
மை பொருந்திய பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே, கங்கையையும், பிறை சந்திரனையும் தனது திருமுடி மேல் வைத்துள்ள ஐயனே, செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே, திருக்கச்சூர் ஆலக் கோயிலில் எழுந்தருளும் பெருமானே, பொய்யாக உனை ஒருவர் புகழ்ந்தால் அதனையும் ஒரு பொருளாய் கொண்டு அவர்களுக்கு உண்மையாக அருள் செய்யும்  எங்கள் பெருமானே உன்னை உண்மையாகவே நினைக்கும் அடியவர்களை நினை.
கருத்து
பொய்யே உன்னைப் புகழ்வார் – மனதில் அன்பு இன்றி பலன் கருதி புகழ்தல். இது இழிநிலை மனிதர்களுக்கு உரியது. அந்த நிலையில் இருந்தாலும் கூட  என்பதே இதன் சிறப்பு
சிவன் வேறு சக்தி வேறு என்ற பேதம் அறுபடுகிறது என்பதை கீழ்கண்ட இரு உதாரணங்களால் அறியலாம்.
1.பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே
2.செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே
வெண்மை நிறம் சிவனாரைக் குறிப்பதாகும். செம்மை நிறம் சக்தியை குறிப்பதாகும்
பாடியவர்                  சுந்தரர் 
திருமுறை                 7 
பதிக எண்                 41   
திருமுறை எண்            8  
பாடல்
ஊனைப் பெருக்கி உன்னை நினையா தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங் கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையு மடமென் னோக்கி மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய் ஆலக் கோயில் அம்மானே.
பொருள்
காட்டில் புதியதாக மலர்ந்திருக்கும் கொன்றை மலரின் வீசுதலை உடையவனே, மான் போன்ற மெல்லிய பார்வை உடைய உமை அஞ்சும்படி பெரியதான யானைத் தோலைப் போர்த்தியவனே,ஞானக்கண்ணாய் விளங்குபவனே ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, கீழ்மை நிலையில் இருக்கும் யான் அதுபற்றி உணர்வு எதுவும் இல்லாமல் உடம்பு வளர்க்கும் காரணம் பற்றி உன்னை நினையாது ஒழிந்தேன்.
கருத்து
செடியேன் உணர்வில்லேன் – செடி போன்றவைகள் ஓரறிவு உயிர்கள். எனவே உன்னை நினைத்தல் என்பது பற்றி உணர்வு கூட இல்லை.
குறை உடைய உயிர்களின் நிலை அறிய அவைகளின் அனைத்து வினைகளைப் பற்றியும் அறிய அறிவு வேண்டும். அதனை காண ஞானக் கண் அவசியமாகிறது. உயிரின் வினைகளைக் களைபவன் என்பதனால் அவன் ஞானக் கண் உடையவனாகிறான்.
புகைப்படம் : தினமலர்
 

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *