அமுதமொழி – ஸ்ரீ  பராபவ‌ – ஐப்பசி – 3 (2026)


திருநாவுக்கரசர் தேவாரத்தில் பைரவப் பெருமான் குறித்த பாடல்கள்

பாடல்

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை

அம்மானேதேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – எம்பெருமானின் வடிவங்களை குறித்து உரை செய்து தன் சூலை நோயினை தீர்க்க வேண்டும் என விண்ணப்பம் செய்யும் பாடல்

பதவுரை

திருவதிகைக் கெடிலநதி வடபால் விளங்கும் திருவீரட்டானத்தில் எழுந்தருளி உறையும் அம்மானே! உம்மை வழிபாடு செய்ப‌வர்களுடைய பாவங்களைப்போக்க வல்லவரே! இறந்துவர்களது மண்டையோட்டினை பாத்திரமாக கொண்டு பிச்சை ஏற்றுத்திரிபவரே! உலகப் பற்றுக்களைக் கொண்டு இறந்தவர்களை எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்லமை உடைய‌ பெருமானே! காளையை வாகனமாகக் கொண்டு ஊர்ந்து செல்லுதலை  விரும்புகின்றவரே! வெண்தலையை மாலையாக‌ அணிகின்றவரே! உம்மையே பரம்பொருளாகத் துணிந்து உமக்கு அடிமை செய்து அடியேன் வாழக்கருதுவதால் எமைத் துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.

விளக்கஉரை

  • படுவெண்தலை – பட்டதலை, வெள்தலை; படுதல் – அழிதல்; தலையின் இயல்பிலிருந்து கெடுதல்
  • துணிவு – தெளிவு
  • பொடி – இறந்தவரது வெந்த உடம்பின் சாம்பற்பொடி
  • சுற்றும் – தலையைச் சுற்றிலும்
  • அருமகன்- அருமான், அர்மான், அம்மான்

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #திருமுறை #தேவாரம் #நான்காம்_திருமுறை #திருநாவுக்கரசர் #திருவீரட்டானம் #சைவத்_திருத்தலங்கள் #பாடல்_பெற்றத்_தலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

error: Content is protected !!