தேவதை சூழ் உலகு

நாளொன்றின்
நீண்ட பகல் பொழுதினை
களைப்பாக்கி
கதவைத் திறக்கையில்
கவனித்து இருங்கள்.
பூங்கொத்துகளுடன்
தேவதை
அப்பாபாபாபா
எனவும் ஓடிவரலாம்.

சமூக ஊடகங்கள்

வல்வினை நோய்

தந்தையின் தோள் பற்றி இருக்கும்
பெண் குழந்தை ஒன்று
தலை திருப்பி
‘எனக்கு இப் பொம்மை வாங்கி தருவாயா’ என்கிறது.
காரணம் விளக்காமல்
மறுதலித்து
நடக்கத்துவங்குகிறான் தகப்பன்.
சில வினாடிகளுக்குப் பின்
தகப்பன் மனம் மாறலாம் என
பொம்மை விற்பவன் தலை திருப்புகிறான்.
தொலை தூரத்தில் குழந்தையும்
தலை திருப்புகிறது
நிறைவேறா நிமிடங்களுக்காக

காலம் உறைந்திருக்கிறது.

புகைப்படம் : R.s.s.K Clicks

சமூக ஊடகங்கள்

பொன்னான மந்திரம்

எச்சில் பட்டு தெறிக்கும்
வார்த்தைகளுக்கு
கட்டுப்படுகிறதோ இல்லையோ மனம்
மகளின் மௌனங்களுக்கு மட்டும்.

*பொன்னான மந்திரம் – பொன் பொன் போன்றது. வாயால் ஓதக் கூடா மந்திரம். திருமந்திரம் – 4ம் திருமுறை – 906
புகைப்படம் : அபிதா சுந்தர்

சமூக ஊடகங்கள்

மோன வசி

மழை வருவதாக கூறி
கண்ணாடிக் கதவுகளை சாத்துகிறான் தகப்பன்.
புன்னகைத்து காற்று வரவில்லை எனக் கூறி
கதவுகளைத் திறக்கிறது பெண் குழந்தை ஒன்று.
பாம்பின் வாய்ப்பட்ட தேரையாய்
காலம் விழுங்கிக் கொண்டிருக்கிறது
ரயிலின் சில நிகழ்வுகளை

புகைப்படம் :  Bragadeesh Prasanna

சமூக ஊடகங்கள்

உவாதி

பிஞ்சுக் கைகளால்
ரோஜாப் பூ ஒன்றினை
வரைந்து முடிக்கிறாய்.
பின் வரும் நிமிடங்களில்
அழத் தொடங்குகிறாய்.
காரணம் வினவுகிறேன்.
பூக்கள் வாசனை அற்று இருக்கின்றன என்கிறாய்.
மகளின் வார்த்தைகளின் முடிவில்
தொட்டுத் திரும்புகிறது

எனது இளமைக் காலங்கள்.

*உவாதி – த்யானிப்பவன். திருமந்திரம் – 1202
வடிவ அமைப்பு : சம்யுக்தா செந்தில்

சமூக ஊடகங்கள்

மனோ மௌனம்

வாழ்வுக் கனவுகளில்
விழு திறக்க எத்தனிக்கிறேன்.
ஓடு, ஓடு, பூதம் வருகிறதுஎன்கிறாய்
உன் தேமதுரக் குரலால்.
வியப்பால் விழுகளை உருட்டி
‘எங்கே,எங்கே என்கிறேன்.
நான் தான் பூதம்
என்னைத் தெரியவில்லையா’
என்று கள்ளப் புன்னகை சிந்துகிறாய்
தேவதைகள் பூதங்களாய்
வேஷமிட்டு வரும் காலமிது.

மனோ மௌனம்இறை தன்மையை கர்ப்பத்தில் அனுபவித்த நிலை

சமூக ஊடகங்கள்

ஸர்வமந்த்ர ஸ்வரூபிணீ

ஒரு விடியலின் பொழுதுகளில்
விருப்பத்தோடு என்னை எழுப்புகிறாய்.
நேற்றைக்கான என் கனவில்
ஆயிரம் முத்தங்கள் தந்தாய் என்கிறாய்.
கனவினை நிஜமாக்கி
தருவதில் மகிழ்வுறும்
தகப்பனாகவே 
நானும் என் நினைவுகளும்.
ஸர்வமந்த்ர  ஸ்வரூபிணீ * – லலிதா சகஸ்ரநாமம்
புகைப்படம் : R.s.s.K Clicks

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 10

தனது மகளை கல்லூரி அனுப்ப காத்திருக்கும் வேளையில் மகளை வாகனத்தில் இருத்தி தான் தரையில்நின்று   பேசும் தந்தையில் கண்களில்  மாறுதல் இல்லா ஒரு சந்தோஷம் தெரிகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேகத்தின் பணி தேகம் நீக்குதல் என்று உணர்பவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அம்மா என்று அழைத்தால் எவ்வாறு தாய் மகிழ்வாளோ, அவ்வாறே நாம் குருவினை அழைக்க அவர்கள்         பிரியப்பட்டு நம்மிடம் வந்து உறைகிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
(மகா)சந்தோஷம்
மனைவி :  ஏங்க, நான் மௌன விரதம் இருக்கலாம்ன்னு இருக்கேன்.
கணவன் : நான் இப்ப பூமியிலே இல்லையே. வானத்துல இருக்கேன்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மௌனத்திருப்பவன் மயானம் அடையான்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வினைகளை அறுப்பவனையே பெரு வலிகள் வந்து சேர்கின்றன.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெண்கள் தங்கத்தை நேசிப்பதை விட தந்தைகள் மகள்களை நேசிக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கர்வம் அழித்தலில் மருத்துவ மனைகளின் பங்கு மகத்தானது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கற்றல் தாண்டி அறிதலை கொள்பவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மூச்சுக்காற்றில் சிக்கனம் காட்டுபவன் மயானம் அடையான்.

சமூக ஊடகங்கள்

சொற்கள் அற்ற இரவு

விளையாட்டாய் ஆரம்பிக்கிறது
உனக்கும் எனக்குமான சண்டை.
உன் கோபங்கள் என்னை
மகிழ்வு கொள்ளச் செய்கின்றன.
மகிழ்வான நிமிடங்கள்
முற்றுப் பெறும் முன் உரைக்கிறாய்
நான் உன்னுடன் பேசப் போவதில்லை
கண்ணீருடன் கலக்கின்றன
எனக்கான கவிதைகள்.
உறக்கத்தில்  கைகளால்
எதையோ தேடுகிறாய்.
என்ன இருந்தாலும் நீ என் அப்பா
உன்னை பிடிக்காமல் இருக்குமா
என்கிறாய்.
பிறிதொரு நாளில்
இதை நீ உணர்ந்து சிரிக்க
கவிதையாக்கி வைத்திருக்கிறேன்
என்னையும் நினைவுகளையும்.

புகைப்படம் மற்றும் இருப்பு : ராதா கிருஷ்ணன்

சமூக ஊடகங்கள்

முன் குறிப்புகள்

மகள் விரும்பும்
காகித மலர்களில்
தெரிகிறது
வாழ்வின் வாசனைகள்.

புகைப்பட உதவி :  Swathika Senthil

சமூக ஊடகங்கள்

விதியின் புனைதல்

எல்லா கனமில்லா பொருள்களும்
உனக்கானவையாக இருக்கின்றன.
எல்லா கனத்த நினைவுகளுக்கும்
எனக்கானவையாக இருக்கின்றன.

உனக்கான பொருள்கள்
கலைந்து கிடக்கின்றன.
கலையாமல் இருக்கின்றன
என் நினைவுகள்.
யாருமற்ற பொழுதுகளில்
இப்புகைப்படம் பார்த்து
நினைகளைக் கோர்ப்பாய்.
அந்த நாளில் நினைவுகளும்
இன்றைக்கு பத்திரமாய் என்னிடம்.

Click by : Swathika. Photo : Senthil Tiruvarasan and Samyuktha. 

சமூக ஊடகங்கள்

பூரணம்

அழகிய ஓவியம் ஒன்றை
வரையத் துவங்குகிறேன்.
எழுதப்படா பக்கங்களை
எடுத்து வந்து என்னிடம் தந்து
ஓவியம் எப்படி என்கிறாய்‘.
மகளாகிய உன்னால்
ஒவியங்கள் முழுமை பெறுகின்றன.

Click by : R.s.s.K clicks

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 9

போராட்டங்களில் முடிவு மௌனத்தில் நிறைவு பெறுகிறது.
———————————————————————————————- 
சந்நியாசிகள் உருவாவதில்லை. உருவாக்கப் படுகிறார்கள்.
———————————————————————————————- 
இரு பெண் குழந்தையின் தகப்பனின் கண்களில் ஒரு கர்வம் இருக்கத்தான் செய்கிறது. முன்று பெண் குழந்தைகளை கொண்டிருப்பவனின் கண்களில் கர்வமும், கவலையும் தெரிகிறது.
———————————————————————————————- 
பேருந்து நிலையத்தில் மனைவியிடம் பணம் பெறும் கணவனின் கண்கள் எப்போதும் மண் நோக்கியே இருக்கின்றன. கண்கள் நீர் கோத்தே இருக்கின்றன.
—————————————————————————————————————————————————————- 
நேசித்தல் இயல்பாகும் வரையினில் வலிகள் இருக்கும்.
—————————————————————————————————————————————————————-
யாரும் அற்ற பேருந்து நிழற் குடையில் உறங்கும் மனிதனின் சந்தோஷங்கள் நிலையானவையா?
—————————————————————————————————————————————————————-
தனது மகனை முத்தமிடும் தாயின் கண்கள் எப்போதும் பனித்திருக்கின்றன.
—————————————————————————————————————————————————————-
பெண்ணைத் துறக்கும் எந்த ஆணிற்கும், தன் பெண்ணைத் துறத்தல் அரிதாகவே இருக்கிறது.
—————————————————————————————————————————————————————-
காரினில் முன்னிருக்கையில் தாயில் மடியில் அமர்ந்து வாயில் விரல் வைத்து செல்லும் குழந்தையின் கனவுகளும் ஏக்கங்களும் என்று நிஜமாகும்?
—————————————————————————————————————————————————————-திருமண கோலத்தில் இருப்பவர்களைப் பார்த்து மற்றவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்று இப்போழுது 
தான்  தெரிகிறது. (டேய், போடா, போடா)

சமூக ஊடகங்கள்

வாழ்வின் அர்த்தங்கள்

மகளின் உறக்கத்தில்
தகப்பனை தலையணைக்குள் தேடுகையில் வாழ்வு முற்றுப் பெறுகிறது.

Click by : Vinod V

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 4

ஏங்க, இன்னைக்கு லீவுதான, கொஞ்சம் கடைக்கி போய்மளிகைசாமான்வாங்கிவந்திடுங்க,உங்கடிரஸ்எல்லாம் அயர்ன்கொடுத்து வாங்கிவச்சிருங்க, காலைலசாப்டமாட்டீங்க தானே(நான் எங்க சொன்னேன்), ஒரேதடவையாமதியம்சாப்டுக்கலாம், ரேஷன்போய்ட்டு வந்துடுங்க, பசங்கசட்டைஎல்லாம் வாஷிங்மிஷின்ல போட்டுதொவச்சி அயன்பண்ணிடுங்க, என்வண்டிக்கு பெட்ரோல் போட்டுகாத்துஅடிச்சிட்டு வந்துடுங்க., நேந்துநீங்ககாயவச்சதுணிஎல்லாம் மாடிலகாயுதுஅதெல்லாம் எடுத்து வந்துடுங்க, இன்னைக்கு(ம்) டீவிஉங்களுக்கு கிடையாது. இப்பவேகண்ணகட்டுதே…..
மாலை: என்னன்னே தெரில, இன்னைக்கு ஒரேடயர்டாஇருக்கு.
அடிப்பாவி நான்பேசவேண்டிய வசனத்தை எல்லாம் இவபேசறாளே
——————————————————————————————————————————————————————-
யாரும்அற்றபொழுதுகளில் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டேதோழமைகளுடன் மனம்விட்டுசிரித்துப் பேசும்வாய்ப்பு எப்பொழுதாவது தான்வாய்க்கிறது.
——————————————————————————————————————————————————————-
மனிதன்கர்வம்அழித்தலில் மருத்துவ மனைகளில் பங்குமகத்தானது.
——————————————————————————————————————————————————————-
தனதுமகளைபிறந்தஉடன்தீண்டும் தந்தையின் கண்கள்எவரும்அறியாமல் எப்போதும் பனித்திருக்கின்றன. அதுஆயுட்காலம்முழுவதும் தொடர்கிறது.
——————————————————————————————————————————————————————-
திருமணம் ஆனஉடன்மனைவியுடன் வெளியில் செல்கையில்இந்தாம்மா மல்லிகை பூ5 முழம்கொடுஎன்றுகடையில் கேட்பவனிடம் ஒருபுன்னகை கலந்தவெட்கம் தெரிகிறது.
——————————————————————————————————————————————————————-
யாருமற்ற இரவில்கணவனைஒருகண்ணால் கண்டுவிட்டு, மகனுக்கு போர்வைபோர்த்தி, அவனின்தலைகோதிகன்னத்தில் முத்தமிட்டு ஒருநிண்டபெருமூச்சுடன் உறங்கஒருதாயால்மட்டுமே முடிகிறது.
——————————————————————————————————————————————————————-
தன்மனைவியுடன் கைகோர்த்து நடக்கும் வாய்ப்பு ஒருசிலபுண்ணியவான்களுக்கே கிடைக்கிறது.
——————————————————————————————————————————————————————-
 வேலைக்கு செல்லும் பெண்ணைப் பார்த்துஅவளுக்கு என்னஎனும்பொழுதுகளில் அவளதுகண்களில் தெரிகிறது உயிரின் வலிகள்.
——————————————————————————————————————————————————————-
மனிதமனதின்பெரும்பாரம்குறைத்தலில் இறைமைக்கு அடுத்தநிலையில் குளியல் அறைகள்.
——————————————————————————————————————————————————————-
மிகஅதிகசந்தோஷத்தையும், மிகஅதிகவலியையும் கொடுத்து இதயத்தை ஈரமாக்கும் நிகழ்வு தந்தைக்குதன்மகள்ருதுவாகும் போது.

சமூக ஊடகங்கள்

மகிழம்பூக்கள்

மகள் கைப்பிடித்துச் செல்லும்
ஒவ்வொரு நடையிலும்
தெரிகிறது
வாழ்வின் அருமைகள்

Photo & Click by : Prakash Thiagarajan

சமூக ஊடகங்கள்

மண் கவுச்சி

நான் வாசனையாக இருக்கிறேனா
என்று கேட்டுவிட்டு மகள் சென்ற பின்னும்
குறையாமல் இருக்கிறது
வாசனைகளும் நினைவுகளும்.

Click by : SL Kumar

சமூக ஊடகங்கள்

சாரல்

மழை மிகவும் பிடிக்கும் என்கிறாய்.
ஏன் என்கிறேன்.
‘ஒற்றை குடை பிடித்து
உன் தோளில் சாய்ந்து
மழையில் நனையலாம் அல்லவா’ என்கிறாய்.
வெகு அருகில் தட்டான் பூச்சிகளின் ஒலிகள்.

சமூக ஊடகங்கள்

கார்காலம்

‘குடை பிடிக்க
கற்றுக் கொண்டேன்
எப்பொழுது மழைவரும் என்கிறாய்’
தகப்பனின் மனதறியா இருக்குமோ
மழை மேகங்கள்.

Photo : Karthik Pasupathi

சமூக ஊடகங்கள்

ஸ்ர்வ மோகினி

ஒரு நாளில்
முடிவினில் நீயும் நானும்.
சிறு பயணத்தில்
என் விரல் பிடித்து
நீ நடக்கிறாய்.
‘பார்த்து வருகிறாயா இல்லை
நான் நடை பழக சொல்லித்தரவா’
என்று கூறி
புன்னகைக்கிறாய்.
மயிலிறுகளில் தீண்டல்
வாய்த்திடுமோ மறுமையிலும்.

ஸ்ர்வ மோகினி -லலிதா சகஸ்ரநாமத்தில் வரும் ஒரு பெயர்

சமூக ஊடகங்கள்