தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருக்கழுகுன்றம்
•மூலவர் – சுயம்புலிங்க மூர்த்தி
•ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக,அதர்வணவேத பாறை உச்சியில் – சிவபெருமான் கோவில்
• க்ருத யுகத்தில் சாபம் பெற்ற சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும், த்ரேதா யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், வாப்ர யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், கலி யுகத்தில் சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் ழிபட்டுப் பேறு பெற்றது இத்தலம். இவர்கள் பிரம்மனின் மானச புத்திரர்கள்
•கருவறை கஜப்பிரஷ்ட அமைப்பு
•மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவித்த போது இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும் அதுமுதற்கொண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கிறது.
•கோடி ருத்ரர்கள் தவம் செய்து முக்தி அடைந்த தலம்
•சுந்தரர் ஈசனிடம் பொன் பெற்றத் தலம்
•மாணிக்க வாசகருக்கு அருட்காட்சி கிடைக்கப்பெற்ற தலம்
•சுரகுரு மன்னனுக்கு சுயம்புவாய் காட்சி
•மலைக் கோவில் சுற்றி 12 தீர்த்தங்கள். இந்திர தீர்த்தம், சம்பு தீர்த்தம்,ருத்ர தீர்த்தம்,வசிஷ்ட தீர்த்தம், மெய்ஞான தீர்த்தம், அகத்திய தீர்த்தம், மார்கண்ட தீர்த்தம், கோசிக தீர்த்தம், நந்தி தீர்த்தம், வருண தீர்த்தம், அகலிகை தீர்த்தம், பட்சி தீர்த்தம்
•பெயர்க்காரணம் – கழுகுகள் வழிபாடு – கழுகாச்சலம், கோடி ருத்ரர்கள் வழிபாடு – உருத்திரக்கோடி, மகாவிஷ்ணு வழிபாடு – வேதநாராயணபுரி, இந்திரன் வழிபாடு – இந்திரபுரி, இறைவன் மலை உச்சி – கொழுந்து வடிவம் – மலைக் கொழுந்து
•சுப்பையா சுவாமிகள்(கடையனோடை சுவாமி, பி.ஏ. சுவாமி, திருக்கழுக்குன்றம் சுவாமி ) முக்தி அடைந்த தலம்
தலம்
|
திருக்கழுகுன்றம்
|
பிற பெயர்கள்
|
வேதகிரி, வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம், கழுகாச்சலம், உருத்திரக்கோடி, வேதநாராயணபுரி, மலைக் கொழுந்து
|
இறைவன்
|
வேதகிரீஸ்வரர் (மலைமேல் இருப்பவர்), பக்தவத்சலேஸ்வரர் (தாழக்கோயிலில் இருப்பவர்)
|
இறைவி
|
சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை (மலைமேல் இருப்பவர்), திரிபுரசுந்தரி (தாழக்கோயிலில் இருப்பவர்)
|
தல விருட்சம்
|
வாழை
|
தீர்த்தம்
|
சங்கு தீர்த்தம்
|
விழாக்கள்
|
சித்திரை – தேர்த்திருவிழா, கார்த்திகை – சங்காபிஷேகம், குருபகவான் கன்னி லக்னத்தில் நுழையும் நாள் – லட்ச தீபம் ,சித்திரைத் திருவிழா, ஆடிப்பூரம், பௌர்ணமி
|
மாவட்டம்
|
காஞ்சிபுரம்
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
தாழக் கோவில்
காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
மலைக்கோவில்
காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 6.30 மணி வரை
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில்
திருக்கழுகுன்றம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN – 603109
044-27447139,27447393, 9894507959, 9443247394, 94428 11149
|
வழிபட்டவர்கள்
|
இந்திரன், மார்க்கண்டேயர்
|
பாடியவர்கள்
|
திருஞானசம்பந்தர் – 1 பதிகம், திருநாவுக்கரசர் – 1 பதிகம், சுந்தரர் – 1 பதிகம், பட்டினத்தார், அருணகிரி நாதர்
|
நிர்வாகம்
|
|
இருப்பிடம்
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 270 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 28 வது தலம்.
|
மலைக்கோயில் மூலவர் – வேதபுரீஸ்வர்
மலைக்கோயில் அம்மன் – சொக்க நாயகி
புகைப்படம் : தினமலர்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1ம் திருமுறை
பதிக எண் 103
திருமுறை எண் 8
பாடல்
ஆதல்செய்தா னரக்கர்தங்கோனை
யருவரையின்
நோதல்செய்தா னொடிவரையின்கண்
விரலூன்றிப்
பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ
டொருபாகம்
காதல்செய்தான் காதல்செய்கோயில்
கழுக்குன்றே.
பொருள்
அரக்கர்களின் தலைவனாகிய இராவணனை கயிலை மலையின் கீழ்ப்படுத்தி, நொடிப்பொழுதில் கால் விரலை ஊன்றி, அவனுக்கு துன்பத்தை விளைவித்தவனும், பிறகு அவனுக்கு வரங்கள் வழங்கியவனும் பெண்மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காதல் செய்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.
கருத்து
நொடிவரை – நொடிப்பொழுது
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7ம் திருமுறை
பதிக எண் 81
திருமுறை எண் 8
பாடல்
அந்தம் இல்லா அடியார் தம்மனத் தேஉற
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே
சந்தம் நாறும் புறவிற் றண்கழுக் குன்றமே
பொருள்
எண்ணிக்கை அற்ற அடியார்களது மனதில் அவரவர்க்கும் தகுந்தவாறு உறைபவனும், திருமாலும் நான்முகனும் தினமும் வழிபடும் செய்யும் வண்ணம் இருப்பவனும், மலர்கள் நாள்தோறும் குவிந்து கிடக்கும் வண்ணமும் , நடனமாடுகின்ற சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம் , சந்தன மரம் மணம் வீசுகின்ற , முல்லை நிலத்தோடு கூடிய , குளிர்ந்த திருக் கழுக்குன்றமே
கருத்து
அந்தம் இல்லா அடியார் – எண்ணிக்கை இல்லா அடியார்
Reference
1.வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம்
2.தருமை ஆதீன முதற் குருமணி திருஞானசம்பந்தர் அருளிய சிவபோக சாரம்
தில்லைவனம் காசி திருவாரூர் மாயூரம்
முல்லைவனம் கூடல் முதுகுன்றம் – நெல்களர்
காஞ்சிகழுக் குன்றமறைக் காடு அருணை காளத்தி
வாஞ்சியமென் முத்தி வரும்.
இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.