‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – அக்கு
பொருள்
- எலும்பு
- சங்குமணி
- எருதின் திமில்
- கண்
- உருத்திராக்கம்
- உரிமை
- எட்டிமரம்
- அகில்
- ஒரு சாரியை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
தக்கா ரடியார்க்கு நீயே யென்றுந்
தலையார் கயிலாயன் நீயே யென்றும்
அக்காரம் பூண்டாயும் நீயே யென்றும்
ஆக்கூரில் தான்றோன்றி நீயே யென்றும்
புக்காய ஏழுலகும் நீயே யென்றும்
புள்ளிருக்கு வேளூராய் நீயே யென்றும்
தெக்காரு மாகோணத் தானே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே
தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
திருநெய்த்தானம் எனும் தலத்தில் உறைபவனே! நீ மேம்பட்ட கயிலாயத்தில் உறைபவன் என்றும், ஆக்கூர் எனும் தலத்தில் தான்தோன்றி ஈசன் என்றும், புள்ளிருக்குவேளூர் எனும் வைத்திஸ்வரன் கோயில், தெற்கே உள்ள மாகோணம் இவற்றில் உறைபவனாகவும் உள்ளாய். தகுதியுடையவரான அடியாருக்கு நீயே துணையாகவும், எலும்பு மாலை அணிபவனாகவும் உயிர்கள் வாழும் ஏழு உலகங்களாகவும் உள்ளாய் என்று அடியோர்களகிய நாங்கள் நின்னைத் துதிக்கின்றோம்.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
இறைவன் உயிருக்கு உடனாய் நிற்கும் நிலைக்கு பெயர் என்ன?
பேதா பேதம்