‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – கொற்றம்
பொருள்
- வெற்றி
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.
தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்து உரை
பூம்பாவாய்! ஊர்ந்து வரும் அலைகள் வந்து உலாவும் கடலை அடுத்துள்ள சிறப்புடைய மயிலையில், கூரிய வேலால் மீன்களைக் கொல்வதில் வெற்றிகாணும் நெய்தல் நில மக்கள் உடையுயதும், மழைவளம் பெருகியதால் வளர்ந்த சோலைகளும் சூழ்ந்த கபாலீச்சரம் என்னும் கோயிலில் வீற்றிருக்கும் பெருமானுக்குத் திருவாதிரை நாளில் நிகழ்த்தும் விழாவைக் காணாது செல்வது முறையோ?
விளக்க உரை
- மார்கழித் திருவாதிரை விழாச் சிறப்பு உணர்த்தும் பாடல்
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
உலகைப் படைக்கும் நிமித்தக் காரணன் யார்?
சிவபெருமான்