‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – அயில்
பொருள்
- இரும்பு
- சத்திரம் வைக்கும் கத்தி.
- அழகு
- கூர்மை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அயிலாரு மம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.
தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்து உரை
கூரிய அம்பு எய்து முப்புரங்களையும் அழித்து, குயில் போன்ற இனிய மென்மையான மொழிபேசும் உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனாகி, மயில்கள் நிறைந்து வாழும் சோலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் எழுந்தருளிய இறைவனைப் பற்றி நின்றவர்களுக்குப் பாவம் எதுவும் இல்லை.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
கருதல் அளவையின் நான்கு வகைகள் யாவை?
வாயில் காட்சி, மானதக் காட்சி, தன் வேதனைக் காட்சி, யோகக் காட்சி