‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – அநந்தம்
பொருள்
- முதலில்லாது
- அளவில்லாதது
- முடிவிலி
- அளவற்றது
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.
விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்
மூலம் – காஷ்யப முனிவர் வடமொழியில் இயற்றியது
கருத்து உரை
எல்லாவிதமான பற்றுகளையும் அறுத்தும், முதலில்லாததாகவும், அளவில்லாததாகவும், முடிவில்லாததாகவும், அளவற்றதாகவும் கொண்ட அநந்தக் குணங்கள் எவன் இடத்தில் இருந்து தோன்றுமோ, அவ்வாறான நற்குணங்களின் உற்பத்தியிடமாகவும் இருந்து இவ்வுலகையே உண்டாக்கியும், காத்தும், மறைத்தும் லீலைகள் செய்பவனும், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் அறுபத்து நான்கு கலைகளுக்கும் தலைவனாக இருக்கும் இருக்கும் முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானை அன்புடன் தொழுகின்றோம்.
விளக்க உரை
- சிவனின் எண்குணங்களில் ஒன்று
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
பதி எனும் சொல்லுக்கான பொருள் என்ன?
பசுவுக்கும், பாசத்துக்கும் தலைவன்