‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – நிராதாரம்
பொருள்
- ஆதாரமின்மை
- சார்புவேண்டாமை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல வுந்தீபற
விமலற் கிடமதென் றுந்தீபற.
திருநெறி 5 – திருவுந்தியார்
கருத்து உரை
மனம் பலவழிகளிலும் புறத்தில் வியாபிக்காமல் ஆறு ஆறாதாரங்களிலும் அதற்கான உபாசனைத் தேவதைகளைத் தியானித்து நிராதாரமாகிய மனசலனமற்ற இடத்தே சென்று மேலிடமாகிய திருவருளினிடத்திலே செல்லுவாயாக; அப்படிப்பட்ட அந்த கர்த்தாக்களுக்கு இருப்பிடம் அந்தத் திருவருளே.
விளக்க உரை
- நிராதாரத யோகம் – ஆன்மா தன்னறிவு இழந்து அறிவே வடிவமான சிவனை அடைந்து பற்றற்று நிற்கும் நிலை