‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – எத்தால்
பொருள்
- எக்காரணம்பற்றி
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி வாழலாம் – சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள்.
ஔவையார் தனிப்பாடல்கள்
கருத்து உரை
கணவனுக்கு ஏற்ற மனைவி அமையப்பெற்றால் எக்காரணம் பற்றியும் அவளுடன் கூடி வாழலாம். சற்றே மாறுபாடு கொண்டு குழப்பம் தரும் எதிர்மறையான மனைவி அமையப்பெற்றால் அவன் எவரிடமும் எதுவும் விளக்காமல் சந்நியாசம் கொள்ளலாம்.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
ஆப்த வாக்கியம் என்பது என்ன?
சான்றோர் செய்த நூல்
மிக்க நன்றி, அனைத்தும் குருவருள்.
தொடர்ந்து வாசித்து வாருங்கள்.
சொல்லின் பொருள் தக்க
எடுத்துக்காட்டுடன்
விளக்கப்பட்டுள்ள பாங்கு
மிக்க சிறப்புடையது; போற்றற்குரியதுமாம்.