‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – சரக்க
பொருள்
- விரைவாக
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர்
இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ
சரக்க விக்கத வந்திறப் பிம்மினே.
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
நிறைந்த புன்னைகள் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் எம்பெருமானே! இராவணனை விரலால் நெறித்த நீர் எளியேன் பால் இரக்கம் கொஞ்சமும் இல்லாதவராக உள்ளீர்! விரைந்து வந்து இக்கதவினைத் திறப்பித்து அருள்வீராக.
விளக்க உரை
- பத்துத் திருப்பாடல்கள் பாடியும் கதவு திறவாமையைக் கண்ட திருநாவுகரசர் ‘இரக்கமில்லையோ’ எனக்கூறிய இப்பாடலின் உரை கேட்டு திருநாவரசரின் பாமாலை இன்னிசையில் ஈடுபட்டிருந்த இறைவன் விரைந்து கதவைத் திறந்தான்
- அடர்த்திட்ட – நெருக்கி அருள் செய்த
- இரக்கமொன்றிலீர் – இரக்கம் சிறிதும் என்பால் இல்லாதவர்
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
உயிர்களை இறைவன் படைக்கிறானா?
இல்லை.( அவைகள் அநாதி)