எல்லாப் பக்கங்களிலும் கடல் உடையதாகவும் மற்றும் பெரிய மலைகளால் சூழப்பட்ட இலங்கை நகரத்து அரசனாகிய இராவணனை அவன் கர்வ எண்ணம் அழியுமாறு தனது திருவிரலால் அழுத்தி உதைத்தலாகிய செயலைச்செய்து அவன் செருக்கை அடக்கி மகிழ்ந்தவர் சிவமூர்த்தி. அவ்வாறான பெரிய கடலால் சூழப்பட்ட இந்நில உலகத்தவர் நந்தி என்று பெயரிட்டு வழிபடும், பெரிய மூங்கில் காடுகள் சூழ்ந்த ஐயாற்று எம்பெருமானுக்கு, அடியேன் அடிமையாகிக் (பிறவித் தளைகளில் இருந்து) தப்பினேன்.
பதைத்தொழிந் தேன்பர மாஉனை நாடி அகைத்தொழிந் தேன் இனி ஆரொடுங் கூடேன் சிதைத்தடி யேன்வினை சிந்தின தீர உதைத்துடை யாய்உகந் தாண்டரு ளாயே.
பதம் பிரித்து
பதைத்து ஒழிந்தேன் பரமா உனை நாடி அதைத்து ஒழிந்தேன் இனி யாரொடும் கூடேன் சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர உதைத்து உடையாய் உகந்து ஆண்டருளாயே
திரு அருட்பா – 6ம் திருமுறை – வள்ளலார்
கருத்துஉரை
யாவர்க்கும் மேலானவரே, உம்மை அடைய விரும்பிய அடியவனாக யான் துடித்தேன் அவ்விருப்பதின் படி உம்மை அடைந்து இனி ஒருவரோடும் சேரமாட்டேன் அவர்களது சேர்க்கையை எல்லாம் அறுத்து விட்டேன். ஆகையால் அடியேனது வினைகள் அழிந்தொழியும்படி போக்கி என்னை ஏற்று, என் தலையிலும், உள்ளத்திலும் உமது திருவடிகளைச் சூட்டி என்னை ஆட்கொண்டருள்வீர்.
மனிதர்களின் கர்ம பலன்களை அறிந்து கொண்டேன். மற்றவர்களுக்கு துன்பம் செய்பவன் நன்மை அடையும் வகை எது? அது ஒரு ஜென்மத்தில் உண்டாகுமா அல்லது பல ஜென்மாக்களில் உண்டாகுமா?
சிவன்
பிறர் நன்மைக்காக அவர்களுக்கு துன்பத்தை செய்பவன் சுகம் பெறுவான். அரசன் ஜனங்களை தண்டித்து, பயமுறுத்தி நல்வழிப்படுத்துதல், வழி தவறி நடக்கும் சீடர்களை தண்டித்து ஆச்சாரியன் நல்வழிப்படுத்துதல், வைத்தியம் செய்பவன் என இவ்வாறு நல் எண்ணத்துடன் துன்பம் செய்பவன் சுவர்க்கம் அடைவான். அயோக்கியனான ஒருவன் கொல்லப்பட்டால் மற்றவர்கள் சுகப்படுவர் எனில் அதில் தர்மம் மட்டுமே இருக்கும். பாவம் இருப்பதில்லை.
உமை
இவ்வுலகில் நான்கு வகையான உயிர்கள் காணப்படுகின்றன. அவைகளின் அறிவு இயற்கையானதா அல்லது உண்டாக்கப்படுவதா?
சிவன்
உலகம் தாவரம், ஜங்கமம் என்று இருவகைப் பொருளாக கூறப்படுகிறது. அவற்றில் பிராணிகள் நான்கு வகைகளில் உற்பத்தி ஆகின்றன.
பெயர்
ஆத்மா / அறிவு
இனங்கள்
உண்டாகும் முறை
1
உத்பிஜ்ஜம்
ஸ்பரிசம் எனும் ஒர் அறிவு
நிலம் + நீர்
2
ஸ்வேதஜம்
ஸ்பரிசம்,பார்வை எனும் இரு அறிவு
கொசு, பேன்
வெப்பம்
3
அண்டஜம்
ஐந்து அறிவு
பறவை
வீர்யம் + நீர்
4
ஜராயுஜங்கள்
ஐந்து அறிவு
பசு, காட்டுமிருகங்கள், மனிதர்கள்
சுக்லம் + சோணிதம்
இரவில் உண்டாகும் இருள் ஒளியால் அழிந்து போகும். தேக இருள் மாயையால் சூழப் பட்டிருப்பதால் உலக ஒளிகள் அனைத்தும் சேர்ந்தாலும் விலகாது.தேக இருளைப் போக்க பிரம்மர் பெரும் தவம் செய்து உலக நன்மையின் பொருட்டு வேதம், வேதாகமம், உபநிஷத்துகள் ஆகியவற்றைப் பெற்று தேக இருளை ஒழித்தார். இது நன்மை பயக்கும்; இது தீமை பயக்கும் என்பதை சாஸ்திரங்கள் தெரிவிக்கா விடில் உலகினில் மனிதர்களும், விலங்குகளும் வேற்றுமை இல்லாமல் இருப்பார்கள். எனவே உயிர்களுக்கு ஞானத்தைவிட சிறந்தது எதுவும் இல்லை. பிறக்கும் போது பிறவி கொண்டு பிறந்த ஞானம் முதன்மையானது. கற்பிக்கப்படும் ஞானம் இரண்டாவதானது. சாத்திரங்களைக் கற்றப்பின் ஒருவன் பிறவி பயன் பெற்றவனாகிறான். அவன் தேவதை போல் மனிதர்களுக்குள் பிரகாசம் உடையவன் ஆகிறான். அவன் பெற்ற அந்த ஞானம் காமம், குரோதம், பயம், கர்வம், விபரீத ஞானம் இவற்றை மேகங்களை காற்று விலக்குவது போல் ஒதுக்குகிறது. இவர்கள் செய்யும் சிறிய தர்மமும் பெரிதாகும். ஞானமுள்ளவன் பொருள்களின் உயர்வுதாழ்வுகளையும், உண்மையையும் அறிந்தவன் ஆகிறான். இவ்வாறான சாத்திர ஞானத்தின் பலன்களை சொன்னேன்.
உமை
சிலர் முன் ஜென்மத்தின் நினைவுகளை அறிந்தவர்களாகப் பிறக்கிறார்களே, அது எவ்வாறு?
சிவன்
திடீரென இறந்த மனிதர்கள் உடனே பிறக்கும் போது முந்தய ஜன்மத்தின் நினைவு சிறிது இருக்கும். அவர்கள் உலகில் பிறந்து அவ்வாறான ஞானம் கொண்டு இருக்கிறார். அவர்கள் வளர வளர அந்த அறிவு கனவு போல் மறைந்து விடுகிறது.
உமை
சிலர் இறந்தபிறகும் அதே தேகத்தை அடைகிறார்களே, அது எவ்வாறு?
சிவன்
எம தூதர்கள், உயிர்கள் அதிக இருக்கும் போது அவர்களால் கொல்லப்பட்டு பகுத்தறிவின்றி தான் கொண்டு செல்லும் உயிர் விடுத்து மற்றொரு உயிரை கொண்டு செல்கின்றனர். எமன் ஒருவன் மட்டுமே ஒருவனது புண்ணிய பாவங்களை அறிந்திருக்கிறான். எனவே அவர்கள் ஸ்ம்யமனி எனும் எமன் இடத்திற்குச் சென்று அவரால் கர்மங்களை அனுபவிப்பதற்காக திரும்ப அனுப்பப்படுகின்றனர். அவர்கள் கர்மம் முடியும் வரை எமன் இருப்பிடம் செல்ல இயலாது.
உமை
மனிதர்கள் தூங்கிய உடன் கனவு காண்கின்றனர், இது இயற்கையா? அல்லது வேறு காரணமா?
சிவன்
தூங்குபவர்களின் சஞ்சரிப்பதான மனம் நடந்ததையும் வருவதையும் அறிகிறது. எனவே கனவு வருவதைக் குறிப்பதாக இருக்கும்.
உமை
உலகில் செய்யப்படும் தொழில்கள் யாவும் தெய்வத்தாலே நடக்கிறது என சிலரும், செய்யப்படும் முயற்சி முன்வைத்து முயற்சியால் நடக்கிறது என சிலரும் நிச்சயிக்கின்றனர். இந்த காரணத்தால் மனம் சந்தேகம் கொள்கிறது. இதன் காரணத்தை விளக்குங்கள்.
தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும் பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனிஆற்றேன்
திரு அருட்பா – 6ம் திருமுறை – வள்ளலார்
கருத்துஉரை
அம்மையும் அப்பனுமாகிய பெருமானே, உடல் வளர்ச்சியால் தடித்த மகன் செய்த தவறு செய்வது கண்டு தந்தை அவனை அடித்தால், உடனே தாய் அவ்விடம் போய் தடுத்துத் தன் மகனை அணைத்துக் கொள்வாள்; தாய் அடித்தால், தன் கையில் பற்றிக் கொண்டு தந்தை தன்னோடு அணைத்துக் கொள்வான்; திருநீறணிந்த திருமேனியை உடையனாக தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடும் தூயவனே, எனக்கு தந்தையும் தாயும் நீயாதலால் இதுவரை உலகியல் துன்பங்களால் என்னை வருத்தியது போதும்; இனி உன்னுடைய அருளால் என்னை அணைத்து ஆதரிக்க வேண்டும்.
விளக்கஉரை
இனிமேல் இத்துன்பத்தைப் பொறுக்க மாட்டேன் எனும் பொருளில்
தடித்த மகன் – உடல் வளர்ச்சி மட்டும் பெற்ற ஒருவன் எனும் பொருளில்.( புற விஷயங்களில் மட்டும் வளர்ச்சி பெற்ற ஒருவன்)
அம்மைஅப்பன் – சிவன் – அம்மையும் அப்பனுமாகி (இரண்டாகவும்) எனும் பொருளில்
பிறவி ஆன்மாக்கள் மீது தாயும் தந்தையும் ஆகிய அம்மையப்பன் ஒத்த அன்புடையவர்.
அடித்தல் துன்ப நுகர்ச்சி, அணைத்தல் இன்ப நுகர்ச்சி. இரண்டும் இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. ஆதலால் ஒரு பகுதியை கண்ட எனக்கு மறுபகுதியை காணச் செய் எனும் பொருளில்
எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி உவராதே யவரவரைக் கண்ட போதே உகந்தடிமைத் திறம்நினைந்தங் குவந்து நோக்கி இவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லி இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
தேவாரம் – 6ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
எவராக இருப்பினும் நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராக்கம் பூண்டு இருப்பவரைக் கண்டால், அந்த திருவேடத்தின் பெருமையை நினைத்து, வெறுப்பில்லாமல், அவர்களைக் கண்ட போதே விரும்பி அடிமைத் திறத்தை நினைத்து, `இவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா, அவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா’ என உள்ளத்தை இருவகையாகச் செலுத்தாமல் இருக்க வேண்டும். இறைவன் வேறு, அடியவர் வேறு எனும் இருவேறு மனநிலையில் இல்லாமல் ஒரே மன நிலையில் இறைவனிடத்தில் செய்யும் செயல்களையே அவ்வாறான அடியவரிடத்தும் விரும்பிச் செய்ய வேண்டும். இவ்வாறு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் சிவனைக் காணலாம்.
விளக்கஉரை
எவரேனும் – எவ்வகையானக் குற்றமுடையராயினும்.
திருவேடமுடையாரைத் தொழும் அடியார் நெஞ்சினுள் சிவ பிரானைக் காணலாம்`. அப்பெருமான் அத்திருவேடமே தானாய் நின்று அருளுவன் என்பது குறித்தது. திருவேடம் தொழுதல் சிறந்து எனும் பொருள் பற்றி.
தில்லையில் நடம்பயிலும் சிவனே! நின்ற இடத்தும், அமர்ந்த இடத்தும், கிடந்த இடத்தும் நினைந்து, எழுந்த இடத்தில் தொழுகின்ற அடியவனாகிய நான், மனம் பொருந்தி ஒரு நேரத்தில் உன்னை விருப்புற்று நினைக்காமல் இருந்தாலும் நீ அவ்வாறு இருக்கவிடாமல் கன்றைப் பிரிந்த தாய்ப்பசுவைப் போலக் கதறச் செய்கின்றாயே ஒழிய நீ என் எதிரில் வந்து நிற்கவில்லை. இவ்வாறு நீ செய்யும் இச்செயல் உனக்கு ஏற்புடைய நல்ல செயல் ஆகுமா?
விளக்கஉரை
கன்றும், தாய்ப்பசுவும் என்றும் பிரியாது. ஆகவே நீ அவ்வாறு பிரியாது நிற்பாய் எனும் பொருள் பற்றி.
திருவருள் ஆணைபெற்றுத் தொழில்புரியும் பிரம்மன், மால், உருத்திரன், மகேசன் என்னும் இவர்கள் விரும்பும் நிலையினை. அருளவும் மிகவும் சிறப்புத் தன்மை பிரணவம் பொருந்திய ஒன்பது ஆற்றல்களும் ஒன்றுகூடவும், தீரா இன்பவடிவினனாகிய சிவபெருமான் திருநோக்கம் கொண்டனன். அத்தருணத்தில் இன்பமயமான ஆன்மா ‘தென்னாதெனா’ என ஒலித்து தேனுண்ணவந்து மொய்க்கும் ஆருயிர் வண்டினங்களின் நிலைக்களமாகிய ஒலிமெய் வடிவம் எய்தியது.
மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல இனமலர் கையில் கொண்டு அங்கு, இச்சித்த தெய்வம் போற்றிச் சினம் முதல் அகற்றி வாழும் செயல் அறம் ஆனால் யார்க்கும் மனம் ஒரு தெய்வம் எங்கும் செய்தற்கு முன் நிலையாம் அன்றே
திருநெறி 2 – சிவஞானசித்தியார்
கருத்துஉரை
ஒருவனுக்குத் தன் கருத்திற்கு இயைந்த ஒரு கடவுளை மனம், மொழி மற்றும் மெய்களால் வழிபட்டு, சொல்லப்பட்டவாறு தீமைகளை விலக்கி, வாழும் செயலாகிய அறம், விதிக்கப்பட்ட ஒழுக்கம் முதலிய நன்மைகளை உடையனாய் சினம் முதலியவற்றை விலக்கி விளங்கும் ஒருவனுக்கு சிவபிரானே அத்தெய்வத்தினிடமாக நின்று அச்செயலை ஏற்றுக் கொண்டு பயன் உதவுவார்.
விளக்கஉரை
எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும் அவ்வடிவாக இருந்து அருளுபவர் சிவன் எனும் பொருள் பற்றி.
1. விநாயகரின் தாயான பார்வதியும், தந்தையாகிய சிவனும் பால கணபதியை திருமஞ்சனம் செய்வது போலவும் கொண்ட வடிவம்
2. பார்வதியின் மடியில் அல்லது தோளில் இருப்பது போன்ற வடிவம்
3. தவழ்வது போலவும் காட்டுகின்ற ஓவியங்களும், சிற்பங்களும் கொண்ட வடிவம்
4. யானைமுகம், நான்கு திருக்கரங்கள், கழுத்தில் பூமாலை, தும்பிக்கையில் மோதகம் அல்லது விளாம்பழம்
மேனி வண்ணம்
உதிக்கின்ற செங்கதிர் போன்ற செந்நிறம் / பொன்னிற மேனி
திருக்கைகள்
நான்கு திருக்கரங்கள் – செழிப்பையும், வளத்தையும் முன்னிருத்தி ஒவியங்கள் / சிற்பங்கள்
வகை 1 – மாம்பழம், மாமரக் கிளை, கரும்பு, மோதகம்
வகை 2 – வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம்(சில இடங்களில் பூங்கொத்து), கரும்பு
பலன்
குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கம், குழந்தையைப் போன்ற மகிழ்வு, நல்ல உடல்நலம்
மற்றவை
கணபதியைச் சிறு பிராயத்தினராகக்கொண்டு வழிபடுவதற்கான வடிவம். பால = இளம், சிறு பிராயம்.
சில சமயங்களில் குழந்தையாகக் காட்டாமல் குழந்தையின் முகத் தோற்றத்துடன் மட்டும் காட்சி
18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்ரா ஓவியத்தில் பால கணபதி
உறங்கும் பொழுதும், விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருகி நாள்தோறும் திருவைந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள். பல வழிகளில் திரிந்து செல்லும் வஞ்சகத் தன்மையுடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து காப்பாற்றியது திருவைந்தெழுத்தே.
விளக்கஉரை
உறங்கும் பொழுதும், விழித்திருக்கும் பொழுதும் என்பது பொதுவாக சொல்லப்பட்டாலும் மாயையால் உலகில் வாழ்வு கொள்ளுதல் என்பது உறங்குதலுக்கு சமமாகவும், ஞான மார்க்கத்தால் உயர் நிலை அடைந்த பிறகு விழிப்பு நிலை என்பதும் பொதுக்கருத்து. (ஆன்றோரும், இறை அன்பர்களும் கருத்துரைக்க). ‘உறங்குவது போலும் சாக்காடு’ எனும் குறள் யாண்டும் சிந்திக்கத்தக்கது.
திருவைந்தெழுத்தை ஓதுவார் எமனால் துன்பப்படார் என்பது கருத்து.
11ம் திருமுறை – இளம்பெருமான் அடிகள் – சிவபெருமான் திருமும்மணிக்கோவை
கருத்துஉரை
நான்முகன் படைத்த தூண்களை உடைய மாடத்தில் இடப் பக்கத்திலுள்ள மலையில் பொருந்திய தெய்வத்தன்மையுள்ள தகழியில் மாலைக் காலத்தில் காணப்படுகின்ற சிவந்த மேகம் விழுந்த தேவருலகம், உயர்ந்த முத்தமாகிய பேரொளி. காற்று வீசினாலும் சிறிதும் அசையாத உன் பாத நிழல் அளியுமாறு வைத்த உச்சியின்மீது விளங்குகின்ற வளைந்த திங்களாகிய மலர்மாலையை நீ அணிந்ததன் காரணம் யாது?
விளக்கஉரை
ஞான தீக்கை செய்யும் காலத்துக் குவளை மாலையைச் சூட்டுதல் மரபு.
அம்மையாகிய சத்தியும் அப்பராகிய சிவனும் பிரபஞ்சத்துக்குக் காரணம் என்று அறிக; அம்மையப்பராகிய சிவன் அந்தச் சத்தி வழியாக வந்து மோட்சத்தைக் கொடுப்பார்; அவர் தானே தலைமை ஏற்று அப்பரிசே வந்தளிப்பர்; அவர் எல்லா உலகிற்கும் அப்புறத்தார். சிவன் அத்துவா எனப்படும் ஆறு வழியில் பொதுவியல் படி கலந்திருப்பினும் தன்னியல்பால் அப்பாற்பட்டவர்; இப்புறத்தும் அல்லார்போல் நின்றாலும் அவர் இப்படிக் கலந்திருப்பினும் கலவாதாரைப் போன்று சுட்டிக் காணப்படார் ஆவார்.
உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட; விரித்திட்டார்; உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித் தரித்திட்டார்; சிறிது போது; தரிக்கிலர் ஆகித் தாமும் சிரித்திட்டார்; எயிறு தோன்ற;-திருப் பயற்றூரனாரே
தேவாரம் – 4ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
திருப்பயற்றூர்ப் பெருமான், குருதிவெள்ளம் ஆறாக ஓட யானையின் தோலை உரித்துத் தம் திருமேனியில் விரித்துப் போர்த்திக் கொண்டார். யானைத்தோலை உரித்ததனையும் போர்திக் கொண்டதையும் கண்டு பார்வதிதேவியார் அஞ்சி தம் விரல்களைப் பலகாலும் உதறி வருந்தியதைக் கண்டு, சிறிதுநேரம் அத்தோலைப் போர்த்தியபின் அவ்வாறு தொடர்ந்து போர்த்திய்ம் ஆற்றல் இல்லாதவரைப் போலக் காட்சி வழங்கித் அம்பிகையின் அச்சம் தெளியத் தம் பல் தெரியுமாறு சிரித்துவிட்டார்.
புகைப்படமும், தலைப்பும் : திரைப்பட இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன்
அன்றொரு நாளின்
பெருமழையினில்
நீ என்னோடு பயணித்தாய்.
பெருமழையில் நனைந்தபடி
நம் இருவருக்குமான
மழை நினைவுகளை
வரிசைபடுத்தச் சொன்னாய்.
பெருமழையில் தேனீர்;
மழையை உன் துப்பட்டாவால்
துடைத்த நிகழ்வு;
இலக்கியம் பேசியபடி நகர்ந்த நிகழ்வு;
இசையின் பரிமாணங்களில் உன் வியப்பு
வார்த்தைகளின் கோர்வையில்
பெருமிதம் கொண்டு
இன்னும் கூறவாக என்று புன்னகைக்கிறேன்.
மௌன மழையில் உன் கண்ணீரை
கரைத்துவிடு என்று கூறி
விலகலுக்கான காரணம் விளக்குகிறாய்.
தனித்த நகர்தலுடன்
இப்பொழுதும்
பெருமழை பெய்து கொண்டிருக்கிறது.
எல்லா திசைகளிலும் இருந்து, எல்லா உயிர்கள் இடத்திலும் உறைந்து இருந்து எங்களது தந்தையாகவும், முக்தியைத் தரும் தவமாகிய சுடரினுள் வித்தாக இருக்கக் கூடியவனும் ஆகியவன் என்னுடைய இறைவன் ஆவான். சித்தம் தெளிந்து, காலத்தினால் அறுதி செய்ய இயலா வேதமாகிய கோயில் திறந்தப்பின் குரு என்றும், முனிவன் என்றும், உயர்ந்தோன் என்றும், கடவுள் என்றும் கூறப்படும் அவனின் ஆடல் கண்டப்பின் செய்யத்தக்கது என்று நினைவு கொண்டிருப்பது மாறும்.
விளக்கஉரை
புறத்தில் எல்லா இடங்களிலும் நீக்கமற நினைத்திருக்கும் இறைவனை அகத்தில் கண்டப்பின் பிறவியின் பொருட்டு செய்யத்தக்க விஷயங்கள் எது என எளிதில் விளங்கும்.
உயிர்க்கொலையும் புலைப் பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார் அவர்க்குப் *பயிர்ப்புறும்ஓர்* பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
6ம் திருமுறை – வள்ளலார்
கருத்துஉரை
புலால் மறுத்தோரை அகவினத்தார் என்றும், கொலையும் புலைப் புசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் என்றும் அவர்கள் புற இனத்தார் என்று இறைவன் எனக்கு அருளினான்.
விளக்க உரை
புறத்தில் இருப்பது விலகும், அகத்தில் இருப்பது பற்றி நிற்கும் என்றபடி
உலகின் ஆதி முதல்வனும், ஓங்கார நாயகனும், ‘கம்’ என்னும் பீஜ மந்திரமானவராகவும், மூலாதார மூர்த்தியாகவும், கருணையே வடிவானவராகவும், எல்லை அற்ற பரம் பொருளும், நினைத்தை நினைத்தவாறு நிகழ்த்த அதை கூட்டிவைப்பவரும், சகல உயிர்களிடத்தும் தயை, அன்பு, கருணை ஆகியவற்றை சமமாக வழங்குபவரும், தானே மெய்பொருளாகவும் பிரபஞ்சப் பொருளாகவும் இருந்து சகல உயிர்களிடத்திலும் வழங்குபவராகவும், பற்றாப் பொருளையும் பற்ற உறுதுணை செய்பவராகவும், தானே அப்பொருளாகவும், அகப்பொருளாகவும் இருப்பவரும் கால நேரம் கடந்தவராகவும், அனைத்திலும் கருப்பொருளாகவும், மகாபாரதத்தை எழுதிய நாயகனும் ஆக இருக்கும் கணபதியை குறித்து இத் தொடர் எழுத விழைகின்றேன்.
குரு அருள் கணபதியோடு தொடர்பு உடையது ஆனதால், குருவருள் தாள் பற்றித் தொடங்குகிறேன்.
அவரவர் ஞான நிலைக்கு ஏற்றவாறும் குரு உபதேசம் மூலமாகவும், ஷோடசம் முன்வைத்து 16 வடிவங்கள் என்றும், அழியாமை குறித்து 32 வடிவங்கள் என்றும், அட்ஷரங்கள் குறித்து 51 வடிவங்கள் என்றும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பொதுத் தன்மைப் பற்றி இங்கு 32 வடிவங்கள் விளக்கப்படுகின்றன.
பெருங்காற்றில் விளக்கை ஏற்றுதலும், அரிசி மாவு ஆற்றில் இருந்து பெறுதல் இரண்டும் மீண்டும் பெறலாகாத செயல்
குடும்பச்சேறு தன்கண் அழுந்திய உள்ளத்தை மேன்மேலும் ஆழ்த்துவதேயன்றிப் பல்வேறு ஆசைகளை எழுப்பி அதில் இருந்து வெளிவராமல் தடுக்கும் என்ற கருத்துத் தோன்ற, “ஆடும் குடும்பச்சேறு”