ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – இச்சித்தல்
பொருள்
- விரும்புதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையில் கொண்டு அங்கு, இச்சித்த தெய்வம் போற்றிச்
சினம் முதல் அகற்றி வாழும் செயல் அறம் ஆனால் யார்க்கும்
மனம் ஒரு தெய்வம் எங்கும் செய்தற்கு முன் நிலையாம் அன்றே
திருநெறி 2 – சிவஞானசித்தியார்
கருத்து உரை
ஒருவனுக்குத் தன் கருத்திற்கு இயைந்த ஒரு கடவுளை மனம், மொழி மற்றும் மெய்களால் வழிபட்டு, சொல்லப்பட்டவாறு தீமைகளை விலக்கி, வாழும் செயலாகிய அறம், விதிக்கப்பட்ட ஒழுக்கம் முதலிய நன்மைகளை உடையனாய் சினம் முதலியவற்றை விலக்கி விளங்கும் ஒருவனுக்கு சிவபிரானே அத்தெய்வத்தினிடமாக நின்று அச்செயலை ஏற்றுக் கொண்டு பயன் உதவுவார்.
விளக்க உரை
எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும் அவ்வடிவாக இருந்து அருளுபவர் சிவன் எனும் பொருள் பற்றி.