ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – மதலை
பொருள்
- மழலை மொழி
- குழந்தை
- மகன்
- பாவை
- பற்றுக்கோடு
- தூண்
- யூப ஸ்தம்பம்
- வீட்டின் கொடுங்கை
- பற்று
- மரக்கலம்
- கொன்றை
- சரக்கொன்றை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
முதல்வன் வகுத்த மதலை மாடத்து
இடவரை ஊன்றிய கடவுட் பாண்டிற்
பள்ளிச் செம்புயல் உள்விழு துறீஇப்
புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர்
எறிவளி எடுப்பினும் சிறுநடுக் குறாநின்
அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசை
இலங்குவளைத் தனிப்போது விரித்த
அலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே.
11ம் திருமுறை – இளம்பெருமான் அடிகள் – சிவபெருமான் திருமும்மணிக்கோவை
கருத்து உரை
நான்முகன் படைத்த தூண்களை உடைய மாடத்தில் இடப் பக்கத்திலுள்ள மலையில் பொருந்திய தெய்வத்தன்மையுள்ள தகழியில் மாலைக் காலத்தில் காணப்படுகின்ற சிவந்த மேகம் விழுந்த தேவருலகம், உயர்ந்த முத்தமாகிய பேரொளி. காற்று வீசினாலும் சிறிதும் அசையாத உன் பாத நிழல் அளியுமாறு வைத்த உச்சியின்மீது விளங்குகின்ற வளைந்த திங்களாகிய மலர்மாலையை நீ அணிந்ததன் காரணம் யாது?
விளக்க உரை
ஞான தீக்கை செய்யும் காலத்துக் குவளை மாலையைச் சூட்டுதல் மரபு.