ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – அகைதல்
பொருள்
- எரிதல்
- ஒடிதல்
- வருந்துதல்
- தளிர்த்தல்
- மலர்தல்
- தாழ்தல்
- காலந்தாழ்த்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
மூலம்
பதைத்தொழிந் தேன்பர மாஉனை நாடி
அகைத்தொழிந் தேன் இனி ஆரொடுங் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தின தீர
உதைத்துடை யாய்உகந் தாண்டரு ளாயே.
பதம் பிரித்து
பதைத்து ஒழிந்தேன் பரமா உனை நாடி
அதைத்து ஒழிந்தேன் இனி யாரொடும் கூடேன்
சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர
உதைத்து உடையாய் உகந்து ஆண்டருளாயே
திரு அருட்பா – 6ம் திருமுறை – வள்ளலார்
கருத்து உரை
யாவர்க்கும் மேலானவரே, உம்மை அடைய விரும்பிய அடியவனாக யான் துடித்தேன் அவ்விருப்பதின் படி உம்மை அடைந்து இனி ஒருவரோடும் சேரமாட்டேன் அவர்களது சேர்க்கையை எல்லாம் அறுத்து விட்டேன். ஆகையால் அடியேனது வினைகள் அழிந்தொழியும்படி போக்கி என்னை ஏற்று, என் தலையிலும், உள்ளத்திலும் உமது திருவடிகளைச் சூட்டி என்னை ஆட்கொண்டருள்வீர்.