ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – அடங்கல்
பொருள்
- செய்யத் தக்கது
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்களப்பன்என்பிரான்
முத்தியான வித்துளே முளைத்தெழும் தவச்சுடர்
சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
அத்தனாடல் கண்டபின் அடங்கலாடல் காணுமே
சிவவாக்கியர்
கருத்து உரை
எல்லா திசைகளிலும் இருந்து, எல்லா உயிர்கள் இடத்திலும் உறைந்து இருந்து எங்களது தந்தையாகவும், முக்தியைத் தரும் தவமாகிய சுடரினுள் வித்தாக இருக்கக் கூடியவனும் ஆகியவன் என்னுடைய இறைவன் ஆவான். சித்தம் தெளிந்து, காலத்தினால் அறுதி செய்ய இயலா வேதமாகிய கோயில் திறந்தப்பின் குரு என்றும், முனிவன் என்றும், உயர்ந்தோன் என்றும், கடவுள் என்றும் கூறப்படும் அவனின் ஆடல் கண்டப்பின் செய்யத்தக்கது என்று நினைவு கொண்டிருப்பது மாறும்.
விளக்க உரை
- புறத்தில் எல்லா இடங்களிலும் நீக்கமற நினைத்திருக்கும் இறைவனை அகத்தில் கண்டப்பின் பிறவியின் பொருட்டு செய்யத்தக்க விஷயங்கள் எது என எளிதில் விளங்கும்.