அமுதமொழி – விசுவாவசு – கார்த்திகை – 17 (2025)


பாடல்

அஞ்செழுத்தாய் வேதமாய் ஆகமமாய் நின்றமலை
விஞ்செழுத்தாய் ஒன்றாய் விளங்குமலை - நெஞ்சகத்தே
வைத்தமலை நாயேனைத் தன்அடியார் கூட்டத்தில்
வைத்தமலை அண்ணாமலை

அண்ணாமலைவெண்பா – குருநமசிவாயர்

கருத்து – அண்ணாமலையின் சிறப்புகளை உரைக்கும் பாடல்.

பதவுரை

உரைக்கவும், உணர்ந்து ஒதுவற்கு உரித்தான ஐந்து எழுத்தாகவும், வேத வடிவமாகவும், அதனோடு தொடர்பு உடைய ஆகமங்களாகவும் நின்ற மலை; பரந்து விரிந்த ஞானம் கொண்டு இருந்தாலும் அதன் நுட்பத்தில் ஒன்றாக விளங்கும் மலை; மனதில் நினைவு அகலாமல் வைத்த மலை; தாழ்ச்சி உடைய நாயைப் போன்ற என்னை தன்னுடைய அடியார் கூட்டத்தில் வைத்த மலை; இவ்வாறான பெருமைகள் உடையது அண்ணாமலை.

 விளக்கஉரை

  • விஞ்செழுத்து ‍ – பரந்து விரிந்த ஞானம்

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #அண்ணாமலைவெண்பா # குருநமசிவாயர்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

error: Content is protected !!