ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – தலைப்படுதல்
பொருள்
- ஒன்றுகூடுதல்
- எதிர்ப்படுதல்
- மேற்கொள்ளுதல்
- பெறுதல்
- முன்னேறுதல்
- தலைமையாதல்
- புகுதல்
- வழிப்படுதல்
- தொடங்குதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்
தம்மில் தலைப்படுதல் தாமுணரில் – தம்மில்
நிலைப்படுவர் ஓரிருவர் நீக்கிநிலை யாக்கித்
தலைப்படுவர் தாமத் தலை.
திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார்
கருத்து உரை
அம்மையாகிய சத்தியும் அப்பராகிய சிவனும் பிரபஞ்சத்துக்குக் காரணம் என்று அறிக; அம்மையப்பராகிய சிவன் அந்தச் சத்தி வழியாக வந்து மோட்சத்தைக் கொடுப்பார்; அவர் தானே தலைமை ஏற்று அப்பரிசே வந்தளிப்பர்; அவர் எல்லா உலகிற்கும் அப்புறத்தார். சிவன் அத்துவா எனப்படும் ஆறு வழியில் பொதுவியல் படி கலந்திருப்பினும் தன்னியல்பால் அப்பாற்பட்டவர்; இப்புறத்தும் அல்லார்போல் நின்றாலும் அவர் இப்படிக் கலந்திருப்பினும் கலவாதாரைப் போன்று சுட்டிக் காணப்படார் ஆவார்.
விளக்க உரை
அத்துவா – ஆறு வழிகள்
- மந்திராத்துவா – மந்திர வடிவமான மோட்சகதி
- பதாத்துவா – சொல் வடிவமான மோட்சகதி
- வர்ணாத்துவா – அக்கரங்கள் வடிவிலுள்ள மோட்சகதி
- புவனாத்துவா – மோட்சகதி
- தத்துவாத்துவா – முப்பத்தாறு தத்துவங்களாகிய மோட்சகதி
- கலாத்துவா – பஞ்சகலைகளாகிய மோட்சகதி