ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – நம்பான்
பொருள்
- ஆணிற்சிறந்தோன்
- கடவுள்
- சிவன்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
நின்றுநினைந் திருந்துகிடந் தெழுந்துதொழும்
தொழும்பனேன்
ஒன்றிஒரு கால்நினையா திருந்தாலும்
இருக்கவொட்டாய்
கன்றுபிரி கற்றாப்போல் கதறுவித்தி
வரவுநில்லாய்
நன்றிதுவோ திருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே
ஒன்பதாம் திருமுறை – திருவிசைபா – திருப்பல்லாண்டு
கருத்து உரை
தில்லையில் நடம்பயிலும் சிவனே! நின்ற இடத்தும், அமர்ந்த இடத்தும், கிடந்த இடத்தும் நினைந்து, எழுந்த இடத்தில் தொழுகின்ற அடியவனாகிய நான், மனம் பொருந்தி ஒரு நேரத்தில் உன்னை விருப்புற்று நினைக்காமல் இருந்தாலும் நீ அவ்வாறு இருக்கவிடாமல் கன்றைப் பிரிந்த தாய்ப்பசுவைப் போலக் கதறச் செய்கின்றாயே ஒழிய நீ என் எதிரில் வந்து நிற்கவில்லை. இவ்வாறு நீ செய்யும் இச்செயல் உனக்கு ஏற்புடைய நல்ல செயல் ஆகுமா?
விளக்க உரை
- கன்றும், தாய்ப்பசுவும் என்றும் பிரியாது. ஆகவே நீ அவ்வாறு பிரியாது நிற்பாய் எனும் பொருள் பற்றி.