பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் முன்வைத்து – நெருப்பு
மனிதர்களால் விலக்கப்பட்டு
தனித்த பாதையொன்றில் தென் திசை
நோக்கிப் பயணிக்கிறேன்.
தடம் பதிக்கும் அடிமுன்னே
அனைத்து திசைகளும் பற்றி எரிகின்றன.
விழிநீரும் வெப்பத்தில் உலர்கின்றது..
எதிர்கொண்டு அழைக்கிறது அஞ்சன சுடரொன்று.
‘யார் நீ ‘ என்கிறேன்.
அறு நெருப்பை தோற்றுவித்தவள்,
நெருப்பாகி, நெருப்பால் அறுப்பவளும் நானே
என்கிறது அச்சுடர்
பயணச் சுமைகளால் கீழே விழ
எத்தனிக்கிறேன்.
நிலமென தாங்கிப் பிடித்து
மடியினில் இருத்துகின்றது அச்சுடர்.
பின்னொரு பொழுதுகளில்
பொன் நிறமாய் மாறுகின்றது அச்சுடர்
அப்போது
புற உலகங்கள் மட்டும்
எரிந்து கொண்டு இருக்கின்றன.
வீரம் வெளிப்பட்ட அட்ட வீரட்டானத் தலங்களில் மூன்றாவது தலம். சிவனார் திரிபுர தகனம் செய்தருளிய தலம்
16 பட்டைகளுடன் கூடிய சுயம்பு லிங்கம். இவருக்குப் பின்னால் கருவறைச் சுவற்றில் பார்வதி, சிவன் கல்யாணத் திருக்கோலம் காட்சி
திருஞானசம்பந்தருக்கு சிவனார் திருநடனக்காட்சி காட்டிய தலம்
திருநாவுக்கரசரின் தமக்கையாரான திலகவதியார் சிவத்தொண்டு செய்த தலம்
சூலை நோய் நீங்கப்பெற்று ‘திருநாவுக்கரசர்’ என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் தேவாரப்பாடல் பாட ஆரம்பித்த தலம்
இத்தலத்தை மிதிக்க அஞ்சிய சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில்(தற்போதைய பெயர் – சித்தாண்டிமடம், சித்தாத்த மடம், கோடாலம்பாக்கம் ) தங்கி, திருவடி தீட்சை பெற்ற தலம்.
சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான ‘உண்மை விளக்கம்’ நூலை அருளிய மனவாசகங்கடந்தார் அவதரித்த தலம்
உள் சுற்றின் தென்மேற்கே பல்லவர் காலத்தைச் சார்ந்த பஞ்சமுக லிங்கம். மூன்று திக்குகளை நோக்கி நான்கு முகங்கள் உள்ளன. ஒரு முகம் (அதோ முகம்) மேல் நோக்கியது.
வீரட்டேஸ்வரர் வீரட்டநாதர் , அதிகைநாதர், ஸ்ரீ சம்ஹார மூர்த்தி, திருக்கெடிலவாணர்
இறைவி
திரிபுரசுந்தரி
தல விருட்சம்
சரக்கொன்றை
தீர்த்தம்
கெடிலநதி, சக்கரதீர்த்தம்
விழாக்கள்
வைகாசி விசாகம் – 10 நாள்கள் பிரம்மோற்சவம், சித்திரைச்சதயம் – 10 நாள்கள் அப்பர் திருவிழா, பங்குனி-சித்திரை மாதங்களில் நாள் வசந்தோற்சவம்,ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள் ,மாணிக்கவாசகர் உற்சவம் , மார்கழி திருவாதிரை , மகா சிவராத்திரி , கார்த்திகை சோமவார சங்காபிஷேகங்கள் , பங்குனி உத்திரம் , திலகவதியார் குருபூஜை
மாவட்டம்
கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரைஅருள்மிகு அதிகை வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
திருவதிகை
பண்ருட்டி அஞ்சல்
கடலூர் மாவட்டம்
PIN – 607106
அதிகைப்பெருமானே! நோய்கள் விடுத்து நீங்காத இம்மனித உடலைப் பெற்றேன்,செயற்படாதொழியாத துன்பம் நல்கும் நல்வினை தீவினையாகிய சுற்றத் தொடர்பை நெருக்கமாகக் கொண்டு, அவற்றை அடியோடு நீக்குவதற்குத் தேவையான தூய்மையும் மன உறுதியும் இல்லாதேனாய், அத்தூய்மை துணிவு என்பன வற்றை நல்கும் உன்னுடைய தூய மலர் போன்ற திருவடிகளைக் காணும் வகையில் உன்னை அறியமாட்டாதவனாய் உள்ளேன்.
உலகில் தம் தலைவனை உருவம் அறியாதவர் உளரோ? இல்லை. அப்படியிருக்க நீலகண்டனாகிய அப்பெருமான் தனது திருவடியை என் தலைமேல் வைத்து, சடைமேல் பிறையை உடையவனும், விடை ஏறுபவனும், யானைத் தோலைப் போர்ப்பவனும் கரிந்த காட்டில் ஆடுபவனும் எம் தலைவனும் ஆகிய, கெடில நதியின் வடகரையிலுள்ள திருவீரட்டானத்தில் விரும்பியிருக்கின்ற பெருமானை, அவன் அதனைச் செய்வதையும் யான் அறியாமல் இகழ்வேன் ஆயினேன் போலும். என்னே என் அறியாமை ! இனி அவ்வாறு நேராது போலும்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
பிரபஞ்சத்தின் நீட்சியில்
காலபரிமாணம் அற்று
வான்முட்டி கூட்டமாக பறந்தன
சில பறவைகள்.
அறியாத பொழுதொன்றில்
மரித்து தரை சேர்ந்தது
பறவை உடல் ஒன்று.
கத்தின, கூக்குரலிட்டன, கரைந்தன.
உருவம் அழிவதாய் ஒலித்தன
உயிர் கொண்ட பறவைகளின் குரல்கள்.
பின்னொரு பொழுதுகளில்
விரும்பி வானம் கொண்டன.
சலனப்பட்டு இருந்தது காற்று
சலனம் அற்று இருந்தது வானம்.
அகத்திய மாமுனியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம்(லிங்கம் அகத்தியர் அமைத்த கைத்தடத்துடன்). (அகத்தியர் தாங்கமுடியாத வயிற்று வலியால் அவதிப்பட்டு தனது வேதனையை எம்பெருமானிடம் சொல்லியபடியே கடற்கரை மணலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முயற்சித்து, அமைக்க முடியாமல் பின் மூலிகைச் செடிகளைப் பறித்து வந்து சாறு எடுத்து அதை மணலோடு சேர்த்து உதிராத சிவலிங்கத்தை உருவாக்கி அதற்குப் பூஜைகள் செய்து வழிபட்ட ஈசன்)
மூலவர் சதுர ஆவுடையார். சற்று நீட்டுவாக்கில் அமைந்த சுற்றளவு குறைந்த பாணம்
ஈசனும் பார்வதியும் ஒன்றாக இருப்பதால் சிவனுக்கு, மஞ்சளும் குங்குமமும் வைத்து வழிபாடு
திரிபுவன சக்கரவர்த்தியின் மனைவி தியாகவல்லி திருப்பணி செய்த தலம்
ஒரு காலத்தில் மணல் மேடாக இருந்த இப்பகுதி, ‘மதுரை இராமலிங்க சிவயோகி’ யால் மணலில் புதைந்திருந்த விமான கலசமும் பின் கோயிலும் கண்டறியப்பட்ட தலம்.
ஸ்வர மூர்த்தி – தட்சிணாமூர்த்தி. தட்சிணாமூர்த்தி விக்ரகத்தைத் தட்டினால் சப்த ஸ்வரங்களின் ஓசைகள். வழக்கத்திற்கு மாறாக இடது கையில் நாகம், வலது கையில் அக்னியும் ஏந்தியவாறு திருக்காட்சி.
காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோவில்
திருச்சோபுரம்
தியாகவல்லி அஞ்சல், கடலூர் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN – 608801.
98436-70518 , 94425-85845, 94429-36922
வழிபட்டவர்கள்
அகத்தியர், காகபுஜண்டர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர், சுந்தரர் *
நிர்வாகம்
இருப்பிடம்
கடலூர் – சிதம்பரம் சாலையில் கடலூரில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஆலப்பாக்கம் அடைந்து, அங்கிருந்து திருச்சோபுரம் செல்லும் கிளைச்சாலையில் இருந்து சுமார் 2 கிமீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 195 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 6 வது தலம்.
*சுந்தரரின் ‘திருவிடையாறு’ தலப்பதிகத்தில் – ஊர்த்தொகையில் இத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
சோபுரநாதர்
சத்யதாக்ஷி
புகைப்படம் : தினமலர்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 51
திருமுறை எண் 8
இலங்கையில் நிலைபெற்று வாழும், வாட்போரில் வல்ல அவுணர் தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால் விரலால் நடுங்குமாறு ஊன்றிப் பின் அவன் வேண்ட மகிழ்ந்து அருள்புரிந்தவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! மேரு மலையைக் கொடியதொரு வில்லாகக் கொண்டு வலிமை பொருந்திய அரக்கர் குலங்கள் வாழ்கின்ற திரிபுரங்களாகிய ஊர்களை எரித்து அழித்தற்குக் காரணம் என்னவோ?.
கருத்து
விலங்கல் – மேருமலை.
அரக்கர் – திரிபுராதிகள்.
ஆணவம் கொண்டு தன் தவற்றை உணர்ந்து பின் அவனை மன்னித்தல் என்றவாறு
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 51
திருமுறை எண் 9
மண்ணுலகை அகழ்ந்து உண்ட திருமாலும், இனிய தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், முற்காலத்தே உன்னைத் தொடர்ந்து அடிமுடி காணமாட்டாராய் நின்றொழியத் திருச்சோபுரத்தில் மேவி விளங்கும் இறைவனே! தேவர்கள் விடத்தையுடைய வாசுகி என்னும் பாம்பை மந்தரம் என்னும் பெரிய மலையைச் சுற்றிக் கட்டி, விரிந்த அலைகளையுடைய கடல்நீரைக் கடைந்தபோது, அதனிடை எழுந்த நஞ்சை உண்டு மகிழ்தற்குக் காரணம் என்னையோ?
கருத்து
நாகம் – வாசுகி என்னும் பாம்பு.
மால் வரை – மந்தரமலை.
நஞ்சை உண்டு உகந்த – தேவர்கள் அஞ்சிய நஞ்சைத் தாம் உண்டு அவர்களைக் காத்தும்,
சாவாமைக்கு ஏதுவாகிய அமுதத்தை அவர்களுக்குக் கொடுத்து அளித்தும் மகிழ்ந்த.
இடந்து – தோண்டி
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
Scientists unveil new form of matter: Time crystals
If crystals have an atomic structure that repeats in space, like the carbon lattice of a diamond, why can’t crystals also have a structure that repeats in time? That is, a time crystal
Berkeley Assistant Professor of physics (University of California) describes exactly how to make and measure the properties of such a crystal, and even predicts what the various phases surrounding the time crystal should be akin to the liquid and gas phases of ice.
This is a new phase of matter, period, but it is also really cool because it is one of the first examples of non-equilibrium matter.
The Harvard team, set up its time crystal using densely packed nitrogen vacancy centers in diamonds
Physicists recently suggested making materials that repeat in time.
Source : sciencedaily
(இவைகள்நடக்கலாம்அல்லதுநடக்காமலும்போகலாம்.)
1.
ஒரு அவரைக்காய ஒழுங்கா நறுக்க தெரியல, உன்ன எல்லாம் எப்படித்தான் டைம நறுக்குற வேலைல வச்சி இருக்காங்களோ தெரியல.
2.
மதுபானஅருந்தகம்உள்ளே
டைம நறுக்குறதுன்னா இன்னாபா?
அட்சி, இது கூட தெர்லியா, நாம கட்டிங்க ரெண்டு கிளாஸ்ல கரிட்டா ஊத்தி மிக்ஸ் பண்ரோம்ல, அதுமாதிரி தான் இது.
ஏம்மா, உங்க புரோஜெக்ட் வேல பாக்றது எல்லாம் டைம் கிரிஸல்ஸா இருக்கலாம், அதுக்காக ரவிக்கை தச்சதுல ரெண்டு கைக்கும் வித்யாசம் இருக்கு. அதால ரெண்டு கைக்கும் எடை அளவுல புரொட்டான் மாதிரி 1.6726 x 10-27 kg. வித்யாசம் இருக்குன்ணு சொல்றது ரொம்ப ஓவர்.
5.
கொலை.. கொலை
அப்ரண்டீஸ்
சார், நான் கரட்டா கத்தியால குத்தி இருக்கேனா?
பாஸ்
டேய், இது என்ன டைம் கிரிஸல்ஸா, ஒவ்வொரு குத்தும் கரட்டா குத்த. இதெல்லாம் சிவாஜி படத்திலயே தலிவர் செஞ்சிட்டார். சீக்கரம் வண்டிய எடுடா.
வீட்டில் இருக்கும் கம்யூட்டரில் HD சரியாக வேலை செய்யவில்லை. நண்பர் வந்து புது HD மாற்றிக் கொடுத்தார்.
இதுல எது எது எது வேணும்னு சொன்னீங்கன்னா அதெல்லாம் புது HDல காப்பி செய்துடலாம்.
12 வருடங்களுக்கு மேற்பட்ட விஷயங்கள். எப்படி உடனடியாக தேர்வு செய்ய முடியும். சரி, வரிசையா ஒன்னு ஒன்னா பாத்துக்கிட்டே வாங்க. நீங்க சொல்றதை மட்டும் காப்பி செய்துடுறேன்.
இது இளையராஜா பாடல்கள் …இது வேணும்.
இது நான் கடவுள் மூவி .. இது வேணும்.
யோகி ஃபோல்டர்ல என்ன இருக்குன்னு பாருங்க?
ஏதோ பெபில்ஸ்ன்னு இருக்கு.
என் இனிய பொன் நிலாவே பாடலில் வருவது போல் காலம் சுழல ஆரம்பித்தது.
அப்போது யோகிக்கு பேச்சு வரவில்லை. சில நேரம் ம்,.. ம்ம்.. சந்தோஷப் படும் போது வேகமாக குதிப்பான்.
ஒரு முறை கடைக்கு சென்றிருந்த போது அழுதான். அப்போது DVD பிளேயரில் இருந்து பாடல்கள் ஒலித்தன. உடன் அழுகை நின்றது.
சார், இது என்ன பாடல்?
குழந்தைகளுக்கான பாடல் சார்.
எவ்வளவு சார்?
99ரூ.
நான் இத எடுத்துக்கிறேன் சார்
அன்று முதல் பக்தி பாடலுக்கு பதிலாக இந்தப்பாடல்கள் தான் ஒலிபரப்பாகும் (அப்படித்தான்)
பேச்சு வர ஆரம்பித்தது.
சைகை காட்டியது போய் கம்யூட்டரை அவனே ஆன் செய்து பாடல்களை வைக்கக் கற்றுக் கொண்டான்.
என் இனிய பொன் நிலாவே பாடல் முடிவுக்கு வந்தது.
அட என்னா அங்கிள் நீங்க, அவருகிட்ட போய் கேட்டுகிட்டு இருக்கீங்க. எல்லாத்தையும் காப்பி பண்ணி போட்டுடுங்க. இல்லேன்னா கத்துவார். இவரு கௌதம் ஃப்ரெண்ட் வேற. படத்துக்கு ஒரு டிக்கெட் எடுத்து குடுக்க முடியல. நீங்க என்ன பண்ணுங்கண்னா, மியுசிக் சைட்ல போயி AYM படத்துல வர ‘தள்ளிப்போகாதே’ பாட்டை டவுண்லோட் செய்து குடுங்க. அப்பாவ கேட்காதீங்க.
மரணம் கரைந்திருக்கும் வினாடி தேடி
பயணிக்கிறது வாழ்வு;
மரணித்தல் இயல்பாகும் வரை
வாழ்வு தொடரும்;
பின்னொரு பொழுதுகளில்
ஞானத்தின் வாழ்வு தன்னை ஞானம் கவ்வும்
மறுபடியும் ஞானமே வெல்லும்.
*பாடி காவல் – குற்றம் செய்தவருக்கு அரசன் தரும் தண்டனை
கோடிக் காவனைக் கூறாத நாள் எலாம் பாடி காவலில் பட்டுக் கழியுமே
சில மனிதர்கள் வீடு , மனைவி மற்றும் குழந்தைகளோடும், ஆடை ஆபரணங்களோடும், சிறந்த புத்தியோடும், அதிகாரங்களோடும், அழகு ஆரோக்கியம் போன்றவைகளோடும் மனதிற்கு இனிய போகங்கள் நிரம்பியவர்களாக வியாதி இல்லாமல் சுற்றத்தாருடன் இடையூறு இல்லாமல் தினம் தோறும் மகிழ்ந்திருக்கின்றனரே, அது எந்த கர்மத்தின் பலன்?
சிவன்
முன் ஜென்மத்தில் செல்வம் உள்ளவர்களாக இருந்தும் கல்வியும் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களாகவும், தானத்திலும் கல்வியில் விருப்பம் உள்ளவர்களாகவும், எப்பொழுதும் பிறருக்கு விருப்பமானதை அறிந்து அதை தருபவர்களாகவும், சத்தியத்தையும், பொறுமையையும் விடாதவர்களாகவும், பொருளாசை, பெண்ணாசை இல்லாதவர்களாகவும், சரியானவர்களுக்கு முறையாக தானம் செய்பவர்களாகவும், விரதங்களை செய்பவர்களாகவும் பிறர் துன்பத்தை தன் துன்பம் போல் நினைத்து அதனை விலக்க நினைப்பவர்களாகவும், இனிய ஒழுக்கம் உள்ளவர்களாகவும், தேவர்களை எக்காலத்திலும் பூஜிப்பவர்களாகவும் இருப்பவர்கள் மறு ஜென்மத்தில் அப்புண்ணீயங்களை அனுபவிக்க மேற்கூறியவாறு பிறக்கிறார்கள். அழகு, பொருள், தைரியம், ஆயுள், சுகம் அதிகாரம், தேகபலம் மற்றும் கல்வி அனைத்தும் ஆகிய எல்லா நலங்களும் தானத்தால் உண்டாகும். எல்லாம் தவத்தாலும் தானத்தாலும் உண்டாகும் என்பதை நீ அறிந்து கொள்.
உமை
மனிதர்களில் சிலர் செல்வம் அற்றவர்களாகவும், மிகத் துயரம் உள்ளவர்களாகவும், கொடுப்பதை அனுபவிக்க இயலாதவர்களாகவும், ஆதி ஆத்மிகம், ஆதி பௌதீகம், ஆதிதெய்வீகம் ஆகிய பயம் உள்ளவர்களாகவும், பிணியாலும் பசியாலும் வருந்துபவர்களாகவும், கெட்ட மனைவியால் அவமதிக்கப்படுபவர்களாகவும். எப்பொழுதும் இடையூற்றை அனுபவிப்பர்களாகவும் காணப்படுகின்றனரே அது ஏன்?
சிவன்
மனிதர்களில் சிலர் செல்வம் அற்றவர்களாகவும், மிகத் துயரம் உள்ளவர்களாகவும், கொடுப்பதை அனுபவிக்க இயலாதவர்களாகவும், ஆதிஆத்மிகம் (மற்ற உயிர்களால் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள்), ஆதிபௌதீகம் இயற்கையினால் நான் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் (நீர், நிலம், காற்று, ஆகாயம் தீ), ஆதிதெய்வீகம் (நாம் செய்த வினைகளை இறையின் துணை கொண்டு அதை அனுபவித்தல்) ஆகிய பயம் உள்ளவர்களாகவும், பிணியாலும் பசியாலும் வருந்துபவர்களாகவும், கெட்ட மனைவியால் அவமதிக்கப்படுபவர்களாகவும். எப்பொழுதும் இடையூற்றை அனுபவிப்பர்களாகவும் காணப்படுகின்றனர். தாம் செய்த நல்வினையும் தீவினையும் முறையே சுகம் துக்கம் முதலியவற்றை உண்டாக்குகின்றன.
உமை
பிறவிக் குருடரும், பிறந்தபின் கண் போனவரும் உலகின் காணப்படுகின்றனரே அது ஏன்?
சிவன்
எந்த மனிதர்கள் காமத்தினால் பிறர் வீடுகளில் அலைந்து கொண்டும், பிறர் மனைவிகளை கெட்ட எண்ணங்களுடன் பார்த்துக் கொண்டும், கோபமும் ஆசையும் கொண்டவர்களாக மற்ற மனிதர்களின் கண்களை கெடுத்தும், பொருள்கள் பற்றி நன்கு அறிந்தும் அது மற்றி மாற்றுக் கருத்து உரைப்பவர்களாக இருக்கும் மனிதர்கள் இறந்தபின் யமனால் தண்டிக்கப்பட்டு வெகு காலம் நரகத்தில் இருந்து மானிட ஜென்மத்தை அடையும் போது பிறவிக் குருடர்களாகவும், பிறந்தபின் கண் கெட்டவர்களாகவும் கண் நோய் உடையவர்களாகவும் பிறக்கின்றனர். அதில் சந்தேகமில்லை.
உமை
சில மனிதர்கள் பிறந்தது முதல் மற்றும் சிலர் பிறந்த பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் பல், கழுத்து கன்னம் ஆகியவற்றில் நோயுள்ளவர்களாகவும் முகத்தில் அதிக வியாதி உடையவர்களாகவும் காணப்படுகின்றனரே அது ஏன்?
மானிடர்களில் சிலர் கல்வியும் ஆத்ம ஞானமும் புத்திக் கூர்மையும் பேசும் திறமை ஆகியவை பெற்றிருந்தும் ஒழுங்காக முயற்சி செய்தும் தரித்திர்களாக காணப்படுகின்றனரே அது ஏன்?
சிவன்
எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் கல்வி அறிவு பெற்றிருந்தும் யாருக்கும் ஆதரவு தராமல் இருந்தும், அன்ன தானம் செய்யாமலும் தம் காரியங்களை மட்டும் பெரிதாக எண்ணி அதை பாராட்டிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் மறு ஜென்மங்களில் அறிவும் புத்திக் கூர்மையுடன் இருந்தும் வறியவராகவே இருக்கிறனர். விதையாதது முளையாது
உமை
மிக்க செல்வம் உள்ள மனிதர்களும், உலகின் கல்வி அறிவும்,பகுத்தறிவும், புத்தி கூர்மையும், மன உறுதி இல்லாத வீணர்களாகவே காணப்படுகின்றனர், அது ஏன்?
சிவன்
முன் ஜென்மங்களில் கல்வி அறிவு அற்றவர்களாக இருந்தும், பகுத்தறிவு அற்றவர்களாக இருந்தும், ஏழைகளுக்கு உதவி செய்து தானம் தருமங்களை செய்பவர்கள் அடுத்து வரும் பிறப்புகளில் அதை அப்படியே அனுபவிக்கின்றனர். மனிதன் கற்றவனாக இருந்தாலும், கல்லாதவனாக இருந்தாலும் தானத்தின் பலனை அடைகிறான்.தானமானது கல்வி அறிவு பார்ப்பது இல்லை. எப்படியும் அதன் பலனை தந்து விடும்.
உமை
மனிதர்களில் சிலர் புத்தி கூர்மை உள்ளவர்களாகவும், கேட்டதை மறவாதவர்களாகவும், வார்த்தைகளை தெளிவாக உச்சரிப்பவர்களாகவும் இருக்கின்றனரே அது ஏன்?
சிவன்
ஞானத்திற்காக குருவிற்கு நன்றாக பணிவிடை செய்து அந்த குருவிடம் இருந்து முறைப்படி வித்தைகளை கற்றுக் கொண்டு பிறருக்கும் அம்முறை தவறாமல் அதை கற்பித்தும், தன்னுடைய ஞானத்தினால் கர்வப்படாமல் மனம், வாக்கு ஆகியவற்றால் அடக்கமுள்ளவர்களாகி கலைகள் நிலை பெறும் முயற்சியை செய்து கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் மரணமடைந்து அடுத்துவரும் பிறப்புகளில் புத்தி கூர்மை உள்ளவர்களாகவும், கேட்டதை மறவாதவர்களாகவும், வார்த்தைகளை தெளிவாக உச்சரிப்பவர்களாகவும் இருக்கின்றனர்
உமை
சில மனிதர்கள் பல வகையிலும் முயற்சி செய்தும் கேள்வியும், கல்வியும் புத்தி கூர்மையும் இல்லாதவர்களாக இருக்கின்றனரே, அது ஏன்?
சிவன்
எந்த மனிதர்கள் பூர்வ ஜென்மங்களில் கல்வியினால் கர்வம் கொண்டும், தற்புகழ்ச்சி செய்து கொண்டும், ஞானம் அடைந்ததால் தான் என்ற அகங்காரத்துடன் மதி கெட்டவர்களாகி எப்பொழுது பிறரை விட தனக்கு அதிகம் வித்தை தெரியும் என சொல்லிக் கொண்டும், பிறரை இகழ்ந்தும் அவர்கள் மேல் பொறாமை கொண்டும் அப்படிப்பட்டவர்கள் அநேக ஜன்மங்களுக்குப் பின் மானிட தேகம் எடுக்கும் போது பல வகையிலும் முயற்சி செய்தும் கேள்வியும், கல்வியும் புத்தி கூர்மையும் இல்லாதவர்களாக இருக்கின்றனர்
உமை
சில மனிதர்கள் வீடு , மனைவி மற்றும் குழந்தைகளோடும், ஆடை ஆபரணங்களோடும், சிறந்த புத்தியோடும், அதிகாரங்களோடும், அழகு ஆரோக்கியம் போன்றவைகளோடும் மனதிற்கு இனிய போகங்கள் நிரம்பியவர்களாக வியாதி இல்லாமல் சுற்றத்தாருடன் இடையூறு இல்லாமல் தினம் தோறும் மகிழ்ந்திருக்கின்றனரே, அது எந்த கர்மத்தின் பலன்?
தல வரலாறு(சுருக்கம்) / சிறப்புகள் – திருத்திணை நகர்
சுயம்பு திருமேனி. சற்று கூர்மையான பாணத்துடன் கூடிய சதுர ஆவுடையார்
நடராச மூர்த்தியின் கீழே பீடத்தில் மகாவிஷ்ணு, சங்கை வாயில் வைத்து ஊதுவது போலவும், பிரம்மா பஞ்சமுக வாத்யம் வாசிப்பது போலவும் கூடிய சிறிய மூர்த்தங்கள்
இறைவன் மீது பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் ஒளி ஆராதனை
விவசாய தம்பதியினரான பெரியான் என்னும் பள்ளனும் அவன் மனைவியும் சிவன் மீது அதிக பக்தியுடன் தினமும் ஒரு சிவபக்தருக்கு உணவளித்து விட்டு அதன்பின்பு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இறைவன் பணியாளாக வந்து தோட்டத்தில் உழுது பின் உணவு அருந்தினார். ஒரு நாளில் பயிர்கள் அனைத்தும் வளர தானே காரணம் என உணர்த்தினார். ஒரே நாளில் தினை விளைந்ததால் தினைநகர்
சிவனுக்கு தினமும் தினையமுது உணவு படையல்
வீரசேன மன்னனின் குஷ்டநோய் நீங்கிய தலம்
தட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் முயலகன் இல்லாமல் நான்கு சீடர்களுடன் கூடிய திருக்காட்சி அமைப்பு.
சிவனார் நிலத்தை உழுவதற்கு பயன்படுத்திய ஏர் மற்றும் நீர் இறைத்த கலம் முதலியவை இன்றும் உள்ளன
சண்டிகேஸ்வரர் தனது மனைவியுடன் அருள்பாலிக்கும் தனிச்சந்நிதி
முன்வினைப் பயனால் ஜாம்பு(கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி, சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றாதால் தீர்த்தம் ஜாம்புவ தீர்த்தம்
தலம்
திருத்திணை நகர்
பிற பெயர்கள்
தீர்த்தனகிரி,
இறைவன்
சிவக்கொழுந்தீசர், சிவக்கொழுந்தீஸ்வரர்
இறைவி
ஒப்பிலாநாயகி கருந்தடங்கன்னி,நீலதாம்பிகை
தல விருட்சம்
கொன்றை
தீர்த்தம்
ஜாம்பவ தீர்த்தம்
விழாக்கள்
வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம், மகாசிவராத்திரி , ஐப்பசி அன்னாபிஷேகம் , ஆருத்ரா தரிசனம்
மாவட்டம்
கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோவில்
தீர்த்தனகிரி அஞ்சல்
கடலூர் வட்டம்,கடலூர் மாவட்டம்
PIN – 608801
04142-289861 , 99653-28278 ,99653-28279 ,97864-67593 ,99422-48966 , 94434-34024
வழிபட்டவர்கள்
விஷ்ணு , பிரம்மா , ஜாம்பவான்
பாடியவர்கள்
சுந்தரர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
கடலூரில் இருந்து சுமார் 18 கிமீ தொலைவு
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 5 வது தலம்.
சிவக்கொழுந்தீஸ்வரர்
ஒப்பிலாநாயகி
புகைப்படங்கள் : தினமலர்
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 64
திருமுறை எண் 7
மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை அடையாமல் தவத்தொழிலைச் செய்து பயனில்லாத சொற்களைப் பேசி பின்னுதல் பொருந்திய சடைகளைச்சேர்த்துக் கட்டிக்கொள்ளு தலுடன் எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டாலே மக்கள் பிறவியாகிய கடலை முற்றக் கடந்துவிடுதல் இயலாது; ஆதலின், அந்நிலை நின்னின் வேறாய் நிற்க நீ தேவர் கட்குத் தேவனாய் உள்ள பெருந்தேவனாகிய செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை அணுகச் சென்று இவனே தொன்மையாய முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 64
திருமுறை எண் 8
மனமே, அன்புள்ள சுற்றத்தாரும், மற்றும் துணையாக உள்ளாரும் ஆகிய பலருங் கண்டு, உடல்மேல் விழுந்து அழுது எழும்படி, உயிர் உடலைப் பிரிந்து அப்பாற் போய்விடும்; இது நிச்சயம். இதனை நீ அறிந்துளை என்றால், அறியாமையையுடைய வாழ்வாகிய இம்மாறுபட்ட நெறியை நீங்கி, கரிய பெரிய கண்களை யுடையவளாகிய உமையது பாகத்தை உடையவனும், உயிர்களில் நிறைந்திருப்பவனும், காலனுக்குக் காலனும், எல்லாப் பொருளையும் கடந்துள்ளவனும் ஆகிய செருந்தி (ஒரு வகைப் புல்) மரங்கள் பொன்போலும் மலர்களை மலர்கின்ற திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லையாகிய பெருமானை, விரும்பி , அணுகச் சென்று அடைவாயாக.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
ராமாபுரம் சிக்னலில் இருக்கும் ஒரு போலீஸ்காரர் எனது நண்பர். அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
என்னவோ சார், என்னன்னு தெரியாமாக எங்க பொழப்பு ஓடுது. சார், எனக்கு சுகர், அங்க கூட்டத்த கன்ட்ரோல் பண்ணிகிட்டு இருக்கறப்ப திடீர்ன்னு சுகர் சூட் அப் ஆயிடும். என்ன செய்யிறதுன்னு தெரியாது. மயக்கம் வரும். அப்பத்தான் இங்க வந்து பன்னுல பாதி கடிச்சிட்டு (சொல்லுகையில் குரல் உடைந்திருந்தது – பசி அனுபவித்தவர்கள் கண்களில் அது பற்றி சொல்லும் போது எப்பொழுதும் எழும் பிறர் அறியா கண்ணீர்) மீதிய இங்கயே போட்டு போய்டுவன். பாக்றவன் என்னா சொல்வான்னா ‘ வேலை பாக்ற நேரத்தில திங்கிறான் அப்படீம்பான்’ என்னா செய்றது சார். நம்ம பொழப்பு அப்படி. ஆனா ஒன்னு சார், நம்ம நிலம எதிரிக்கு கூட வரக்கூடாது.
காட்சி – 2
மெஸ் -பொத்தேரி
டேய், டேய் இங்க வாடா (கடைக்கார அம்மா ஒரு ஆட்டோ டிரைவர் பையனை அழைக்கிறார்)
இல்ல வந்து…
டேய், வாடா வந்து 4 இட்லி திண்ட்டு போடா
இல்ல வேண்டாம்.
என் பக்கம் பார்வை திரும்பியது.
சார், இந்த பய நான் பார்த்து வளர்ந்தவன். சாப்பிட காசு இல்லேன்னு திரும்பி போறான். கேட்டா உனக்கு செலவுன்றான், இவனுக்கு நாஸ்டா குடுத்தாவா நான் கொறஞ்சிடப் போறேன்.
காட்சி – 3
பிறந்து ஒரு வாரமே ஆன 2 நாய் குட்டிக்கள் மற்றும் ஒரு ஆடு.
இரு நாய் குட்டிகளும் ஆட்டுக்குட்டியிடம் பால் அருந்த முற்படுகின்றன. ஆடு வேகமாக விலகிச் செல்கிறது.
இடம் : பால் இல்லாமல்அழுத ஞான சம்பந்தருக்கு அம்மை பால் கொடுத்த சீகாழி திருக்குளம் அருகே.
மாகேஸ்வர பூசை – ஒவ்வொரு உயிரிலும் கலந்து இருக்கும் இறைவனுக்கு உணவுபடைத்தல்
உமை : மனிதர்களில் சிலர் அழகு உள்ளவர்களாகவும், லட்சணங்களுடன் கூடிய அவயங்கள் உடையவர்களாகவும், பார்வைக்கு இனியவர்களாகவும் காணப்படுகின்றனர் அது ஏன்?
சிவன் : எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் இனிமையாக பேசுபவர்களாகவும், அசைவ உணவுகளை விடுத்து தர்மத்திற்காக அலங்காரங்களையும் வஸ்திரங்களையும் தானம் செய்து கொண்டும், பூமியை சுத்தப்படுத்திக் கொண்டும் இருக்கிறார்களோ அவர்கள் மறு ஜென்மத்தில் ஆசைபடத்தக்க அழகுள்ளவர்களாக பிறக்கிறார்கள்.
உமை : மனிதர்களில் சிலர் விகார ரூபமுள்ளவர்களாக இருக்கிறார்களே அது ஏன்?
சிவன் : மனிதர்கள் முன் ஜென்மத்தில் அழகிய வடிவம் பெற்றிருந்து அதன் காரணமாக கர்வமும் தான் மேல் எனும் எண்ணமுடையவர்களாகவும், அழகில்லாதவர்களை நகைத்தும், அவர்களை மனம் வருந்தச் செய்தும், மாமிசங்களை விருப்பப்பட்டு உண்டும், பொறாமை அனாச்சாரம் முதலிய நடவடிக்கைகளோடு இருந்தவர்கள் தண்டிக்கப்பட்டு மானிட ஜென்மம் அடையும் போது விகாரமுள்ளவர்களாகி அழகில்லாமல் விகார ரூபமுள்ளவர்களாக பிறக்கிறார்கள்.
உமை : சிலர் அழகும் ஐஸ்வர்யமும் இல்லாமல் இருந்தாலும் மனதை கவரும் தன்மை உடையவர்களாகவும் பெண்களால் விரும்பப்படுபவர்களாகவும் இருப்பது ஏன்?
சிவன் : எவர்கள் முந்தைய ஜென்மங்களில் இனிய சுபாவம் உள்ளவர்களாகவும், தன் மனைவியிடத்தில் திருப்தி உள்ளவர்களாகவும், அவர்களை விட்டு விலகாததன் பொருட்டு மன உறுதி உள்ளவர்களாகவும், மற்றவர்கள் வேண்டியபோது பானம், அன்னம் போன்றவற்றை கொடுப்பவர்களாகவும் சிறந்த நடத்தையோடு இருப்பவர்களாகவும் இருக்கிறார்களோ அவர்கள் மறுஜென்மத்தில் அழகுடையவர்களாக பிறக்கிறார்கள்.
உமை : மனிதர்களில் செல்வம் போன்றவற்றை பெற்றிருந்தும் இன்னாதவர்களாக இருக்கின்றனரே அது ஏன்?
சிவன் : முன் ஜென்மத்தில் எண்ணம், சொல் மற்றும் செயல் ஆகியவற்றால் பிறரை துன்புறுத்தியும், யாரையும் காப்பாற்றாமலும் இருக்கிறார்களோ அவர்கள் செல்வம் போன்றவற்றை பெற்றிருந்தும் இன்னாதவர்களாக இருக்கின்றனர்.
உமை : மானிடர்களில் சிலர் கல்வியும் ஆத்ம ஞானமும் புத்திக் கூர்மையும் பேசும் திறமை ஆகியவை பெற்றிருந்தும் ஒழுங்காக முயற்சி செய்தும் தரித்திர்களாக காணப்படுகின்றனரே அது ஏன்?
அகரமும் சகரமும் அரனுக்குரிய (சிவனுக்குரிய) மந்திரமாகும். சிவனை `ஔ` என்றும், `சௌ` என்றும் கூறிப் பொருந்தும் மந்திரமே `அம்` என்றும், `சம்` என்றும் கூறப்பெறும். இது மறை பொருளாகும்,இதன் பொருளை எவரும் அறியவில்லை. இவை இரண்டுடனும் மகாரமும் சேரும் போது அது சிவசக்தி ரூபமாகிறது. இதுவே ஹம்ச மந்திரம் எனும் அஜபா ஆகும். இவ்வாறாக ஹம் எனும் ஆன்மாவும், சம் எனும் சிவனும் அநாதி நித்ய பொருள்.
·பத்து தச மகா வித்யா தேவிகளின் கோவில்கள் அடங்கிய தொகுதியில் காமாக்கியா பிரதான கோவிலாகும். திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா தேவியரின் கோவில்கள் காமாக்கியா கோவிலினுள் அமைந்துள்ளன. ஏனைய காளி, தாரா, புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி ஏழு தேவியருக்கும் தனித்தனிக் கோவில்களாக காமாக்கியா கோவிலுக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ளன.
·தேவிக்கு தனியே உருவச்சிலை எதுவும் இல்லை. ஆலயத்தில் உள்ள ஒரு குகையில் யோனி முத்திரை பதித்த ஒரு கல்பீடமே அம்பிகையாக வழிபடப்படுகிறது.
·சிவனால் சம்ஹாரம் செய்யப்பட்ட மன்மதன் மீண்டும் தனது ரூபத்தை மீண்டும் பெற்ற இடம்
·வராஹ அவதாரமெடுத்து ஹிரண்யாக்ஷணை ஸம்ஹாரம் செய்து, நீருக்குள் முழுகியிருந்த பூலோகத்தைத் தம்முடைய நெற்றிப் பல் நுனியில் கொத்தி எடுத்துக் கொண்டு வந்தபோது அவருடைய பல் பட்ட இடம்
·நரகாசுர யுத்தம் நடந்த இடம்
·பஞ்ச பாண்டவர்களால் வழிபாடு செய்யப்பட்ட தேவி (ஆயுதங்களை காக்க வழிபாடு செய்யப்பட்டது- விராட பருவம், வெற்றிக்காக பிராத்தனை செய்யப்பட்டது மற்றொருமுறை)
·தொடர்புடைய நூல்கள் – தந்திர சூடாமணி – தந்திர நூல்கள்,காளிகா புராணம்,வேத வியாசரின் தேவி பாகவத புராணம்
இத்திருக்கோயில் பற்றி மேலும் தகவல் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.
இறையால் இறைக்கப்பட்ட
வறுமைகள் பாதை வழி எங்கும்.
இருள் சூழ்ந்திருக்கும்
வாழ்வை விலக்க முற்படுகிறேன்.
யாருமற்ற தருணமொன்றில்
தலை கோதி பின்னலிடுகிறாய்.
தன்முனைப்பு அற்று முத்தமிட்டு
புன்னகை பூக்கிறாய்.
பெரு வாழ்வு கண்டபின்னும்
மீண்டும் ஒரு தலைப் பின்னலுக்காக
காத்திருக்கின்றன பல ஜன்மங்களும்.
*வழக்கு – ஈகை
புகைப்பட உதவி : நந்தன் ஸ்ரீதரன் மற்றும் தேனி ஈஸ்வர்
தனது தாயை மீனப் பெண்ணாக சபித்ததற்காக முருகன் வேதாக நூல்களை கடலில் வீசி எறிந்தார். இதனால் சாபம் பெற்ற முருகன் மதுரையில் தனபதி என்பவரின் மகனாக உருத்திரசர்மர் என்ற பெயரில் ஊமைப்பிள்ளையாக பிறந்து இத்தலம் வந்து வழிபாடு செய்து பேசும் திறன் பெற்றார்.
குமரன் வழிபட்டதால் சிவன் திருநாமம் திருக்குமாரசாமி
வியாக்ரபாதர் வழிபட்ட பஞ்ச புலியூர்களில் (பெரும்பற்றப்புலியூர், திருப்பெரும்புலியூர், ஓமாம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், திரு எருக்கத்தம்புலியூர்) இத்தலமும் ஒன்று
63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட யாழ்ப்பாணருடைய அவதாரத்தலம். திருவுருவம் மதங்க சூளாமணியாருடன்
தேவர்களும், முனிவர்களும் இங்கு வந்து பறவையாகவும், மரங்களாகவும் மாறி ஈசனை வழிபட்டு வந்த போது ஏற்பட்ட வேடர்களின் தொந்தரவால் அவர்கள் வெள்ளெருக்காக மாறி வழிபாடு செய்யும் தலம்
அத்தம் = காடு, எருக்கத்தம் = எருக்கங்காடு. எருக்கஞ் செடிகள் நெருக்கமாக நிறைந்திருந்த காட்டில் எழுந்த ஊர் எருக்கத்தம்புலியூர்
இராஜராஜசோழ மன்னனுக்கு புத்திர பாக்கியத்தையும், அவனுடைய மகன் இராஜேந்தர சோழனுக்கு திருமண வரத்தையும் தந்தருளிய தலம்
மார்ச் மாதம் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும் மூலவர் மீது சூரியஒளி வழிபாடு செய்யும் தலம்
இவ்வூருக்குக் கிழக்கே உள்ள கீழ்க்கோட்டூர் மணியம்பலத்தில் கருவூர்த்தேவரின் திருவிசைப்பா பாடப் பெற்றது.
காலை 6 மணி முதல் 11 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில்
ராஜேந்தரப்பட்டினம் அஞ்சல்
விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN – 608703
04143 – 243533, +91-94440 63806.+91-93606 37784
வழிபட்டவர்கள்
வியாக்ரபாதர், உருத்திரசன்மர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர், அருணகிரி நாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
ஸ்ரீமுஷ்ணம் – விருத்தாசலம் சாலையில் முஷ்ணத்தை அடுத்து அமைந்துள்ளது இத் தலம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 194 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 4 வது தலம்.
திருக்குமாரசுவாமி
வீராமுலையம்மன்
புகைப்படங்கள் : தினமலர்
பாடியவர் திருஞான சம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 89
திருமுறை எண் 8
ஆ ஆ என்று தன்னைக் காப்பாற்றும்படி இராவணன் அலறுமாறு அவனை அடர்த்து, பின் தேவா என அவன் தவறினை உணர்ந்து வேண்ட அருளோடு நிறைந்த செல்வங்கள் பலவற்றை வழங்கியருளிய தலைவனே, எருக்கத்தம்புலியூரில் விளங்கும் சிறப்புமிக்க கோயிலில் எழுந்தருளும் தேவனே என்று போற்ற, நம் அல்லல்கள் தீர்தல் உறுதியாகும்.
பாடியவர் திருஞான சம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 89
திருமுறை எண் 9
வேதங்களை ஓதும் நான்முகனும், நெடுமாலும் காணுதற்கு அரியவனே, மழுவைக் கையில் ஏந்தியவனே, கலை நிறையாத பிறை மதியைச் சூடியவனே, முத்துக்களின் கொத்துப் போன்ற இறையோனே என்று போற்றி, எருக்கத்தம்புலியூரை இடமாகக் கொண்ட நீலகண்டனை அண்ணலை நினைந்தால், வினை கெடும்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை
தொடக்கம் 204 அத்யாயம்.
கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்து ‘உலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும், கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்’ என்றனர்.
‘நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லை, அதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.
எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர், கிருஷ்ணருக்கு அன்பானவர், பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்
அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.
)
உமை :
மூன்று விதமான மனிதர்கள் எப்போதும் காணப்படுகிறார்கள். சிலர் எவ்வித முயற்சியும் இன்றி உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைகின்றனர். சிலர் முயற்சி செய்து பாக்கியங்களை அடைகின்றனர். சிலர் எவ்வித முயற்சி செய்தும் ஒன்றையும் அடையாமல் இருக்கின்றனர். அது ஏன்?
சிவன் :
உலகில் எந்த மனிதர்கள் தானத்தையும் தர்மத்தையும் முக்கியமாக நினைத்து தாமே தேடிப் போய் தானம் முதலியவைகளை வாங்கச் செய்கிறார்களோ அவர்கள் அடுத்து வரும் பிறவிகளில் முயற்சி இல்லாமலே அதன் பலன்களை அனுபவிக்கின்றனர்.
எந்த எந்த காலங்களில் யாசிக்கும் போது தானம் அளிக்கப்பட்டதோ அதன் பலனை அடுத்துவரும் பிறப்பில் சிறிது சிரமப்பட்டு முயற்சிக்குப் பின் அந்த அந்த காலகட்டங்களில் பெறுகின்றனர்.
மனிதர்கள் கெட்ட எண்ணம் கொண்டவர்களாக யாசிப்பவர்களுக்கு எவ்வகையிலும் எந்த ஒன்றையும் கொடாமல் கோபிக்கின்றனரோ அவர்கள் மறு பிறப்பில் எவ்வித முயற்சி செய்தும் ஒன்றையும் அடையாமல் இருக்கின்றனர்.
விதை விதைக்காமல் முளை முளைப்பதில்லை. அது போலவே தான தர்ம பலன்களும். மனிதன் எதை எதைக் கொடுக்கிறானோ அதை அதை மட்டுமே அடைகிறான்.
உமை :
‘சிலர் வயது முதிர்ந்து, தேகங்கள் தளர்ச்சி அடைந்த பின் அனுபவிக்க தகாத காலத்தில் செல்வங்களையும் போக பாக்கியங்களையும் அடைகின்றனர், எது ஏன்?
சிவன் :
சிலர், செல்வம் பெற்றிருந்தும் தர்ம காரியங்களை வெகு நாட்கள் மறந்திருந்து, தனது உயிருக்கு முடிவுக்காலம் வரும்போது பிணியால் துன்பப்படும் போது தானங்களை கொடுக்கவும் தர்மங்களை செய்யவும் தொடங்குகின்றனர். அவர்கள் மறு ஜென்மங்களில் கஷ்டப்படுபவர்களாகப் பிறந்து இளமை கடந்தப்பின் முதுமை அடைந்து முன் பிறவிகளில் செய்த தான தர்ம பலன்களை அனுபவிக்கின்றனர். இவ்வாறாக அவர்களுக்கு செல்வங்களும் போக பாக்கியங்களும்அவரவர்களின் கர்மம் காலம் கடந்து வருகிறது.
உமை :
சிலர் போக பாக்கியம் பெற்றிருந்தும் அவற்றை அனுபவிக்க இயலாதவர்களாக இருக்கிறார்களே அது ஏன்?
சிவன் :
எவர்கள் வியாதியால் பீடிக்கப்பட்டு, பிழைப்பதில் எண்ணம் விட்டப் பிறகு தான தர்மம் செய்ய ஆரம்பிக்கிறார்களோ, அவர்கள் அடுத்துவரும் பிறவிகளில் அதன் பலங்களை அடைந்து நோய்வாய் பட்டவர்களாக அனுபவிக்க இயலாதவர்களாக ஆகின்றனர்
உமை :
மனிதர்களில் சிலர் அழகு உள்ளவர்களாகவும், லட்சணங்களுடன் கூடிய அவயங்கள் உடையவர்களாகவும், பார்வைக்கு இனியவர்களாகவும் காணப்படுகின்றனர் அது ஏன்?
சங்கமத்தீர்த்தம் ( வெள்ளாறும் , மணிமுத்தாறும் கூடும் இடம் ) மற்றும் பிரம்ம , அகத்திய , கார்த்தியாயனர் தீர்த்தங்கள்
விழாக்கள்
மாசி 13 நாள் பிரம்மோற்சவம்
மாவட்டம்
கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோவில்
திருக்கூடலையாற்றூர்
காவலாகுடி அஞ்சல்
காட்டுமன்னார் கோவில் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN – 608702
04144-208704 , 99422-49938
வழிபட்டவர்கள்
பாடியவர்கள்
சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் – திருப்புகழ் 1 பாடல்
நிர்வாகம்
இருப்பிடம்
சேத்தியாதோப்பு – கும்பகோணம் பாதையில், ஸ்ரீ முஷ்ணம் போகும் பாதையில் ‘காவாலகுடி’யை அடைந்து, அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையலாம்.
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 193 வதுத் தலம்
நடு நாட்டுத் தலங்களில் 3 வதுத் தலம்.
நர்த்தனவல்லபேஸ்வரர்
பராசக்தி
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 85
திருமுறை எண் 8
திருப்பாற்கடலினை கடைந்த பொழுது அதில் இருந்து உண்டான எழுந்த நஞ்சினை உண்டவனும், விடையை ஊர்ந்து செல்பவனும், பால்போலும் இனிய மொழியை உடையவளாகிய உமா தேவியோடும் உடனாய கோலமே தனது உருவமாகக் கொண்டு திருக் கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆல்நிழற்பெருமான், இவ் வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாது ஒழிந்தேன் என் அறியாமை!
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
விதியின் வழி அடைந்து
செல்வம் கூடி பெற்று வருகிறது பெரு உடல்.
என் எதிர்ப்பட்டு
காலத்தால் முதுமையாக்கப்பட்ட ஒருவன்
வயிற்றின் பெருந்தீக்காக
பொருள் ஒன்றை யாசிக்கிறான்
மின்னலென வருகிறது கோபச் சொற்கள் என்னில்.
புன்னகைத்து விலகுகிறான்.
வினாடிக்குள் மாறுகிறது எனது
இளமையின் புறத் தோற்றமும்
இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை
தொடக்கம் 204 அத்யாயம்.
கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்து ‘உலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும், கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்’ என்றனர்.
‘நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லை, அதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.
எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர், கிருஷ்ணருக்கு அன்பானவர், பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்
அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.
)
உமை :
மூன்று விதமான மனிதர்கள் எப்போதும் காணப்படுகிறார்கள். எவ்வித முயற்சியும் இன்றி உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைந்து அனுபவிக்கின்றனர், சிலர் முயற்சி செய்து உயர் நிலைகளை அடைகின்றனர். மற்றவர்கள் எந்த முயற்சி செய்தாலும் ஒன்றையும் அடைய இயலாதவராக இருக்கின்றனர், அது ஏன்?
சிவன் :
பிரம்மாவிடத்தில் விருப்பு வெறுப்புகள் இன்மையால் அவர் உலகில் உள்ள மனிதர்களை சரி சமமாகவே படைத்தார். கால வித்யாசத்தினால் மாறு பாடு அடைந்தார்கள். எனவே அவர்கள் பிரம்மாவிடம் சென்று காரணம் அறிய விரும்பினார்கள்.அப்போது பிரம்ம தேவர், ‘என்னை குற்றம் சொல்லாதீர்கள்,உங்கள் கர்மத்தை நினையுங்கள்.உங்கள் நல்லதும், தீயதும் உங்களால் தீர்மானிக்கப்படுகிறது. தானே தன் வினைப்பயன்களை அனுபவிக்கவேண்டும். மற்றொருவர் அனுபவிக்க தகாது’ என்று வாக்குரைத்தார். ஆகவே உமையே முன் ஜன்மங்களில் தர்மம் செய்தவர்கள் அதன் தொடர்ச்சியாக உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைந்து அனுபவிக்கின்றனர். மற்றவர்களின் தூண்டுதலால் தர்மம் செய்பவர்கள் அடுத்துவரும் பிறப்புகளில் முயற்சி செய்து உயர் நிலைகளை அடைகின்றனர். செல்வத்தாலும், பதவிகளாலும் செருக்கு கொண்டு தம்மை மட்டுமே நினைப்பவர்கள் அடுத்துவரும் பிறப்புகளில் எந்த முயற்சி செய்தாலும் ஒன்றையும் அடைய இயலாதவராக இருக்கின்றனர் என்றார்.
உமை :
‘மனிதர்களில் சிலர் மிக்க செல்வம் மற்றும் வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்க இயலாதவர்களாக இருக்கிறார்களே அது ஏன்? என்றாள்
சிவன் :
தர்மம் செய்தால் கூட தன் விருப்பமின்றி சிரத்தை இல்லாமல் செய்பவர்கள் அடுத்துவரும் பிறவிகளில் மிக்க செல்வம் மற்றும் வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்.
உமை :
சில மனிதர்கள் தனம் இல்லாமல் இருந்தாலும் சுகப்படுபவர்களாகவே இருக்கின்றனரே, அது ஏன்? என்றாள்.
சிவன் :
எவர்கள் தர்மத்தில் விருப்பமும் தயையும் உள்ளவர்களாகி பிறர் துன்பத்தை அறிந்து தமது வறுமையிலும் பிறர்க்கு உதவி செய்கிறார்களோ அவர்கள் அடுத்து வரும் பிறப்புகளில்தனம் இல்லாமல் இருந்தாலும் சுகப்படுபவர்களாகவே இருக்கின்றனர்.
உமை :
மூன்று விதமான மனிதர்கள் எப்போதும் காணப்படுகிறார்கள். சிலர் எவ்வித முயற்சியும் இன்றி உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைகின்றனர். சிலர் முயற்சி செய்து பாக்கியங்களை அடைகின்றனர். சிலர் எவ்வித முயற்சி செய்தும் ஒன்றையும் அடையாமல் இருக்கின்றனர். அது ஏன்? என்றாள்.