புகைப்படம் : ராம்
காட்சி – 1
ராமாபுரம் சிக்னலில் இருக்கும் ஒரு போலீஸ்காரர் எனது நண்பர். அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
என்னவோ சார், என்னன்னு தெரியாமாக எங்க பொழப்பு ஓடுது. சார், எனக்கு சுகர், அங்க கூட்டத்த கன்ட்ரோல் பண்ணிகிட்டு இருக்கறப்ப திடீர்ன்னு சுகர் சூட் அப் ஆயிடும். என்ன செய்யிறதுன்னு தெரியாது. மயக்கம் வரும். அப்பத்தான் இங்க வந்து பன்னுல பாதி கடிச்சிட்டு (சொல்லுகையில் குரல் உடைந்திருந்தது – பசி அனுபவித்தவர்கள் கண்களில் அது பற்றி சொல்லும் போது எப்பொழுதும் எழும் பிறர் அறியா கண்ணீர்) மீதிய இங்கயே போட்டு போய்டுவன். பாக்றவன் என்னா சொல்வான்னா ‘ வேலை பாக்ற நேரத்தில திங்கிறான் அப்படீம்பான்’ என்னா செய்றது சார். நம்ம பொழப்பு அப்படி. ஆனா ஒன்னு சார், நம்ம நிலம எதிரிக்கு கூட வரக்கூடாது.
காட்சி – 2
மெஸ் -பொத்தேரி
டேய், டேய் இங்க வாடா (கடைக்கார அம்மா ஒரு ஆட்டோ டிரைவர் பையனை அழைக்கிறார்)
இல்ல வந்து…
டேய், வாடா வந்து 4 இட்லி திண்ட்டு போடா
இல்ல வேண்டாம்.
என் பக்கம் பார்வை திரும்பியது.
சார், இந்த பய நான் பார்த்து வளர்ந்தவன். சாப்பிட காசு இல்லேன்னு திரும்பி போறான். கேட்டா உனக்கு செலவுன்றான், இவனுக்கு நாஸ்டா குடுத்தாவா நான் கொறஞ்சிடப் போறேன்.
காட்சி – 3
பிறந்து ஒரு வாரமே ஆன 2 நாய் குட்டிக்கள் மற்றும் ஒரு ஆடு.
இரு நாய் குட்டிகளும் ஆட்டுக்குட்டியிடம் பால் அருந்த முற்படுகின்றன. ஆடு வேகமாக விலகிச் செல்கிறது.
இடம் : பால் இல்லாமல்அழுத ஞான சம்பந்தருக்கு அம்மை பால் கொடுத்த சீகாழி திருக்குளம் அருகே.
மாகேஸ்வர பூசை – ஒவ்வொரு உயிரிலும் கலந்து இருக்கும் இறைவனுக்கு உணவுபடைத்தல்