மகாரம் – சக்திச் சுடர் – அஜபா மந்திரம்
நூல் திருமந்திரம்
பாடல் எண் : 957
தந்திரம் : 4ம் தந்திரம்
பாடல்
அவ்வொடு சவ்வென்ற தரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிகிலர்
அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிந்தபின்
அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே. திருமந்திரம்–957
பொருள்
அகரமும் சகரமும் அரனுக்குரிய (சிவனுக்குரிய) மந்திரமாகும். சிவனை `ஔ` என்றும், `சௌ` என்றும் கூறிப் பொருந்தும் மந்திரமே `அம்` என்றும், `சம்` என்றும் கூறப்பெறும். இது மறை பொருளாகும்,இதன் பொருளை எவரும் அறியவில்லை. இவை இரண்டுடனும் மகாரமும் சேரும் போது அது சிவசக்தி ரூபமாகிறது. இதுவே ஹம்ச மந்திரம் எனும் அஜபா ஆகும். இவ்வாறாக ஹம் எனும் ஆன்மாவும், சம் எனும் சிவனும் அநாதி நித்ய பொருள்.
சக்தி பீடங்கள் – 2 – காமாக்யா கோவில்

புகைப்படம் : eegarai
எண்
|
குறிப்பு
|
விளக்கம்
|
1
|
தலம்
|
காமாக்யா கோவில்
|
2
|
தலம் பிற பெயர்கள்
|
காமரூபம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம், காமாக்யா தேவி கோவில், மஹிசமர்த்தினி கோவில், துர்கா மந்திர், நானி மந்திர், கரவிப்பூர் தேவி மந்திர்
|
3
|
தேவியின் பெயர்
|
காமாக்யா கோவில்
|
4
|
தேவியின் பிற பெயர்கள்
|
திரிபுர பைரவி, அமிர்தா, காமா, காமதா, மங்கள கௌரி, காமரூபிணி, யோனிமண்டல வாஸினி, மஹாகாளி, மஹாமாயா, காமரூபா தேவி, காமேஸ்வரி, நீல பார்வதி
|
5
|
உடல் பகுதி
|
யோனி
|
6
|
பீடம்
|
காமகிரிப் பீடம்
|
7
|
பைரவர்
|
உமாநந்தர்
|
8
|
இருப்பிடம்
|
நீலாச்சல் குன்று, குவகாத்தி நகர்,அசாம் மாநிலம்
|
9
|
வழித்தடம்
|
கவுஹாத்தி நகர மையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள நீலாச்சல் மலை உச்சியில் இந்த கோயில் உள்ளது.
|
10
|
வடிவம்
|
|
11
|
விழாக்கள்
|
அம்புபச்சி மேளா,துர்க்கா பூஜா,மானஷா பூஜா
|
12
|
இதரக் குறிப்புகள்
|
புராணத் தொடர்பு
· பத்து தச மகா வித்யா தேவிகளின் கோவில்கள் அடங்கிய தொகுதியில் காமாக்கியா பிரதான கோவிலாகும். திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா தேவியரின் கோவில்கள் காமாக்கியா கோவிலினுள் அமைந்துள்ளன. ஏனைய காளி, தாரா, புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி ஏழு தேவியருக்கும் தனித்தனிக் கோவில்களாக காமாக்கியா கோவிலுக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ளன.
· தேவிக்கு தனியே உருவச்சிலை எதுவும் இல்லை. ஆலயத்தில் உள்ள ஒரு குகையில் யோனி முத்திரை பதித்த ஒரு கல்பீடமே அம்பிகையாக வழிபடப்படுகிறது.
· சிவனால் சம்ஹாரம் செய்யப்பட்ட மன்மதன் மீண்டும் தனது ரூபத்தை மீண்டும் பெற்ற இடம்
· வராஹ அவதாரமெடுத்து ஹிரண்யாக்ஷணை ஸம்ஹாரம் செய்து, நீருக்குள் முழுகியிருந்த பூலோகத்தைத் தம்முடைய நெற்றிப் பல் நுனியில் கொத்தி எடுத்துக் கொண்டு வந்தபோது அவருடைய பல் பட்ட இடம்
· நரகாசுர யுத்தம் நடந்த இடம்
· பஞ்ச பாண்டவர்களால் வழிபாடு செய்யப்பட்ட தேவி (ஆயுதங்களை காக்க வழிபாடு செய்யப்பட்டது- விராட பருவம், வெற்றிக்காக பிராத்தனை செய்யப்பட்டது மற்றொருமுறை)
· தொடர்புடைய நூல்கள் – தந்திர சூடாமணி – தந்திர நூல்கள்,காளிகா புராணம்,வேத வியாசரின் தேவி பாகவத புராணம்
இத்திருக்கோயில் பற்றி மேலும் தகவல் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.