பாந்தள்பூ ணாரம் பரிகலங் கபாலம் பட்டவர்த் தனம்எரு தன்பர் வார்ந்தகண் ணருவி மஞ்சன சாலை மலைமகள் மகிழ்பெருந் தேவி சாந்தமும் திருநீ றருமறை கீதம் சடைமுடி சாட்டியக் குடியார் ஏந்தெழில் இதயங் கோயில் மா ளிகைஏழ் இருக்கையுள் இருந்தஈ சனுக்கே.
9ம் திருமுறை – திருவிசைபா – கருவூர்த் தேவர் – திருச்சாட்டியக்குடி
கருத்துஉரை
சாட்டியக்குடி, அடியாருடைய அன்பின் மிக்க எழுச்சியை உடைய இதயமே ஈசன் கோயில். அக்கோயிலில் அமைந்த எழுநிலை விமானத்தை உடைய கருவறையில் இருக்கும் பெருமானுக்குப் பாம்புகளே அணியும் மாலைகள். உண்ணும் பாத்திரம் மண்டையோடு. அவர் செலுத்தும் எருதே பெருமையை உடைய யானை வாகனம். அடியார்களின் இடையறாது ஒழுகும் கண்ணீரை உடைய கண்களே அவர் குளிக்கும் இடம். பார்வதியே அவர் மகிழ்கின்ற பெரிய தேவி. திருநீறே அவர் அணியும் சந்தனம். அவர்பாடும் பாடல் சிறந்த வேதங்களே. சடையே அவர் கிரீடம்.
விளக்க உரை
பரிகலம் – உண்கலம்.
கபாலம் – பிரமனது தலைஓடு.
பட்டவர்த்தனம் – அரச விருது; பெருமையுடைத்தாகிய யானையையே பட்டவர்த்தனமாகக் கொள்ளுதல் உலக இயல்பு.
அரசர்களால் தண்டிக்கப்பட்ட மனிதர்களுக்கு அவர்களின் பாவம் போகுமா? போகாதா, அதை விளக்க வேண்டும்.
சிவன்
அரசர்களால் தண்டிக்கப்பட்டவர்கள் எமனால் தண்டிக்கப்படுவதில்லை. தவறாக தண்டிக்கப்பட்டாலும், சரியான தண்டனை செய்யப்படா விட்டாலும் அவர்களை எமன் தண்டித்தே விடுவான். அவர்களின் செய்கைகள் அனைத்தும் அவனுக்குத் தெரியும். கருமம் செய்த மனிதன் எவரும் எமனிடம் இருந்து தப்ப முடியாது. எமனாலும் அரசனாலும் தண்டிக்கப்பட்டவன் தண்டிக்கப்படாவிட்டாலும் அவன் வினை முழுவதையும் அனுபவிப்பான். செய் கர்மத்தின் வினைப்பயன்களை அறுத்தவர்கள் எந்த உலகிலும் இல்லை.
உமை
பூமியில் மனிதர்கள் நித்திய பாவத்தை செய்து அதை தொலைப்பதற்காக பிராயசித்தமும் செய்கின்றனர். அஸ்வமேத யாகம் போன்ற யாகங்களை செய்தும் மற்றும் இன்ன பிற உபாயங்களாலும் பிராயச்சித்தம் செய்கின்றனர். இதை எனக்கு விளக்குங்கள்.
சிவன்
நல்லவர்களும் கெட்டவர்களும் வேண்டும் என்றே நினைத்தும், தவறுதலாகவும் இரு வகையான பாவங்களைச் செய்கின்றனர். பலன் கருதியும், வைராக்கியங்களுடனும் செய்யப்படும் கர்மங்கள் எந்த வகையிலும் அழிவதே இல்லை. தெரிந்து செய்த கர்மம் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்வதாலும் நூற்றுக்கணக்கான பிராயச்சித்தங்களாலும் அழிவதில்லை, தவறுதலாகவும் தற்செயலாகவும் செய்யப்பட்ட பாவங்கள் அஸ்வமேத யாகம் மற்றும் பிராயச் சித்தங்களால் அழியும். உலக நன்மைக்காகவும் பிராயச்சித்தம் முதலியவை விதிக்கப்படுகின்றன. இதை நீ அறிந்து கொள்.
உமை
இவ்வுலகில் மனிதர்களும் மற்ற பிராணிகளும் காரணத்தோடும் காரணம் இன்றியும் மரணிக்கின்றனர். இது எந்த கர்மத்தின் பலன்?
சிவன்
பூர்வ ஜென்மத்தில் மனிதர்கள் எவ்விதம் கொன்றார்களோ அதன் பலனை இப்பிறவியில் அனுபவிக்கின்றனர், விஷம் கொடுத்தவர் விஷத்தாலும், ஆயுதத்தால் அடித்து கொன்றவர் ஆயுதங்களாலும் , வேறு எந்த வகையிலும் மற்றவர்களை கொல்லுகின்றனரோ அவ்வகையில் இப்பிறவியில் தம் உயிர் சேதத்தை அடைகின்றனர். இதில் சந்தேகமில்லை. உலகில் இதுதான் விதிபற்றிய சத்தியம் என்று அறிந்துகொள்வாயாக. தன்வினையை அனுபவிக்காமல் இருப்பதற்கு தேவர், அசுரம் மற்றும் மனிதர் எவரும் விதிவிலக்கல்ல. உலகமானது ஆதிகாலம் தொடங்கி கர்மத்தில் கோர்க்கப்பட்டிருக்கிறது. என்னால் சொல்லப்படா கர்மங்களை உன் புத்தியால் ஊகித்து அறிந்து கொள்வாயாக.
உமை
உங்களது கருணையினால் நன்மை தீமை கர்மங்கள் மாலைபோல் தொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதையும், பசுவின் மடிதேடி கன்று செல்வதைப்போலவும், பள்ளத்தை நோக்கி நீர் பாய்வதைப் போலவும் கர்மங்கள் பற்றிச் செல்கின்றன என அறிந்து கொண்டேன். இவ்வாறான புண்ணிய பாப கர்ம வினைப் பயன்களை அவர்கள் இந்த ஜென்மாவில் அனுபவிக்கின்றனரா அல்லது மறுமையிலா?
சிவன்
போன ஜென்மத்தின் பலன்களை இந்த பிறவியிலும் இந்த ஜென்மத்தின் பலன்களை அடுத்து வரும் பிறவியிலும் அனுபவிக்கின்றனர். இது மானிடர்களுக்கு மட்டும் பொருந்தும். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மரணமின்மை என்பதாலும், தவத்தாலும் அந்த அந்த பிறவியிலேயே கர்மங்களின் பலன் ஒரே சரீரத்தில் அனுபவிக்கப்படும்.
உமை
மனிதர்கள், உலகின் நன்மை தீமைகள் அனைத்தும் நவகிரகங்களால் செய்யப்பட்டவை என்று நினைத்து அந்த கிரகங்களையும், நட்சத்திரங்களையும் பூசை செய்கின்றனர். இதில் எனக்கு சந்தேகம் உள்ளது. இதை தீர்க்க கடவீர்!
அளி புண் அகத்து, புறம் தோல் மூடி, அடியேன் உடை யாக்கை, புளியம்பழம் ஒத்து இருந்தேன்; இருந்தும், விடையாய்! பொடி ஆடீ! எளிவந்து, என்னை ஆண்டுகொண்ட என் ஆர் அமுதே! ஓ! `அளியேன்’ என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
திருவாசகம் – 8ம் திருமுறை – மாணிக்க வாசகர்
கருத்து உரை
தலைவனே இடப வாகனனே, திருவெண்ணீறு அணிவோனே, புறத்தில் தோலால் மூடப்பெற்று புளியம்பழத்தைப் போல என்னுடைய உடம்பு உள்ளே காயம் உடையதாக இருக்கிறது. அவ்வாறு இருக்கும் அதன்கண் பற்றுக்கொண்டு இருந்தேன் அவ்வாறு இருந்தும் எளிமையாய் வந்து என்னை ஆட்கொண்டு அருளினாய். எனது அருமையான அமுதமே எனது ஓலம் கண்டு இனி நீ ‘இவன் இரங்கத்தக்கவன்’ என்று சொல்லி அழைக்க நான் விரும்பினேன்.
விளக்கம்
‘எனது தகுதியின்மை தெரிந்தும் முன்பே வந்து ஆட்கொண்டது போலவே இனியும் என்னை உன்பால் அழைத்துக்கொள்ள வேண்டும்’
இதனால், சிறியோரையும் இரங்கி ஆட்கொள்பவன் இறைவன் என்பது பொருள்
துளைக்கை வேழத்து உரி உடல் போர்த்தவர்; வளைக்கை யாளை ஓர்பாகம் மகிழ்வு எய்தி திளைக்கும் திங்கள் சடையின்திசைமுழுது அளக்கும் சிந்தையர் போலும்-ஆரூரரே.
தேவாரம் – 5 ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
திருவாரூர்ப் பெருமான், துதிக்கை உடைய யானையின் தோலை உரித்தப் ஆடையாக அணிந்து கொண்டவர். வளையணிந்த கைகளை உடைய உமையம்மையை ஒருபாகமாக மகிழ்ந்து ஏற்றுக் கொண்டவர். அவர் தமது பிறை பொருந்திய சடையினால், எட்டுத் திசைகளையும் அளந்தறியும் சிந்தை உடையவர் போலும்.
காஞ்சியில் உறையும் கச்சி ஏகம்பனே! மனித உடம்பாகிய இந்த துர்நாற்றமடிக்கும் உடலை, ஆபாசம் நிறைந்த தொழுவம் போன்ற உடலை, சதை பொதிந்த கந்தலான உடம்பை, தினமும் சோறு இடும் தோலாலான பையாகிய இந்த உடம்பை, என்றாவது ஒருநாள் அழிந்து போகும் நிலையில்லாத பாத்திரமாகிய காற்று சூழ்ந்த இந்த உடம்பை நான் இதுவரை நிலை என்று நம்பி அதன் மேல் அன்பு கொண்டு அதைக் காப்பதிலேயே என் காலத்தைக் கழித்துவிட்டேனே.
புகைப்படம் : திரைப்பட இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன்
காட்சி – 1 நானும் எனது நண்பனும் சதீஷ்ம் ரூமில் தனித்து இருந்தோம் மாப்ள தண்ணி அடிக்கிறத பத்தி நீ என்ன நினைக்கிற ? நான் : தண்ணி அடிக்கிறது நல்லதா கெட்டதா ? நான் : சாமி இருக்கா? இல்லையா ? நான் : இருந்தா இந்நேரத்துக்கு வந்து இருக்கணும் இல்ல. நான் : மடக் மடக் . கையால் வாயில் வழிந்த பியரை துடைத்துக் கொண்டான். சாமி எங்கடா இருக்கு? மனதுக்குள் : உனக்கு சாமி காமிச்சு குடுக்கும்டி, அப்ப தெரியம் .
காட்சி – 2 கொஞ்ச நாள் கழித்து எங்கடா ஆளக் காணும்? முனைவர் பட்டம் வாங்கி இருக்கேண்டா . சூப்பர்டா , என்ன தலைப்பு ? சித்தர்களும் வாழ்வியலும் அட கம்மனாட்டி
காட்சி – 3 அவனுக்கு கல்யாணம் ஆகி தனியே போய் விட்டான், நான் வேளைச்சேரி வந்து விட்டேன். நான் வீட்டில் தனியாக இருந்தேன். மச்சான் நான் சாகப் போறேண்டா? இருடா, மனதுக்குள் பதட்டம். இல்லடா – வார்த்தைகள் தெளிவாக வந்தன. இருடா, மனதுக்குள் இன்னும் பதட்டம். நான் வரேன், இன்னாடா பிரச்சனை எனக்கும் என் பொண்டாட்டிக்கும் சண்டை இருடா வரேன் நீ வரும் போது நா பொணமாத் தான் இருப்பேன். இருடா வரேன் கம்மனாட்டி மனசுக்கு பாரமா இருக்கறத்தால உனக்கு சொன்னேன் இருடா இணைப்பு துண்டிக்கப் பட்டது
கட்டி இருந்த கைலி கூட மாற்ற நேரம் இல்லை. இறைவா காப்பாற்று. என்ன சோதனை! வண்டியை வேகமா ஓட்டி திருவல்லிக்கேணி நோக்கி சென்றேன். 5 பேர் கைலி கட்டிக் கொண்டு அங்கு நின்று இருந்தார்கள் . நீங்க? இல்ல, இவன் சாகணும் அப்படின்னு சொன்னான், அதால காப்பாத்த வந்தோம். அவனும் அவன் பொண்டாட்டியும் ஓட்டலுக்கு சாப்பிட போய் இருக்காங்க. உக்காருங்க பிரதர்.
மைப் படிந்த கண்ணாளும் தானும் கச்சி-மயானத்தான், வார்சடையான்” என்னின், அல்லான்; ஒப்பு உடையன் அல்லன்; ஒருவன் அல்லன்; ஓர் ஊரன் அல்லன்; ஓர் உவமன் இ(ல்)லி; அப் படியும் அந் நிறமும் அவ் வண்ண(ம்)மும் அவன் அருளே கண் ஆகக் காணின் அல்லால், “இப் படியன், இந் நிறத்தன், இவ் வண்ணத்தன், இவன் இறைவன்” என்று எழுதிக் காட்ட ஒணாதே.
தேவாரம் – 6ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
இறைவன் மைபூசிய கண்களை உடைய உமையுடன் தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும். நீண்ட சடையினனும் ஆவான்” என்று கூறின் அவன் அவ்வளவே ஆம் தன்மையன் அல்லன். அவன் எப்பொருளையும் தன்பொருட்டு ஏற்க விரும்புதலை உடையான் அல்லன். உலகப் பொருள்களில் ஒருவன் அல்லன்; ஓர் ஊருக்கே மட்டும் உரியவன் அல்லன். யாதொரு பொருளும் தனக்கு உவமையாதல் இல்லாதவன். அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும் அந்த நிறத்தையும் அந்த வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமேயல்லாமல் மற்றைப் பொருள்கள் போலப் பிறரொருவர் இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்டல் இயலாது.
விளக்க உரை
வார்சடை – நீண்டசடை. அல்லான் – அத்தன்மையன் அல்லன்; அதுவே முற்றிலும் அவனுடைய இயல்பு அன்று; அஃது அவனது பொதுவியல்பே என்றபடி
(தனது வைராக்கியத்தினால்) இமையமலைபோன்று அசைவற நின்ற தேவர்கள் அவர்கள் நிலைமைக்கேற்றவாறு ஆறு சமயங்கள் பெற்றனர். அவற்றிற்குரிய சாத்திரங்களாகிய பொருள் நூல்களை ஓதி, அடையக் கூடியதாக அமைந்த நிலையினை அறிந்தோம் என்பர். ஆதிப்பிரானாகிய சிவபெருமானும் பிழைபொறுக்கும் தன்மை உடையவராகி பொறுமையுடன் அவ்வாறு ஒழுகுவாருடன் கலந்து நின்று அருள் செய்வான்.
விளக்க உரை
‘அடையக் கூடியதாக அமைந்த நிலையினை அறிந்தோம்’ என்பது ஆணவ மாயையினை குறிக்கும். இவ்வாறு குற்றம் இருப்பினும் பிழைபொறுக்கும் தன்மை உடையவன் ஈசன்
பத்துக் கொடுத்தும், பதி இருந்து, வாழ்வு இனிதே; *வித்துக்* குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே; பற்பல நாளும் பழுது இன்றிப் பாங்கு உடைய கற்றலின் காழ் இனியது இல்.
இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
கருத்து உரை
துன்புறும் காலங்களில் தனக்கென இருக்கும் வயல் காட்டை கொடுத்தாயினும் உள்ளூரிலிருந்து வாழ்தல் இனிது. விதைக்கென வைத்த தானியத்தை உண்ணாதிருத்தல் இனிது. பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப்போல இனிதான செயல் வேறு ஒன்று இல்லை.
வெறும் பானையை (அடுப்பிலே வைத்து எரித்தால்) மேலே பொங்குமோ; (பொங்காது.) அது போல பூமியிலே (அறஞ்செய்தலினாலே) பாவம் நீங்கும் என்று உணர்ந்து, அக்காலத்திலே அறம் செய்யாதவருக்கு , செய்த அப்பாவம் (வறுமைக்கு வித்தாய்) இருக்கும் ; இப்பொழுது கடவுளை வெறுத்தால், பெரிய திரவியம் பொருந்த வருமோ? (வராது.)
விளக்கம்
வறியவர் அவ்வறுமைக்கு வித்தாகிய தீவினையைச் செய்த தம்மை நோவாது, தெய்வத்தை நோதலிற் பயன் இல்லை
நற் பயனைப் பெறலாமென்று நினைத்துப் போய் கற்பகத்தருவை அடைந்தவர்க்கு, அது எட்டிக்காயைக் கொடுக்குமாயின் அதற்குக் காரணம் அவர் முற்பிறப்பிற் செய்த தீவினையாகும்; வருந்துகின்ற அறியாமை பொருந்திய மனமே, செய்தொழில்கள் (நீ) நினைத்தபடியே ஆகுமோ?
அழகிய உடல்மேல் சாம்பலைப் பூசி அருவருப் பாக்கலும், மகளிர் கொழுவிய குழலை மொட்டையாய் மழித்துக் குரங்கெனத் தோன்றலும், அறியா மழலையர் கையிலுட் காவடி கொடுத்து மலையின் மேல் ஏற்றலும், இவைதாம் வழிபடு முறையோ? இதுகொலோ சமயம்? மடமைகண் டிரங்குமென் நெஞ்சே.
தடங்கண் சித்தர்
கருத்து உரை
அழகிய உடல் மேல் சாம்பலைப் பூசி அருவறுக்கத்தக்க வகையினில் உடலினை ஆக்கிக் கொள்வார்கள்; மகளிருக்கு என தலையுடன் இணைந்து இருக்கும் முடியினை நீக்கி மொட்டையாக மழித்து அவர்களை குரங்கு போன்ற தோற்றத்தை உண்டாக்கியும்; என்ன என்று அறியாத சிறுவர்கள் கையில் காவடி கொடுத்தும் அவர்களை மலை எறச்செய்தும் இவ்வாறான செய்கைகள் உடையது தான் வழிபாட்டு முறையா? இதற்கான நேரமா இது? இவ்வாறான மூடத்தனங்களை கண்டு அவர்களுக்குக்காக இறங்குவாய் என் மட நெஞ்சே!
விளக்கம்
புற வழிபாட்டு முறைகளை நீக்க வலியுறுத்துல் பொருட்டு
தக்காளியின் மரபணுவுடன் பிராய்லர் கோழியின் மரபணுவை சேர்த்து ‘’சதைப்பற்றான’ தக்காளியை உருவாக்குவது மரபணு மாற்றம்.
சிவப்பான தக்காளி வகையுடன் சதைப்பற்றான தக்காளி வகையைச் சேர்த்து சிவப்பான, சதைப்பற்றான தக்காளி இனத்தை உருவாக்குவது கலப்பினம்.
இவை இரண்டுமே செயற்கையாக உருவாக்கப்படுபவை.
சார், நீங்க ஒரு கஸ்டமர் பாக்க போறிங்க, நல்ல பாண்ட், முழு கை சட்டை போட்டுக்கோங்கோ, ஷு முக்கியம். எதுல போறிங்க, வண்டில தானே போயிட்டு வாங்க . உங்க அப்பாயிண்ட்மெண்ட் டைம் மதியம் 2.15 மணி.
மரபணு மாற்றம் சூழலுக்கு எவ்வாறு முரணானது என்பதன் உதாரணமே இது
உதாரணமாக தென்னையை எடுத்துக் கொள்வோம் . சில பத்தாண்டுகளுக்கு முன் தென்னை காய்க்க 10 வருடத்திற்கு மேல் எடுத்துக் கொண்டது .அடுத்த தலைமுறை தென்னை குட்டை ஆக 5 வருடங்களில் காய்த்தது. இப்போது உள்ள தென்னை மரங்கள் 1 வருடங்களில் காய்க்க துவங்கி விடுகின்றன
கருவாழகரை (மயிலாடுதுறை) கத்திரிக்காய் சிதம்பரம் கொஸ்து – வேறு என்ன சொல்ல
இப்படிப்பட்ட மண்ணின் ஆதாரங்களை குலைப்பதே மரபணு மாற்றங்களின் அடிப்படை
இவ்வாறான பயிர்கள் விளைச்சல் பெறும்போது அந்த மண் தன் தன்மையை இழந்து அது சார்ந்த உயிர்களையும் அழித்து விடுகிறது.
உதாரணமாக மரபணு மாற்றம் செய்யப்படட நிலங்கள் தோராயமாக 25 ஆண்டுகளுக்கு பின் நீர் ஆதாரங்களை சேமித்து வைக்கவும் அதை பயன்பாடு கொள்ளவும் இயலாத விலை(ளை ) நிலங்களாக மாற்றி விடுகின்றன
மரபணு மாற்றம் கீழ் கண்டவற்றை குறித்து பேசுவது இல்லை
மண்ணின் தன்மைகள் குறுகிய காலங்களுக்கு மாறாமல் பாதுகாக்கப்படும் என்பதற்கான உத்திரவாதம்
மண்ணின் தன்மைகள் நீண்ட காலங்களுக்கு மாறாமல் பாதுகாக்கப்படும் என்பதற்கான உத்திரவாதம்
மண் மலடாகாமல் பாதுகாக்கப்படும் என்பதற்கான உத்திரவாதம்
ஒருவேளை மண் மலடானால் அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் முறைகளும் அதற்கான உத்திரவாதம்
மண் சார்ந்த உயிரியல் சுழற்சியில் அனைத்து உயிர்களும் பாதுகாக்கப்படும் என்பதற்கான உத்திரவாதம்
வாழ்வு ஆதாரங்களான நீர், நிலம் மற்றும் காற்று போன்றவை அதன் தன்மை இழக்காதிருக்கும் நிலை
வெளிப்படை தன்மை நிரூபிக்க படாத வரையில் அனைத்தும் பாதுகாப்பு அற்றதே
அவிழ இருக்கும் அறிவுடன் நின்றவர்க்(கு) அவிழுமிவ் வல்லலென் றுந்தீபற அன்றி அவிழாதென் றுந்தீபற.
திருநெறி 5 – திருவுந்தியார்
கருத்துஉரை
(வினைக்கு உட்பட்டு) பிரபஞ்சத்திலே இருப்பினும் அதிலே பந்தமில்லாமலிருந்து திருவருளுடனே கூடி நிற்கின்றவர்களுக்கு இந்தப் பிரபஞ்சத்திலேயுள்ள துன்பங்களெல்லாம் நீங்கும்.
விளக்க உரை திருவருளுடனே கூடினால் ஒழிய துன்பங்கள் நீங்காது.
பெரிய வாயை உடைய நரிகள் ஊளையிடும் இடத்திற்கு அருகினில் புறங் காட்டில் தீயை ஏந்தி ஆடுதலைச் செய்பவனே, கொன்றை பூவினில் இருந்து தேன் ஒழுகுகின்ற புதிய பூவைச் சூடுகின்ற மலையான் மகள் மணவாளனே, திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, நீ சென்று முரிந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் உன் அடியவர் கவலைகொள்ளாரோ?
நெடுங்காலம் வந்தார் நெறியின்மை கண்டு நடுங்கிப் பெரிதும் நலிவார் பெரியர் அடும்பார் அணிகானற் சேர்ப்ப கெடுமே கொடும்பாடு உடையான் குடி.
பழமொழி நானூறு
கருத்துஉரை
அடும்பின் மென்கொடிகள் நிறைந்து அழகு செய்கின்ற சோலைகள் சூழ்ந்த கடல் நாடனே! நெடுங்காலமாகவே தம்மோடுதொடர்பு கொண்டுவந்தவர்கள், தீயதன்மையிலே இருப்பக் கண்டு, பெரியோர்கள் தம் உள்ளம் நடுக்கமுற்றுப் பெரிதும் வருந்துவார்கள். அவர்கள் வருந்தியதும் கொடுஞ்செயலை உடைய அவனுடைய குடும்பமே அழிந்து போகும்.
விளக்கஉரை
சான்றோர்களின் மனம் வருந்துமாறு செய்வது ஒருவனுடைய குடும்பத்தை வேருடன் அழித்துவிடும் என்பது கருத்து
சந்திரனையும் பெரிய கங்கையும் தன் சிரசில் வைத்திருப்பதால் கங்கை தன் அலைகளால் மோதுமாறு சடை முடியில் தரித்துள்ளான். சாமவேதமாகிய இசையை விரும்புபவன். கபாலம் எனும் மண்டையோட்டை ஏந்திய கையினை உடையவன். பொன்னார் மேனியில், மெல்லிய விரல்களை உடைய பார்வதியின் பாகன். காளையை வாகனமாக உடையவன். மேம்பட்டயோகி ஆனவர். ஐந்தலைப் பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவன். இத்தகைய செயல்களையும் பண்புகளையும் உடைய பெருமான் திருவதிகை வீரட்டானத்தை உகந்தது அருளியிருப்பவன்.
நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே; மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே; ‘அன்று அறிவார் யார்?’ என்று அடைக்கலம் *வெளவாத* நன்றியின், நன்கு இனியது இல்.
இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
கருத்து உரை
ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் மிக இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.
நிழலும் நிஜமும் : திரைப்பட இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன்
யாரும் அறியா கணமொன்றில்
உடல் பிரிந்து உயிர் தனியானது.
காணப்படுபவைகளை காட்சியாக்கி கண்டது.
தன்னிலை அறிந்து தான் மீண்டும் கூடு அடைந்தது.
பெறத் துடிக்கும் ஒன்றை
பெற்றதாய் கொண்டது மனம் ஒன்று.
அடைய முடியா புவனங்கள்
அண்டத்தில் இல்லை
என்று கூறி பெரு நடை ஒன்றை பயின்றான்
பித்தனொருவன்.
கருமை நிறம் கொண்டவனுடன் வந்த
கருமை நிற நாய் ஒன்று
வேகமாக தாவியது அவன் மேல்.
உடலுக்குள் உயிர் ஒடுங்கியது.
‘கூத்தனின் நாடகத்தில் குறை உண்டோ’
எனக் கூறி அவ்விடம் அகன்றான்
கருமை மனிதன்
பிறிதொரு நாளில்
உடலும் உயிரும் தனித்த பொழுதுகளில்
மௌனம் பொருந்தி
காலம் இயல்பு இழந்திருந்தது.
உறங்கும்போதும் உறங்காது இருந்து உள் உணர்வோர் வஞ்சனையின்றி வலம் செய்யும் மறைக்காட்டுறையும் பெருமானே! முனிபன்னியருள் ஒருத்தி ஆகிய இப்பாவையை பிச்சையாகக்கொண்டு வந்த போதும் தங்களது பாத்திரத்தில் இடாது அஞ்சி நிற்பதற்குக் காரணம் தேவரீர் அணிந்துள்ள ஐந்தலை நாகமே, அதனை ஏன் அணிந்தீர்?
விளக்கம்
துயிலின்றி – அறிவு ஓய்தல் இன்றி. உறக்கத்திலும் இறைவனை நினைந்தே இருத்தலின் துயிலின்றி
ஐந்தலைநாகம் – முதல்வன் திருமேனியில் உள்ள ஐந்தலை நாகம் என்பது குண்டலினி எனப்படும் சுத்தமாயை அதன் காரியமாகிய சிவம், சத்தி, சாதாக்கியம், ஈசுவரம், சுத்தவித்தை என்னும் ஐந்து தத்துவங்களும் ஐந்தலை எனப்பட்டன
முதல்வன் இருவகை மாயைக்கும் ஆதாரமாகவும் தலைவனாகவும் உளன் என்பது வேதாகமங்களில் கூறப்படும் உண்மை. அதனை `மாயையைப் பிரகிருதி (முதற்காரணம்) என அறிக, மாயையை உடையவன் மகேசுவரன் என்றறிக