ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – பத்து
வார்த்தை : பத்து
பொருள்
- சோற்றுப் பருக்கை
- வயல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பத்துக் கொடுத்தும், பதி இருந்து, வாழ்வு இனிதே;
*வித்துக்* குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே;
பற்பல நாளும் பழுது இன்றிப் பாங்கு உடைய
கற்றலின் காழ் இனியது இல்.
இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
கருத்து உரை
துன்புறும் காலங்களில் தனக்கென இருக்கும் வயல் காட்டை கொடுத்தாயினும் உள்ளூரிலிருந்து வாழ்தல் இனிது. விதைக்கென வைத்த தானியத்தை உண்ணாதிருத்தல் இனிது. பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப்போல இனிதான செயல் வேறு ஒன்று இல்லை.