புகைப்படம் : திரைப்பட இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன்
காட்சி – 1
நானும் எனது நண்பனும் சதீஷ்ம் ரூமில் தனித்து இருந்தோம்
மாப்ள தண்ணி அடிக்கிறத பத்தி நீ என்ன நினைக்கிற ?
நான் :
தண்ணி அடிக்கிறது நல்லதா கெட்டதா ?
நான் :
சாமி இருக்கா? இல்லையா ?
நான் :
இருந்தா இந்நேரத்துக்கு வந்து இருக்கணும் இல்ல.
நான் :
மடக் மடக் . கையால் வாயில் வழிந்த பியரை துடைத்துக் கொண்டான். சாமி எங்கடா இருக்கு?
மனதுக்குள் : உனக்கு சாமி காமிச்சு குடுக்கும்டி, அப்ப தெரியம் .
காட்சி – 2
கொஞ்ச நாள் கழித்து
எங்கடா ஆளக் காணும்?
முனைவர் பட்டம் வாங்கி இருக்கேண்டா .
சூப்பர்டா , என்ன தலைப்பு ?
சித்தர்களும் வாழ்வியலும்
அட கம்மனாட்டி
காட்சி – 3
அவனுக்கு கல்யாணம் ஆகி தனியே போய் விட்டான், நான் வேளைச்சேரி வந்து விட்டேன். நான் வீட்டில் தனியாக இருந்தேன்.
மச்சான் நான் சாகப் போறேண்டா?
இருடா, மனதுக்குள் பதட்டம்.
இல்லடா – வார்த்தைகள் தெளிவாக வந்தன.
இருடா, மனதுக்குள் இன்னும் பதட்டம்.
நான் வரேன், இன்னாடா பிரச்சனை
எனக்கும் என் பொண்டாட்டிக்கும் சண்டை
இருடா வரேன்
நீ வரும் போது நா பொணமாத் தான் இருப்பேன்.
இருடா வரேன் கம்மனாட்டி
மனசுக்கு பாரமா இருக்கறத்தால உனக்கு சொன்னேன்
இருடா
இணைப்பு துண்டிக்கப் பட்டது
கட்டி இருந்த கைலி கூட மாற்ற நேரம் இல்லை. இறைவா காப்பாற்று. என்ன சோதனை!
வண்டியை வேகமா ஓட்டி திருவல்லிக்கேணி நோக்கி சென்றேன்.
5 பேர் கைலி கட்டிக் கொண்டு அங்கு நின்று இருந்தார்கள் .
நீங்க?
இல்ல, இவன் சாகணும் அப்படின்னு சொன்னான், அதால காப்பாத்த வந்தோம்.
அவனும் அவன் பொண்டாட்டியும் ஓட்டலுக்கு சாப்பிட போய் இருக்காங்க. உக்காருங்க பிரதர்.