ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – துஞ்சுதல்
வார்த்தை : துஞ்சுதல்
பொருள்
- தூங்குதல்
- துயிலுதல்
- சோம்புதல்
- தொழிலின்றிஇருத்தல்
- சோர்தல்
- இறத்தல்
- வலியழிதல்
- குறைதல்
- தொங்குதல்
- தங்குதல்
- நிலைபெறுதல்.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
துஞ்சும் போதுந் துயிலின்றி யேத்துவார்
வஞ்சின் றிவலங் கொண்மறைக் காடரோ
பஞ்சின் மெல்லடிப் பாவை பலிகொணர்ந்
தஞ்சி நிற்பது மைந்தலை நாகமே.
தேவாரம் – 5ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
உறங்கும்போதும் உறங்காது இருந்து உள் உணர்வோர் வஞ்சனையின்றி வலம் செய்யும் மறைக்காட்டுறையும் பெருமானே! முனிபன்னியருள் ஒருத்தி ஆகிய இப்பாவையை பிச்சையாகக்கொண்டு வந்த போதும் தங்களது பாத்திரத்தில் இடாது அஞ்சி நிற்பதற்குக் காரணம் தேவரீர் அணிந்துள்ள ஐந்தலை நாகமே, அதனை ஏன் அணிந்தீர்?
விளக்கம்
- துயிலின்றி – அறிவு ஓய்தல் இன்றி. உறக்கத்திலும் இறைவனை நினைந்தே இருத்தலின் துயிலின்றி
- ஐந்தலைநாகம் – முதல்வன் திருமேனியில் உள்ள ஐந்தலை நாகம் என்பது குண்டலினி எனப்படும் சுத்தமாயை அதன் காரியமாகிய சிவம், சத்தி, சாதாக்கியம், ஈசுவரம், சுத்தவித்தை என்னும் ஐந்து தத்துவங்களும் ஐந்தலை எனப்பட்டன
- முதல்வன் இருவகை மாயைக்கும் ஆதாரமாகவும் தலைவனாகவும் உளன் என்பது வேதாகமங்களில் கூறப்படும் உண்மை. அதனை `மாயையைப் பிரகிருதி (முதற்காரணம்) என அறிக, மாயையை உடையவன் மகேசுவரன் என்றறிக
துக்கடா